காந்தி ஜெயந்தி அன்று கமல் சொன்னது என்ன?

தீவிரமான அரசியல் விமரிசனத்தில் தற்போது செயல்பட்டு வரும் நடிகர் கமல் ஹாசன்
காந்தி ஜெயந்தி அன்று கமல் சொன்னது என்ன?

தீவிரமான அரசியல் விமரிசனத்தில் தற்போது செயல்பட்டு வரும் நடிகர் கமல் ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் காந்தியடிகளின் வாக்கியத்தை பதிவிட்டு அதைப் பற்றி தன் கருத்தினை பகிர்ந்துள்ளார். இன்றைய காலத்தின் தேவையும் மக்கள் நினைவில் வைக்க வேண்டியதும் காந்திஜீயின் வார்த்தைகள்தான் என்றார். காரணம் அவை நமக்கு அறிவார்ந்த சிந்தனையையும் பலத்தை அளிக்கக்கூடியது என்று பதிவிட்டிருந்தார் கமல்.

இந்த 62 வயதான நடிகர், சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறார், காந்தியடிகளின் 148-வது பிறந்த நாளான இன்று (அக்டோபர் 2) மகாத்மா காந்தியின் மேற்கோள் ஒன்றினை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

'முதலில் அவர்கள் உங்களை புறக்கணிப்பார்கள், அதன் பின் உங்களைப் பார்த்து கேலியாகச் சிரிப்பார்கள், பிறகு அவர்கள் உங்களை எதிர்த்துப் போராடுவார்கள், பிறகு நீங்கள் வெற்றி பெறுவீர்கள்’ - காந்தி ஜி. அவருடைய வார்த்தைகளே இப்பொழுது நமக்கு தேவை. ("First they ignore you then they laugh at you then they fight you and then you win - Gandhi ji. His words impart strength we need now.")

கமல் விரைவில் ஒரு புதிய கட்சியைத் தொடங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படும் நிலையில், தில்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உட்பட சில அரசியல் தலைவர்களை சந்தித்திருக்கிறார் கமல்

சினிமாவைப் பொருத்தவரையில், 1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த படம் - இந்தியன். சுதந்தரப் போராட்டத் தியாகி, லஞ்சத்தை எதிர்த்து மேற்கொள்ளும் நடவடிக்கைகள் படத்தின் மையக்கருவாக அமைந்த இப்படம் வெளிவந்த காலத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தியன் 2 படத்துக்காக ஷங்கர், கமல் ஆகிய இருவரும் மீண்டும் இணைந்துள்ளார்கள். தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளரான தில் ராஜு, இந்தியன் 2 படத்தைத் தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகவுள்ளது. தற்போது இந்த படத்துக்கு லீடர் (Leader) என்று பெயர் வைக்கலாம் என்ற தகவல் வெளி வந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com