தயவு செய்து வரலாற்றை திருத்தி எழுதுங்கள்! இவர்களுக்குத் தேவை விடுதலை!

கொத்தடிமைப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தி அடைப்பதற்காக அடிமைத்தன சூழ்நிலைகளின்
தயவு செய்து வரலாற்றை திருத்தி எழுதுங்கள்! இவர்களுக்குத் தேவை விடுதலை!

கொத்தடிமைப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தி அடைப்பதற்காக அடிமைத்தன சூழ்நிலைகளின் கீழ் வேலை செய்கிற சிறார்களாவர். அவர்களை அவர்களது முதலாளியுடன் பிணைக்கின்ற இந்த கடனானது இந்த குழந்தைகளால் வாங்கப்பட்டதல்ல;. அவர்களது உறவினர்களால் அல்லது பொதுவாக அவர்களது பெற்றோர்களால் வாங்கப்பட்ட கடனாகவே இது இருக்கிறது. இந்தச் சிறிய கடன்கள் அல்லது முன்பணங்கள் என்பவை சில நூறு ரூபாயிலிருந்து சில ஆயிரம் ரூபாய் வரை, சிறாரின் வயதைச் சார்ந்தும் மற்றும் அந்த சிறார் வேலை செய்கிற தொழிற்பிரிவைச் சார்ந்தும் இருக்கிறது.

நோய்க்கு மருத்துவம் பார்ப்பதற்கான செலவிலிருந்து குழந்தைக்கு திருமணம் செய்ய வரதட்சணை கொடுப்பதற்கான செலவு போன்ற குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பெற்றோர்கள் பொதுவாக இக்கடன்களை வாங்குகின்றனர். இந்த கடன்களை திரும்ப செலுத்துவதற்காக கொத்தடிமைத் தொழிலாளர்களாக, சில நேரங்களில் தொடர்ந்து பல ஆண்டுகளாக, தங்களது குழந்தைகளோடு சேர்ந்து தாங்களும் கொத்தடிமைத் தொழிலாளர்களாக பெற்றோர்கள் வேலை செய்கின்றனர்.

கொத்தடிமைத் தொழில்முறை என்பது ஒரு கடுமையான குற்றம். வன்முறையையும் அச்சுறுத்தலையும் பயன்படுத்துகின்ற கொத்தடிமைத் தொழில்முறை அமைப்பானது, மலிவான செலவில் வேலையாட்களைப் பெறுவதற்காக எளிதில் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடிய நபர்களை தவறுதலாக பயன்படுத்தி சுரண்டுகிறது. வாழ்க்கையில் மிக கஷ்டமான, பிற ஆதரவே கிடைக்காத சூழ்நிலையின் காரணமாக விளிம்பு நிலையிலுள்ள சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட குடும்பங்கள் ரொக்க முன்பணம் தரப்படும் என்ற ஆசை வார்த்தையை நம்பி ஏமாந்து கொத்தடிமையில் சிக்கவைக்கப்படும் இடரில் இருக்கின்றன. நல்ல கூலி, மரியாதையான வேலை மற்றும் வசிப்பதற்கு இட வசதி ஆகிய உறுதிமொழிகளை நம்பி இவர்கள் வாங்கிய முன்பணத்தை திரும்பச் செலுத்துவதற்காக வேறு ஒருவருக்கு வேலை செய்வதற்காக வெகு தூரத்திலுள்ள கிராமங்களிலிருந்து வேறிடத்திற்கு செல்ல ஒப்புக் கொள்கின்றனர். ஆனால், இந்த வாக்குறுதிகள் பொய்யானவை என்பது பிறகுதான் அவர்களுக்கு தெரிய வருகின்றது.

