பலாத்காரத்துக்கு உலக நாடுகளில் எந்த விதமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன? ஒரு பார்வை

இந்தியாவில் மட்டும் அல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் தினம் தினம் பெண்கள் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
பலாத்காரத்துக்கு உலக நாடுகளில் எந்த விதமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன? ஒரு பார்வை


இந்தியாவில் மட்டும் அல்ல, உலக நாடுகள் பலவற்றிலும் தினம் தினம் பெண்கள் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவை விட, தென்னாப்ரிக்கா, ஐக்கிய நாடுகள், ஸ்வீடன் போன்றவற்றில் பெண்களுக்கு எதிரான பலாத்காரக் குற்றங்கள் அதிகம். பல நாடுகளின் பலாத்காரத்துக்கு எதிராக கடுமையான தண்டனைகள் நிறைவேற்றப்பட்டாலும் குற்றங்கள் குறையவில்லை. மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கின்றன.

தென் அரேபியா மற்றும் வட கொரியா நாடுகளில், பலாத்காரக் குற்றவாளியின் நெற்றியில் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. இதை விட கடுமையான தண்டனைகள் பல நாடுகளில் நிறைவேற்றப்படுகிறது.

அது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

சௌதி அரேபியா


பலாத்காரக் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டால், குற்றவாளியை மெக்கா இருக்கும் திசையை நோக்கி முட்டிப்போட்டு உட்கார வைத்து, கத்தியால் அவன் தலையை வெட்டித் துண்டாக்குவதுதான் தண்டனை. இதனை ஒரு காவல்துறை அதிகாரி மேற்கொள்வார். ஒரே வெட்டில் தலை துண்டாக்கப்படும். இதே தண்டனை, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கும் பொருந்தும்.

ஈரான் 

ஈரானிலும் பலாத்காரத்துக்கு மரணமே தண்டனை. சில சமயங்களில் குற்றவாளியை கல்லால் அடிக்கவும் தண்டனை விதிக்கப்படும். ஒரு வேளை, பாதிக்கப்பட்டவர் இழப்பீட்டுக்கு ஒப்புக் கொள்ளும்பட்சத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனைக்கு பதில் கல்லால் அடிக்கும் தண்டனை நிறைவேற்றப்படும்.

வடகொரியா

ஈரானைப் போல இஸ்லாமிய மதச் சட்டத்தைப் பின்பற்றும்  வடகொரியாவிலும், பலாத்காரத்துக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால், குற்றவாளியின் நெற்றிப் பொட்டில் சுட்டு அல்லது முக்கிய உடல் உறுப்பில் சுட்டு தண்டனை நிறைவேற்றப்படும். தண்டனை வழங்கப்பட்ட உடனேயே, துப்பாக்கி ஏந்திய ஒன்றுக்கும் மேற்பட்ட காவலர்களால் தண்டனை நிறைவேற்றப்படும்.

ஆஃப்கானிஸ்தான்


பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்ட 4 நாட்களுக்குள் காவல்துறையினர், குற்றவாளியின் தலையில் துப்பாக்கியால் சுட்டு தண்டனை நிறைவேற்றப்படும். அல்லது தூக்கில் தொங்கவிடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும். அது தீர்ப்பில் குறிப்பிடுவதைப் பொருத்து அமையும்.

சீனா
இஸ்லாமிய நாடுகளைப் போல அல்லாமல், அதே சமயம் சீனாவிலும் மரண தண்டனையே விதிக்கப்படுகிறது. மிக வித்தியாசமாக, அதாவது, சீனாவில் பலாத்காரக் குற்றவாளியின் முதுகெலும்பு, கழுத்துடன் சேரும் இடத்தில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும்.  முன்னதாக அவரது ஆண் உறுப்பு துண்டிக்கப்படும் தண்டனையும் நிறைவேற்றப்படுகிறது.

பிரான்ஸ்
மேற்கண்ட நாடுகளைப் போல இல்லாமல், பிரான்ஸில் தண்டனை குறைவுதான். பலாத்காரக் குற்றவாளிக்கு வெறும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஒரு வேளை பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்துவிட்டால், 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை. ஒரு வேளை, பலாத்காரத்துக்குப் பிறகு துன்புறுத்தல்கள் ஏதேனும் செய்யப்பட்டிருந்தால் சிறைத் தண்டனைக்கான ஆண்டுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ரஷ்யா

ரஷ்யாவில் பலாத்காரத்துக்கு 3 முதல் 6 ஆண்டுகள்தான் தண்டனையே. பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவருக்கு ஏதேனும் உடல்நிலைப் பிரச்னை ஏற்பட்டிருந்தால், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனையும், ஒரு வேளை இறந்துவிட்டால் 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் வழங்கப்படும். ஒரு வேளை பாதிக்கப்பட்ட நபர் 14 வயதுக்குட்பட்டவராக இருந்து மரணித்திருந்தால், குற்றவாளிக்கு 12 முதல் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இது மட்டும் அல்லாமல், குற்றவாளிக்கு அடுத்த 20 ஆண்டுகளுக்கு எந்த வேலை வழங்கவும் தடை விதிக்கப்படும்.

இந்தியா


இந்தியாவில் பலாத்காரக் குற்றவாளிக்கு சிறைத் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்கப்படும். அதுவும் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்ட பலாத்காரத் தடுப்புச் சட்டத்தில்தான் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க வழிவகை ஏற்படுத்தப்பட்டது. அதுவும், பாதிக்கப்பட்ட நபர், மிகக் கொடூரமாக பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தால் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படும்.

எகிப்து
எகிப்தில் பலாத்காரக் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது.

இஸ்ரேல்
இஸ்ரேலில் 4 முதல் 16 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

அமெரிக்கா
அமெரிக்காவில் பலாத்கார சம்பவத்தைப் பொருத்து சில ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை வழங்கப்படுகிறது.

நெதர்லாந்து
இங்கு சம்மதம் இல்லாத நபருக்கு பறக்கும் முத்தம் கொடுப்பது கூட சட்டப்படி குற்றமாகும். பாதிக்கப்பட்ட நபரின் வயது மற்றும் சம்பவத்தின் தீவிரத்தைப் பொருத்து 4 முதல் 15 ஆண்டுகள் வரை பலாத்காரக் குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்படுகிறது. 

தண்டனைகள் எவ்வளவுதான் கடுமையாக்கப்பட்டாலும், குற்றங்கள் குறைவதில்லை. பெண்களுக்கு எதிராக பாலியல் பலாத்காரக் குற்றங்களையே ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில், குழந்தைகள் மற்றும் சிறுமிகள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரங்களை ஒடுக்கும் வழி தெரியாமல் பல உலக நாடுகள் திணறித்தான் வருகின்றன.

மாறி வரும் சமூகச் சூழலால், சமீபத்தில் சிறுமிகள் பலரும் காமுகர்களின் கண்களுக்கு பயன்படுத்தியபிறகு கசக்கித் தூக்கிப் போடும் காகிதங்களைப் போல காட்சித் தருவது கொடூரத்தின் உச்சம்.

ஒரு சில நிமிட வெறிக்கு, ரத்தமும் சதையும் உணர்வுகளும் கொண்ட பெண்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிப் போகும் நிலைக்கு யார் பொறுப்பேற்பது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com