வட கொரியாவில் தடைசெய்யப்பட்ட 'அந்த' 16 விஷயங்கள் என்னென்ன?

வட கொரியத் தலைவர்கள் வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து தங்கள் நாட்டைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர்.
வட கொரியாவில் தடைசெய்யப்பட்ட 'அந்த' 16 விஷயங்கள் என்னென்ன?

வட கொரியாவில் தடைசெய்யப்பட்ட விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொண்டால் நம்ம ஊர் பரவாயில்லை என்று ஒவ்வொரு நாட்டினரும் நினைப்பார்கள்! காரணம் அந்தளவு கட்டுப்பாடுகள், கெடுபிடிகள், பழமைவாதம். அந்த நாட்டின் தலைவர்களும் தங்களுடைய மக்களை தமது கலாச்சாரத்திற்கு ஒவ்வாத பல்வேறு அந்நிய விஷயங்களிலிருந்து தற்காத்து வருகின்றனர். அப்படி எதையெல்லாம் தடை செய்துள்ளார்கள் என்ற பட்டியலைப் பார்க்கலாமா? 

1. மேற்கத்திய உடைகள்

வட கொரியாவில் ஜீன்ஸ் உள்ளிட்ட மேற்கத்திய உடைகளை அணிய அதன் அதிபர் கிம் ஜாங்-உன் தடைவிதித்துள்ளார். மாடர்ன் உடைகள் மூலம் மேற்கத்திய கலாச்சாரம் பரவி விடக்கூடாது என்பதே காரணம்.

2. கோகோ கோலா

வட கொரியா மீது திணிக்கப்பட்ட கோகோ கோலா மீதான வர்த்தகத் தடையால், ஒரு பாட்டில் கோக் கிடைப்பது கூட கடினமாக உள்ளது. இருப்பினும், பியோங்யாங்கில் உள்ள சில பெரிய கடைகளில் சீனாவில் தயாரிக்கப்படும் கோக் விற்பனையாகிறது என்று கூறப்படுகிறது.

3. தலைமுடி அலங்காரம்

வட கொரியப் பெண்களுக்கு 18 விதமான ஹேர் கட் மற்றும் ஆண்களுக்கு 15 விதமான ஹேர்ஸ்டைகளை மட்டுமே கிம் ஜாங்-உன் அனுமதித்துள்ளார். ஹேர் கலரிங் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வட கொரியாவில் எந்த ஒரு கடையிலும் தலை முடிச் சாயம் கிடைப்பது அரிது. 

4. சானிடரி நாப்கின்கள்

மாதவிடாய் சமயத்தில் பெண்கள் பழைய முறையில் மறு சுழற்சி செய்யக்கூடிய துணிகளைத் தான் பயன்படுத்த வேண்டும், நவீன ரக சானிடரி நாப்கின்கள் மற்றும் டாம்பன்களை பயன்படுத்தக் கூடாது.

5. ஆணுறை

அனைத்து வகையான குழந்தைப் பிறப்பு கட்டுப்பாடுகள் வட கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளன. வட கொரியர்களுக்கு ஆணுறைகளைப் பரிசாக கொடுத்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள். அந்தளவுக்கு ஆணுறை கிடைப்பது அரிது. 

6. சொத்து

வட கொரிய அரசாங்கம் நிலம் மற்றும் சொத்துரிமைகளை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அங்கு வீடுகள் அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கவும் விற்கவும் கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

எனினும், வட கொரியாவின் மக்கள் இதற்கு சில வழிகளைக் கண்டுபிடிக்கவே, இந்த ஆண்டு அரசு அச்சட்டங்களை தளர்த்தி உள்ளது.

7. டிசைனர் ஷூக்கள்

நீங்கள் வட கொரியாவில் இருக்க நேர்ந்தால், மனோலோ பிளானிக்ஸ் (Manolo Blahniks) என்ற ப்ராண்ட் உங்களுக்கு கிடைக்காது. சீனாவின் எல்லைகளைத் தவிர, இத்தகைய டிசைனர் ஷூக்கள் வேறெங்கும் கிடைக்காது. அவை சீனாவில் தயாரிக்கப்பட்ட உயர் குதிகால் ஷூக்களாகும்.

8. கிறுத்துமஸ் மரங்கள்

வட கொரியா அதிகாரப்பூர்வமாக ஒரு நாத்திக நாடாக இருப்பதால், அனைத்து மத வழிபாட்டு முறைகளும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. அதையும் மீறி நடைபெறும் சில நிகழ்ச்சிகள் அதிகளவில் கண்காணிக்கப்படுகின்றன. எனவே, நீங்கள் கிறிஸ்துமஸ் மரம் அல்லது கிறிஸ்துமஸ் பண்டிகைக்குத் தேவையான அலங்காரப் பொருட்களை வாங்கவோ அல்லது வீட்டில் வைத்திருக்கவோ முடியாது

9. ஸ்டார்பக்ஸ்

வடகொரியாவுக்குப் போனால் ஸ்டார்பக்ஸ் காபி கூடக் கிடைக்காது என்பதை விளக்கும் படம்தான் இடது பக்கத்தில் தரப்பட்டுள்ளது. காரணம் ஸ்டார் பக்ஸ் எனும் காபி கடைகள் இங்கு தடைசெய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு காபி குடிக்க வேண்டும் என்றால் பியாங்யாங்குக்குத் தான் போக வேண்டும். அங்குள்ள பிரபல காபி கடை : ரியொங்வாங் காஃபி ஷாப்

10. கேபிள் டிவி

அந்நாட்டில் 4 அதிகாரபூர்வமான தொலைக்காட்சி சேனல்கள் மட்டுமே உள்ளன. தணிக்கை அதிகளவில் இருப்பதால் அரசாங்கம் வேறு எந்த தொலைக்காட்சியையும் அனுமதிக்காது.