இத்தகைய சூழ்நிலைகளில் வளர்கின்ற குழந்தைகளும், சிறார்களும் பல ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் பல மணி நேரம் வேலை செய்கின்றனர்; இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்திற்கும் மிக மிகக் குறைவாகவே பெரும்பாலும் தரப்படுகிறது அல்லது ஊதியமே தரப்படுவதில்லை. அளவுக்கு மீறிய அநியாயமான வட்டிவிகிதம் வசூலிக்கப்படுவதாலும், மிக மிக குறைவான ஊதியமே தரப்படுவதாலும், அவர்களது கடன் மீது எந்தவித கட்டுப்பாடும் மற்றும் அதை விரைவில் அடைப்பதற்கான வாய்ப்பும் இவர்களுக்கு இருப்பதில்லை. ஒரு கொத்தடிமைத் தொழிலாளர், அவர் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவது, நிஜத்தில் சாத்தியமற்ற ஒன்றாக ஆக்குவதற்கேற்ப இந்த அமைப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளது.

கொத்தடிமைப்பட்ட குழந்தைத்தொழிலாளர்களின் வடிவங்கள்:

கீழ்வரும் 3 முக்கியமான வழிமுறைகளில் குழந்தைகள் கொத்தடிமை முறையில் சிக்க வைக்கப்படுகின்றனர் : கொத்தடிமைப்பட்ட ஒரு குடும்பத்தின் அங்கமாக வேலை செய்வது, ஒரு குடும்ப உறுப்பினரிடமிருந்து கடனை வாரிசுரிமையாக பெறுவது; மற்றும் வாங்கிய கடனுக்கு பதிலாக வேலை செய்வதற்காக தனி நபராக அடமானம் வைக்கப்படுவது.

கொத்தடிமைப்பட்ட ஒரு குடும்பத்தின் அங்கமாக அவர்கள் வேலை செய்கின்றனர் :

ஒரு குடும்பமானது, கொத்தடிமையில் சிக்கும்போது வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதற்காக குடும்பத்தோடு சேர்ந்து குழந்தைகளும் வேலை செய்யுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவர்களது கொத்தடிமை முறையின் தன்மையின் காரணமாக குழந்தையை வேலை செய்யுமாறு முதலாளி வலியுறுத்தும்போது, குடும்ப உறுப்பினர்களால் மறுக்க முடிவதில்லை.

ஒரு குடும்ப உறுப்பினரிடமிருந்து கடனை வாரிசுரிமையாக குழந்தைகள் பெற முடியும் :

பெற்றோர்கள் கடன்களை வாங்கிய பிறகு அந்தப் பணத்தை திரும்ப செலுத்தாமலேயே இறந்து விடும்போது, பெற்றோர் வாங்கிய அக்கடன் குழந்தைகள் தலையில் விழுகின்றன. அந்தக் கடனை அவர்கள் ஏற்று திரும்ப தருமாறு அக்குழந்தைகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

வாங்கிய முன்பணத்திற்கு பதிலாக பல்வேறு துறைகளில் வேலை செய்ய தனி நபர்களாக குழந்தைகளை அடமானம் வைக்கலாம் :

ஒரு அவசியமான செலவை எதிர்கொள்வதற்கு பெற்றோர்களுக்கு கொஞ்சம் பணத்தை வழங்குவதன் மூலம் முதலாளிகள் அல்லது இடைத்தரகர்கள் குழந்தைகளை வேலைக்காக ஆளெடுப்பு செய்வதற்காக அவர்களை தனிப்பட்ட விதத்தில் அடமானம் வைப்பது நிகழ்கிறது. சில நேரங்களில் கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களில் வேலை செய்வதற்காக இத்தகைய குழந்தைகள் சுரண்டலுக்கான மனித வணிகம் செய்யப்படுகின்றன.

தாக்கம்

இத்தகைய குழந்தைகளுக்கு என்ன நிகழ்கிறது மற்றும் அவர்களின் குழந்தைப் பருவத்தை இது எப்படி பாதிக்கிறது?

இளம் வயதில் வேலை செய்வது பல எதிர்மறையான மற்றும் நேரடி விளைவுகளை கொண்டிருக்கிறது. கொத்தடிமையில் அவதிப்படும் குழந்தைத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக அவமானங்களையும், அடி உதைகளையும், வாய்மொழி வசவுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களது கீழ்வரும் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றன; கல்வி பெறுவதற்கான ஆரோக்கியமாக வாழ்வதற்கான அவர்களது வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான உரிமைகள் மீறப்படுகின்றன அல்லது மறுக்கப்படுகின்றன; குழந்தைப்பருவத்தில் குழந்தைகளாகவே இருப்பதற்கான அவர்களது உரிமை முற்றிலுமாக மறுக்கப்படுகிறது.

