போலீஸ் இல்லாத ஒரு போலீஸ் ஸ்டேஷனா?

உண்மை தான். உலகிலேயே முதல் முறையாக போலீஸ்காரர் ஒருவர் கூட இல்லாத ஒரு
போலீஸ் இல்லாத ஒரு போலீஸ் ஸ்டேஷனா?

உண்மை தான். உலகிலேயே முதல் முறையாக போலீஸ்காரர் ஒருவர் கூட இல்லாத ஒரு போலீஸ் ஸ்டேஷன் சாத்தியமாகி உள்ளது. துபாயில் செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்தக் காவல் நிலையத்தில் போலீஸார் யாரும் இல்லாமல் முழுக்க முழுக்க இணையதளம் வழியாகச் செயல்படுகிறது. மேலும் இது போன்று ஆறு ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷன்கள் விரைவில் நிறுவப்படும் என்றனர் துபாய் போலீஸார்.

இந்தப் போலீஸ் நிலையத்துக்கு ‘SPS.’ (ஸ்மார்ட்  போலீஸ்  ஸ்டேஷன்) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது இரண்டு போலீஸார் துவக்கப் பணியில் உள்ளனர்.

இந்த ஸ்டேஷனில் குறிப்பிட்ட 60 சேவைகளை மட்டுமே மக்கள் பெற முடியும். கொள்ளை, கொலை, தற்கொலை, காணவில்லை உள்ளிட்ட குற்றம் சார்ந்த புகார்கள் அளிப்பது, போக்குவரத்து அபராதம் செலுத்துவது, விபத்துக்களை பதிவு செய்வது, ஆவணங்களை பெறுவது உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட சேவைகளுக்காக அங்கு வைக்கப்பட்டிருக்கும் டச் ஸ்கீரின் இயந்திரம் மூலமாக மக்களே நேரடியாக பதிவு செய்து கொள்ள முடியும். தற்போது பணியில் உள்ள அந்த இரண்டு போலீஸ்காரர்களும் மக்கள் இந்த சேவையை பயன்படுத்த நன்கு கற்றுக் கொண்ட பின்னர் அங்கிருந்து வேறு நிலையத்துக்கு மாற்றப்படுவார்கள்.

இந்த ஸ்மார்ட் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள பிரதான அறையில் வைக்கப்பட்டிருக்கும் டச் ஸ்கீரீன் உள்ள இயந்திரத்தில், மக்கள் எந்தவிதமான சேவையை பெற வேண்டுமோ அதற்கான டோக்கனை முதலில் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் வெயிட்டிங் ரூமில் காத்திருந்து வீடியோ காட்சிகள் (காணொளி) மூலம் போலீஸ் அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டு தங்களுடைய புகாரை நேரடியாக பதிவு செய்ய முடியும். விரைவில் முழு வீச்சில் செயல்பட உள்ள இந்த போலீஸ் நிலையத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com