உலகின் அதிக எடையுள்ள குழந்தை லூயி மேனுவலின் தற்போதைய நிலை என்ன?

மற்ற குழந்தைகள் போலத் தான் 10 மாதக் குழந்தையான லூயி மேனுவல் கொன்சேல்ஸ் தரையில்
உலகின் அதிக எடையுள்ள குழந்தை லூயி மேனுவலின் தற்போதைய நிலை என்ன?

மற்ற குழந்தைகள் போலத் தான் 10 மாதக் குழந்தையான லூயி மேனுவல் கொன்சேல்ஸ் தரையில் தவழ்கிறான். ஆனால் அவனைப் பார்க்கும் யாரும் அவனை குழந்தை என்றே நினைக்கமாட்டார்கள். காரணம் அவனது எடை 28 கிலோ. உலகின் மிக பருமனான குழந்தை என்று லூயி கருதப்படுகிறான்.

மெக்ஸிகோவில் பிறந்த லூயி மேனுவலின் இத்தகைய அசுர வேக எடை அதிகரிப்பின் காரணத்தை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். கருவில் இருக்கும் போது அவனது தாய் இஸபெல் பண்டோஜா சரியான உணவுகளை உட்கொள்ளவில்லை. அதனால் அவனுடைய ஹார்மோன்கள் சீராக இல்லை என்று கருதப்படுகிறது. இது குறித்து அவனது தாய் இஸபெல் பன்டோஜா, கூறுகையில், 'என்னுடைய குழந்தை பிறக்கும் போது 3.5 கிலோதான் இருந்தான். ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் அவனது எடை அதிகரிக்கத் துவங்கியது. பத்தே மாதங்களில் 28 கிலோவாக அதிகரித்துவிட்டான்! இது எங்களுக்கு அதிர்ச்சி அளித்ததுடன் ஏனென்ற காரணமும் தெரியவில்லை. 

மற்ற குழந்தைகளைப் போல் தாய்ப்பால்தான் என் குழந்தைக்கு தருகிறேன். ஆனால் இந்தளவு எடை எப்படி போடுகிறது என்று குழப்பமாக இருக்கிறது. அவனை தொட்டிலில் போடவும் முடியவில்லை. தூக்கிக் கொண்டு நடக்கவும் சிரமமாக இருக்கிறது.

மருத்துவர்கள் இவனுக்கு ஹார்மோன் பிரச்னைகள் உள்ளன என்று கூறுகிறார்கள். எங்களுக்கு ஒரு மூத்த மகனும் இருக்கிறான். அவன் பெயர் மரியோ. அவனுக்கு மூன்று வயதாகிறது. மற்ற குழந்தைகள் போல சாதாரண எடையில் உள்ளான். 

இளையவன் லூயிக்கு ஏற்பட்டுள்ளது ஒருவகை அரிய மரபணுக் குறைபாடு என்று மருத்துவர்கள் கூறியதும் எங்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. என்னுடைய கணவன் ஜூஸ் கடையில் வேலை செய்கிறார். இதனைக் குணப்படுத்த நிறைய செலவாகுமாம். வாரம் ஒரு முறை ஹார்மோன் ஊசி போட மருத்துவமனைக்கு அவனை அழைத்துக் கொண்டு போக வேண்டும். இந்த ஊசி போட சுமார் 35 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்கிறார்கள். எங்களுடைய வருமானம் இதில் பாதி கூட கிடையாது. எங்களுடைய நிலைமையை நண்பர்களிடம் மற்றும் சமூக வலைத்தளங்களில் கூறி, நிதி திரட்டி வருகிறோம். ஃபேஸ்புக்கிலும் ஒரு பேஜ் தொடங்கியிருக்கிறோம். லூயி மேனுவலின் சிகிச்சைக்காக நிதியுதவி செய்ய விரும்பும் நல்ல உள்ளங்களின் உதவியால் நிச்சயம் அவன் குணம் அடைவான்’என்றார் இஸபெல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com