கல்வி பெறுவதற்கான உரிமை மறுப்பு : கொத்தடிமைத் தொழில்முறையின் ஒரு விளைவாக அநேக குழந்தைகள் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு பணி செய்ய வேண்டி வெளியேற வேண்டியிருக்கிறது. எப்படி வாசிப்பது மற்றும் எழுதுவது என்று அவர்கள் ஒருபோதும் கற்றுக் கொள்ளப் போவதில்லை; உயர்கல்வியை தொடரவோ அல்லது விரும்புகிற தொழிலை, பணியை தேர்வு செய்யவோ அவர்களால் இயலுவதில்லை. கல்வி கற்பதற்கான இந்த வாய்ப்பின்மையானது அவர்களது வாழ்நாளின் எஞ்சிய காலம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை கொண்டிருக்கும்; ஏனெனில், தங்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்கான திறன் அவர்களுக்கு குறைவாகவே இருக்கும் மற்றும் சமுதாயத்தில் பிறரைப் போலவே ஊக்கத்துடன் பங்கேற்பதும் இவர்களுக்கு ஒரு கடினமான செயலாக இருக்கும்.

உடல்நல பிரச்னைகள் : ஆபத்தான மற்றும் ஆரோக்கிய கேடுள்ள பணி சூழ்நிலைகளில் நீண்ட நேரமாக (ஒரு நாளில் 20 மணி நேரம் வரை) கொத்தடிமையில் சிக்கியுள்ள குழந்தைகள் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. மிகக் கடினமான உடல் உழைப்பு அவசியப்படும் நிலைகளில் தோட்டங்களிலும், தொழிற்சாலைகளிலும் இவர்கள் அநேக நேரங்களில் சுரண்டப்படுகின்றனர்; இவர்களது உழைப்பு திருடப்படுகிறது. இதனால், வேறுபல பாதிப்புகளோடு கடம் களைப்பும் தசை சார்ந்த பிரச்னைகளும் மற்றும் பார்வைத்திறன் பாதிப்பும் இவர்களுக்கு ஏற்படுகிறது. ஒரே நிலையில் நீண்ட நேரம் வேலை செய்யுமாறு குழந்தைகள் நிர்ப்பந்திக்கப்படுவதால் கடுமையான முதுகுவலியினால் இவர்கள் அவதிப்படுகின்றனர். இவர்களுக்கு உடல் உறுப்புகளின் வளர்ச்சியிலும் சிக்கல்கள் ஏற்படக்கூடும். இதற்கும் மேலாக போதுமான அளவு முறையான உணவு பொதுவாகவே இவர்களுக்கு மறுக்கப்படுவதால் ஊட்டச்சத்து குறைவு உட்பட பல்வேறு வைட்டமின்கள் குறைபாட்டால் இவர்கள் அவதியுறுகின்றனர். மொத்தத்தில் பார்க்கையில் கொத்தடிமைத் தொழில்முறையில் வைக்கப்பட்டிருப்பது ஒரு குழந்தையின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் பெரிதும் பாதிக்கிறது.

விரும்பிய இடத்திற்கு செல்வதற்கான சுதந்திரம் மறுப்பு : ஒரு குழந்தை கொத்தடிமைத் தொழில்முறையினால் பாதிக்கப்படுபவராக இருக்கையில், விரும்பிய இடத்திற்கு செல்வதற்கான சுதந்திரம் அக்குழந்தையிடமிருந்து பிடுங்கப்படுகிறது; இத்தகைய குழந்தைகளுக்கு அவர்களது குழந்தைப்பருவமே மறுக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் நீண்ட மணிநேரங்கள் வேலை செய்யும் இவர்களுக்கு விளையாடவும் மற்றும் குழந்தைகளாகவே இருப்பதற்குமான உரிமை மறுக்கப்படுகிறது. 

