இன்று (நவம்பர் 19) சர்வதேச ஆண்கள் தினம்! எப்படி கொண்டாடலாம்?

சர்வதேச பெண்கள் தினமாக மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்த செய்தி.
இன்று (நவம்பர் 19) சர்வதேச ஆண்கள் தினம்! எப்படி கொண்டாடலாம்?

உலகம் முழுவதும் இன்று (நவம்பர் 19) ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. 

சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8-ம் தேதி கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்த செய்தி. ஆண்கள் தினமும் முறையே கொண்டாடப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஆண்களால் எழுப்பப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஐ.நா. சபையில் அங்கீகரிக்கப்பட்ட இந்தக் கொண்டாட்டம்,   மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள டிரினிடாட் டொபாகோ நாட்டில், 1999-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. 

சமுதாயம் சீராக இயங்க ஆண் பெண் இருபாலரின் பங்களிப்பும் தேவை. அவ்வகையில் மேல் ஷாவனிஸம், ஃபெமினிஸம் போன்ற இஸங்களில் ஆண் பெண் வெறுப்பு கால காலமாக இருந்தே வருகிறது. தாய் வழிச் சமூகமாக இருந்த இவ்வுலகம் மெள்ள இயல்பு மாறி, ஆண்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டு மாறிவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஆண்கள் பெண்களை இரண்டாம் பாலினமாகவே கருதி வருகிறார்கள்.

வேலையில், சமூகத்தில், வீட்டில் என எல்லா இடங்களிலும் உரிமை மறுப்பு அடைந்த பெண்கள் தங்களின் சுய முன்னேற்றத்துக்காக பாடுபடுபவர்களாகவே காலம் காலமாக இருந்துவருகிறார்கள். இந்நிலையில் சர்வதேச மகளிர் தினம் போன்ற தினங்கள் கொண்டாடப்படுவதால் உலகப் பெண்களின் சாதனைகள் வெளிச்சத்துக்கு வரும் தினமாக அது இருந்து வருகிறது. பெண்களின் சக்தியை , அதன் மகத்துவத்தை ஆண்கள் உணரத் தொடங்கிவிட்ட நிலையில், ஆண்கள் தினத்தை பெண்கள் வரவேற்கவே செய்கிறார்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பது சற்று மாறி சாதிக்கும் பெண்களின் பக்கபலமாக இருந்து வருகிறார்கள் தன்னலமற்ற ஆண்கள்.

சக்தி இல்லையேல் சிவன் இல்லை, சிவன் இல்லையேல் சக்தி இல்லை என்று ஆண் பெண் சமத்துவத்தை நம்பும் சமூகத்தில் பிறந்த நாமும் சர்வதேச ஆண்கள் தினத்தை வரவேற்போம். இன்றைய தினத்தில் மட்டுமல்லாமல் நம் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் ஆண்களை கெளரவப்படுத்துவோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com