இன்று சர்வதேச கழிவறை தினம்: பிரதமர் மோடி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!

சுகாதாரமான கழிவறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த, ஐ.நாவின் அறிவுறுத்தலின்படி
இன்று சர்வதேச கழிவறை தினம்: பிரதமர் மோடி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ!

சுகாதாரமான கழிவறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்த, ஐ.நாவின் அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ம் தேதி, உலக கழிவறை தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் முக்கிய பிரச்னையாக இருப்பது போதிய நவீன கழிப்பறை வசதியின்மைதான். திறந்த வெளிளையே கழிப்பறையாக பயன்படுத்துவோர் இந்தியாவில்தான் அதிகம் உள்ளனர். தமிழ்த் திரைப்படமான ஜோக்கர், மற்றும் இந்திப் படமான டாய்லெட் ஏக் ப்ரேம் கதா ஆகிய இரண்டு படங்களும் மக்களின் இந்த முக்கியமான பிரச்னையை அலசி கவனம் பெற்றவை. 

உலகளவிலும் கூட கழிப்பிட வசதி இல்லாததால் சுமார் நூறு கோடி மக்கள் திறந்த வெளியைப் பயன்படுத்துவதாக ஒரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது. திறந்த வெளியை கழிப்பறையாக பயன்படுத்துவதன் மூலம் பத்து லட்சம் பாக்டீரியாக்களும், ஒரு கோடி வைரஸ்களும் உற்பத்தியாகிறதாம். மேலும் திறந்த வெளிக் கழிவறைகளால் ஐம்பதுக்கும் மேற்பட்ட கொடிய நோய்கள் பரவும் என்கிறன ஆய்வுகள். இத்தகைய விஷயங்களை கருத்தில் கொண்டு, சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கம்.

கழிப்பறை பிரச்சனைக்குத் தீர்வு காண வழி வகுக்கும் வகையில் 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டதுதான் உலக டாய்லெட் கழகம் என்ற சர்வதேச அமைப்பு. இதன் தலைமை அலுவலகம் சிங்கப்பூரில் உள்ளது. ஜாக் சிம் என்பவரின் முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் உலகின் பல்வேறு நாடுகளின் கழிப்பறை குறித்த விழிப்புணர்வும், நவீன கழிப்பறைகள் கட்டுவதற்கான திட்டங்களும் வகுக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தீம் ஒன்றை உருவாக்கி அதை முன்னெடுத்து இயங்கும் இந்த அமைப்பின் 2017-ம் ஆண்டுக்காக தேர்ந்தெடுத்திருப்பது 'கழிவுநீர்’ (Wastewater) என்பது குறிப்பிடத்தக்கது.

யுனிசெப் எடுத்த சர்வே முடிவுகளின்படி இந்தியாவில்தான் அதிகமான மக்கள் கழிப்பறை வசதியின்றி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்திய கிராமங்களில் மற்றும் புறநகர்ப் பகுதிகளிலுள்ள பெரும்பாலான பெண் குழந்தைகள் படிப்பை நிறுத்தக் காரணம் பள்ளிகள் போதிய கழிப்பறை வசதி இல்லாததுதான். அரசாங்கம் தீவிர நடவடிக்கைகள் எடுப்பதால் மட்டுமே இந்நிலை மாறும்.

உலக சர்வதேச கழிவறை தினத்தையொட்டி பிரதமர் மோடி இன்று கூறியது, ‘இந்தியாவில் கழிப்பறைகள் கட்டுவதற்கு உழைத்து வரும் தனி நபர்களையும் நிறுவனங்களையும் பாராட்டுகிறேன். அவர்களின் உயர்வான பங்களிப்பின் மூலமாகவே ஸ்வச் பாரத் உத்வேகம் அடைந்துள்ளது’ என்று டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இது குறித்த காணொளி பதிவு ஒன்றையும் பிரதமர் மோடி வெளியிட்டு உள்ளார். ஒன்றரை நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில் இந்தியா முழுவதும் ஸ்வச் பாரத் விழிப்புணர்வால் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்த காட்சிகள் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com