மார்க் ஸூக்கர்பெர்கை வெளியேற்றிய பல்கலைக்கழகமே அழைத்து டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது

'அம்மா, நான் உன்னிடம் சொன்னது போலவே, என்னுடைய டிகிரி சான்றிதழை வாங்கிவிட்டேன்' என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். 
மார்க் ஸூக்கர்பெர்கை வெளியேற்றிய பல்கலைக்கழகமே அழைத்து டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது

'அம்மா, நான் உன்னிடம் சொன்னது போலவே, என்னுடைய டிகிரி சான்றிதழை வாங்கிவிட்டேன்' என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். 

அதில், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதற்கான புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக தளங்களுக்கு சொந்தக்காரரான மார்க் ஸூக்கர்பெர்க், கடந்த 2004ம் ஆண்டு ஹாவர்டு பல்கலைக்கழகத்தால் வெளியேற்றப்பட்ட மாணவர். ஆனால், அதன்பிறகு பல சமூக தளங்களுக்கு சொந்தக்காரராகி, உலகின் 5வது பணக்காரரான ஸூக்கர்பெர்க்கை, 13 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பல்கலைக்கழகம் அழைத்து சட்டத் துறைக்கான கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

2002ம் ஆண்டு ஹார்வர்ட் கல்லூரியில் மாணவராக சேர்ந்த ஸூக்கர்பெர்க், 2004ம் ஆண்டு பேஸ்புக் உருவாக்குவது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்ததால், கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது 33 வயதாகும் ஸூக்கர்பெர்க், உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பேஸ்புக்கை உருவாக்கி உலகப் பணக்காரர்களின் பட்டியலிலும் இடம்பிடித்துவிட்டார்.

இந்த நிலையில், தான் படித்த கல்லூரிக்கு மனைவி பிரிஸில்லா சானுடன் வந்த ஸூக்கர்பெர்க், தனது மலரும் நினைவுகளையும், பேஸ்புக் ஆராய்ச்சி குறித்தும் மாணவர்களிடையே உரையாற்றினார். தான் படித்த வகுப்பறைக்கு வந்த ஸூக்கர்பெர்க், 13 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் முதல் முறையாக இங்கே வருகிறேன் என்று உணர்ச்சிவசப்பட்டார்.
 

முன்னதாக, தான் கல்லூரியில் சேரும் போதே, தனது தாய், நான் கல்லூரியில் படித்து முடிக்காமல் பாதியிலேயே வெளியேறிவிடுவேன் என்று 'பெட்' கட்டியதாகவும், எனது இளைய சகோதரி, உனக்கு முன்பே நான் எனது பட்டப்படிப்பை முடிப்பேன் என்று 'பெட்' கட்டியதையும் நினைவு கூர்ந்திருந்தார். நல்ல வேளை, இப்போதாவது நான் அந்த பெட்டை பூர்த்தி செய்து விட்டே என்று பெருமிதத்தோடு கூறுகிறார்.

ஸூக்கர்பெர்க் போலவே, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தால் இடை நிறுத்தம் செய்யப்பட்ட பில் கேட்ஸும் சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய நிகழ்ச்சியும், அப்பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. தற்போது ஸூக்கர்பெர்க் பேச்சு பேஸ்புக்கிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com