11. மேற்கத்திய பத்திரிகைகள்

வட கொரியாவின் பிரச்சார இயந்திரம் அனைத்து வகையான வெளிநாட்டு ஊடகங்களுக்கும் தடை விதித்துள்ளது. அரசாங்கத்திலும், அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு நிறுவனங்களும், அந்நாட்டு பத்திரிகைகளில் அச்சிடப்பட்டவற்றை கண்காணிக்கும். லைஃப்ஸ்டைல் சம்மந்தப்பட்ட பத்திரிகைகள் அங்கு கிடையாது, வட கொரியாவில் மக்களுக்குப் படிக்கக் கிடைப்பவை கல்வி மற்றும் அது சார்ந்த விஷயங்கள் அல்லது அரதப் பழசான அரசியல் விஷயங்கள் மட்டுமே.

12. வை ஃபை மற்றும் சர்வதேச தொலைபேசி அழைப்புக்கள்

வட கொரியாவில் உள்ள 15 மில்லியன் மக்களில், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வட கொரியர்கள் செல்போன் வைத்திருக்கிறார்கள். எனினும், அவர்களுக்கு சர்வதேச அழைப்புகள் தடை செய்யப்பட்டுள்ளது. 3G பயன்பாட்டிலும் கட்டுப்பாடுகள் உள்ளன. வெளிநாட்டவர்கள் வட கொரியாவுக்கு வந்தால் சர்வதேச அழைப்புகள் செய்ய வேண்டும் என்றால் ப்ரீபெய்ட் சிம் கார்ட் வாங்கித்தான் அழைக்க முடியும்.  

13. இசை கச்சேரி டிக்கெட்

மிகக் குறைந்த வெளிநாட்டவர்களே வட கொரியாவில் இசை கச்சேரிகள் நிகிழ்த்த அனுமதிக்கப்படுகிறார்கள். உங்களுக்குப் பிடித்த இசைக் கலைஞரின் நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுத்துச் செல்வது எல்லாம் இங்கு சாத்தியமற்ற ஒன்று. அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட ஒரே இசைக்குழு லாபிக் என்று அழைக்கப்படும் ஸ்லோவேனியன் இசைக்குழு மட்டுமே. 2015-ல் பியோங்யாங்கில் அவர்கள் ஒரு கச்சேரி நடத்தினர். வெளிநாட்டு இசைக்குழுவினர்களுக்குத் தான் தடையே தவிர மக்கள் உள்ளூரி நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.

14. ஆப்பிள் பிராண்ட் ஐஃபோன்கள்

வட கொரியாவிற்கு நவீன உயர் தொழில்நுட்ப சாதனங்களை விற்பனை செய்யப்படுவதில் கட்டுப்பாடுகள் உள்ளது. அங்கு ஆப்பிள் ஐபாட் வாங்குவது சாத்தியமில்லை. இருப்பினும், வட கொரியா தனது சொந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கியுள்ள டேப்லெட்டை சந்தையில் விற்பனைப்படுத்துகிறது. அது எந்தவொரு மேற்கத்திய தொழில்நுட்பத்திற்கும் சவாலாக இருக்கும் என்ற பெருமை கொள்கிறது.

15. ஸ்போர்ட்ஸ் கார்கள்

வடகொரியாவில் கிட்டத்தட்ட 100 சதவிகிதம் கிடைக்காத மற்றொரு பொருள் ஸ்போர்ட்ஸ் கார்கள். விலை உயர்ந்த ஆடம்பரமான  மாடலில் ஒரு ஸ்போர்ஸ் கார் வாங்கி ஓட்ட வேண்டும் என்பது அந்த மக்களின் கனவாக இருந்தால் அது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஐ.நா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பொருளாதாரத் தடைகளால் ஒரு விலையுயர்ந்த ஸ்போர்ட்ஸ் கார்கள் அங்கு விற்பனை செய்யப்படுவதில்லை.

16. வெளிநாட்டுப் பயணம்

வட கொரியர்கள் விடுமுறைக்கு வெளிநாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவில்லை.

இது மனித உரிமைகள் மீறல், ஆனால் வட கொரிய மக்களுக்கு இது குறித்து எதுவும் தெரியாது. 

வட கொரியத் தலைவர்கள் வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து தங்கள் நாட்டைப் பாதுகாக்க முயற்சிக்கின்றனர். அதற்காகவே பல விஷயங்களுக்குத் தடை விதித்துள்ளார்கள். ஆனால் நாம் வாழும் இந்த உலகம் தொடர்ந்து வளர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் உள்ளாகி வருகிறது. வட கொரியா மட்டும் இதில் பின் தங்கி எத்தனை காலம் இருக்க முடியும் என்பது கேள்விக்குரியது.

இத்தனை கட்டுப்பாடுகளை மீறியும் அங்குள்ள மக்களும் அவர்கள் பின் பற்றும் வாழ்க்கை முறையும் சிறிது சிறிதாக முன்னேற்றப் பாதைக்குத் திரும்புவது ஆறுதல் அளிக்கும் விஷயம். அதற்கு வட கொரியாவின் வடக்கு மற்றும் தெற்கே உள்ள அண்டை நாடுகளே காரணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com