உணர்வுகளை முக பாவனைகள் மூலம் வெளிப்படுத்தும் நாய்கள்!

செல்லப் பிராணிகளை வளர்ப்போருக்குத் தான் தெரியும் அதன் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு அர்த்தம் உண்டு
உணர்வுகளை முக பாவனைகள் மூலம் வெளிப்படுத்தும் நாய்கள்!

செல்லப் பிராணிகளை வளர்ப்போருக்குத் தான் தெரியும் அதன் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு அர்த்தம் உண்டு என்பது. நம் வீட்டில் ஒரு அங்கத்தினராக நம்முடன் சாப்பிட்டு, விளையாடி, தூங்கும் ஜீவன்கள் தான் நாய்கள். பொமரேனியனில் தொடங்கி ஜெர்மன் ஷெர்ப்பர்ட் வரை, நாய்கள் பல வகை. ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட குணநலன்கள் உண்டு. 

நாய்கள் தாங்கள் நினைப்பதை எப்படியாவது தங்களை வளர்ப்பவர்களுக்கு சொல்லிவிடும். தங்களின் முக பாவங்களைப் பயன்படுத்தி எண்ணங்களை வெளிப்படுத்துகின்றன என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.

உங்கள் கவனம் நாயின் மீது இருப்பது தெரிந்தால் அவை அடிக்கடி முகத்தை அசைக்கும். அவை உற்சாகத்தில் இருக்கும் போதோ அல்லது உணவுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் போதோ அவை முகத்தை அசைக்காது என்கிறது அந்த ஆய்வு.

மனிதர்களின் உணர்ச்சிகளையும் தனது நுண்ணுணர்வால் நாய்கள் உணர்கின்றன. சமீபத்தில் ஒரு காணொளியில் பார்த்த காட்சியொன்றில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் சிறுவனை அவன் அப்பா காலையில் எழுப்புகிறார். ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை. அவனுடைய நாய் அவன் அப்பாவை கடிக்க முயற்சி செய்கிறது. அவர் அவனை எழுப்ப விடாமல் காக்கிறது. தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்த அவை முகபாவங்களைப் பயன்படுத்துகின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

வாட்ஸ் அப்பில் வந்த இன்னொரு காணொலியில் ஒரு இளம் பெண் காதல் தோல்வியில் மனம் உடைந்து மது அருந்துகிறாள். அவளது செல்ல நாய்க்குட்டி அவளை குடிக்க விடாமல் தடுக்கிறது. தனக்குத் தெரிந்த வகையில் எல்லாம் அவளுக்கு ஆறுதல் சொல்கிறது.  பார்ப்பவரை நெகிழச் செய்யும் அந்த காணொலி அது.

சோகமாக இருக்கும் போது நெற்றியில் சுருக்கங்களுடன், சந்தோஷமாக இருக்கும் போது வாலை ஆட்டியும், முகத்தை ஆட்டியும் வெளிப்படுத்தும். கோபமாக இருக்கும் போது தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டும், உருமிக் கொண்டும் இருக்கும். பயத்தில் இருக்கும் போது தரையில் முகத்தை வைத்துக் கொண்டு உடல் நடுக்கத்துடன் இருக்கும். கண்களை பாதியாகத் திறந்து பார்க்கும். ’என்னடா செல்லம், என்ன வேண்டும்?’ என்று தடவி கொடுத்து ஆறுதல் சொல்லும் போது அரவணைப்பை நாடும். இப்படி நாய் வளர்ப்போருக்கும் நாய்க்குமான பாஷை என்பது பரி பாஷை தான். அது நாம் அன்பானவர்களின் மீது காட்டும் அக்கறை எனும் பாஷை. இதற்கு மொழி கிடையாது. சப்தம் கிடையாது. உள்ளுணர்வும் தூய அன்பும் மட்டுமே இதில் முக்கியமான அம்சங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com