'பிச்சைக்காரன்' பட பாணியில் எம்.பி.ஏ படித்த பெண்மணி பிச்சை எடுத்தார்!

அவர் பெயர் ஃபர்ஸோனா. வயது ஐம்பது. கடந்த நவம்பர் 11-ம் தேதி ஹைதராபாத்தின்
'பிச்சைக்காரன்' பட பாணியில் எம்.பி.ஏ படித்த பெண்மணி பிச்சை எடுத்தார்!

அவர் பெயர் ஃபர்ஸோனா. வயது ஐம்பது. கடந்த நவம்பர் 11-ம் தேதி ஹைதராபாத்தின் ஒரு வீதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அவர் யார் அவர் என்று பிச்சைக்காரர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஆனந்த் ஆசரமத்துப் போனால் தெரிந்துவிடும். செரப்பள்ளியில் உள்ள திறந்தவெளி சென்ட்ரல் ஜெயிலின் கட்டுப்பாட்டில்தான் அந்த ஆசிரமம் உள்ளது. ஜெயில் சூப்பிரடெண்டன்ட் அர்ஜுன் ராவிடம் ஃபர்ஸோனாவைப் பற்றி விசாரித்த போதுதான் அவர் எம்.பி.ஏ பட்டதாரி என்றும் லண்டனில் ஒரு பெரிய நிறுவனத்தில் அக்கவுண்ட்ஸ் ஆபிஸராக இருந்திருக்கிறார் என்றும் தெரிய வந்தது.

நல்ல படிப்பு, பெரிய பதவி. பிச்சையெடுத்து வாழும் நிலை ஃபர்ஸோனாவுக்கு  எப்படி வந்தது என்று ஆராய்ந்த போது கிடைத்த தகவல் அதிர்ச்சி அளித்தன. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படக் கதையைப் போலவே ஃபர்ஸோனாவின் கதையும் ஒத்திருந்தது. (பிச்சைக்காரன் படமும் உண்மைச் சம்பவம் ஒன்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம்தான்). கடந்த இரண்டு வருடங்களாக பல பிரச்னைகளை ஃபர்ஸோனாவை சூழ்ந்தன. எதிர்பாராதவிதமாக கணவர் இறந்துவிடவே, வேலையைத் தொடரப் பிடிக்காமல் இந்தியாவுக்கு திரும்பினார். அமெரிக்காவில் அவரது மகன் கட்டிடக் கலை நிபுணராக இருக்கிறார். ஆனால் ஹைதராபாத்துச் செல்ல விருப்பப்பட்டு, அனந்த்பாக்கில் இருக்கும் தனது அடுக்குமாடி வீட்டுக்கு குடிபெயர்ந்தார் ஃபர்ஸோனா.

வேலைக்குப் போக முடியாமலும், சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளின் மன அழுத்தத்தையும் துயரையும் தாங்க முடியாமல் ஒருநாள் சாமியார் ஒருவரை சந்தித்துள்ளார் ஃபர்ஸோனா. அந்த சாமியார் இவரிடம் ஒரு பரிகாரம் செய்தால் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும் என்று கூறியதும் அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவரது கெட்ட காலம் ஒழிய வேண்டுமென்றால், தர்காவில் பிச்சை எடுத்து சில காலம் வாழ வேண்டும் என்று சாமியார் கூறினார். வேறு வழியின்றி நம்பிக்கையுடன் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார் ஃபர்ஸோனா. பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்துக்காக காவல் துறையினரோடு சேர்ந்து தன்னார்வ அமைப்பினர் செயல்படும்போது, ஃபர்சோஸோனாவைப் போல சிலரைப் பற்றி தெரிந்து கொண்டார்கள். ஃபர்ஸோனாவின் மகன் ஏற்கனவே ஹைதராபாத்தில் பல இடங்களில் அவரைத் தேடியிருக்கிறார். ஃபர்ஸோனா தனது தாய்தான் என்று வாக்குமூலம் பின்னர் அவருடன் பத்திரமாகத் திருப்பி அனுப்பி வைத்தனர் காவல் துறையினர்.

ஆசிரமத்தில் இருக்கும் காலத்தில் மற்ற பிச்சைக்காரர்கள் ஃபர்ஸோனாவை மேடம் என்றுதான் அழைப்பார்களாம். ஃபர்ஸோனாவுக்கு ஆங்கிலம் தெரியுமாதலால் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவாராம். பிச்சை எடுத்து வாழும் விரதத்தை முடிக்காமலேயே வீடு திரும்பி உள்ளார் ஃபர்ஸோனா.

இதுபோன்ற செய்திகளைக் கேள்விப்படும்போது எரிச்சல் அடையாமல் இருக்க முடியவில்லை. ஃபர்ஸோனா போன்றவர்கள் படித்தும் பகுத்தறிவில்லாமல் எதை நம்பி இப்படி தங்களை பணயம் வைக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒரு தீவிரமான நம்பிக்கை எதை வேண்டுமானாலும் சாத்தியப்படுத்திவிடலாம், அந்த நம்பிக்கையை வீட்டில் வைக்காமல், தன் மீது வைக்காமல் வீதியில் வைத்த காரணம் அவரது அறியாமைதான். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com