வன்முறை சுரண்டல் / தவறாக பயன்படுத்துதல் மற்றும் அவமானப்படுத்தப்படுதல் : கொத்தடிமையாக வாழும் குழந்தைத் தொழிலாளர்கள் தினசரி அடிப்படையில் தகாத வார்த்தைகளால் திட்டப்படுகின்றனர் மற்றும் அநேக நேரங்களில் உடல்சார்ந்த வன்முறைக்கு ஆளாகின்றனர் - முதலாளியின் கண்டிப்பான தேவைகளை அவர்கள் பூர்த்தி செய்யாத போது அடி, உதை படுவதோடு சித்திரவதைக்கும் ஆளாக்கப்படுகின்றனர். பிற சிறார்கள் அவமதிக்கப்படுவதையும், அடி உதைக்கு ஆளாவதையும் கொத்தடிமை குழந்தைத் தொழிலாளர்கள் அடிக்கடி நேரடியாக பார்க்கின்ற அனுபவத்தை பெறுகின்றனர். அங்கிருந்த தப்ப அவர்கள் முயற்சிக்கும்போது பெரும்பாலும் அவர்கள் தேடி கண்டறியப்பட்டு மீண்டும் அழைத்துவரப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றனர். இத்தகைய அனுபவங்கள் ஒரு குழந்தையிடம் ஆழமான மனநல பாதிப்புகளை உருவாக்குகின்றன; மனதிற்குள்ளேயே தங்களது எண்ணங்களை புதைத்துக் கொண்டு பிறரிடமிருந்து ஒதுங்கி இருக்க இவர்கள் முற்படுகின்றனர். பிறரை கண்டு அஞ்சுவதும், நம்ப இயலாத நிலையும் இவர்களுக்கு இருக்கிறது. அவர்களது எதிர்காலத்தை குறித்து எந்தவொரு நம்பிக்கையும் இவர்களுக்கு இருப்பதில்லை. கொத்தடிமையிலுள்ள பல சிறார்கள் பாலியல்ரீதியில் தவறாக பயன்படுத்தப்படுவதும் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதும் ஒரு யதார்த்தமான உண்மையாகும். இத்தகைய குழந்தைகள் அனுபவிக்கிற மனக்காயமும்,அதிர்ச்சியும் அவர்களது வாழ்நாள் முழுவதும் நீடித்து பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

கொத்தடிமைத் தொழில்முறையின் வடிவம் அல்லது சூழ்நிலைகள் என்னவாக இருப்பினும், அதன் பாதிப்புகள் ஒரு குழந்தையின் உடல்சார்ந்த, மனநலம் சார்ந்த மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிப்பதாக இருப்பதோடு குழந்தை அதன் முழு திறனளவுக்கு வளர்ச்சியடையவிடாமல் தடை செய்கிறது மற்றும் குழந்தைகளின் சுய மதிப்பை சேதப்படுத்துகிறது. இதற்கும் மேலாக ஒவ்வொரு குழந்தையின் கண்ணியத்தை இது குறைக்கிறது.

சட்ட வழிமுறைகள்

குழந்தைகளை பாதுகாக்கவும் மற்றும் கொத்தடிமைக்குள் சிக்காமல் அவர்களை தடுப்பதற்கும் நமது நாட்டில் நாம் கொண்டிருக்கிற சட்ட வழிமுறைகள் என்ன?

அரசியலமைப்பு : இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குழந்தைகள் மற்றும் அவர்களின் நலன் குறித்து பேசுகிற எண்ணற்ற சரத்துகள் உள்ளன.

இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும் (குழந்தைகள் உட்பட) நீதி கிடைப்பதற்கு அரசியலமைப்பின் தொடக்கவுரை உறுதியளிக்கிறது.

பிரிவு 21 - வாழ்வதற்கும், சுதந்திரத்துக்குமான உத்தரவாதமளிக்கிறது.

பிரிவு 23 - கடனால் அடிமைத்தனத்தில் சிக்க வைக்கப்படும் நடைமுறையையும் மற்றும் அடிமைத்தனத்தின் பிற வடிவங்களையும் தடைசெய்கிறது.

தொழிற்சாலைகள், சுரங்கங்கள் மற்றும் பிற ஆபத்துகரமான பணிகளில் 14 வயதுக்கும் கீழ்ப்பட்ட குழந்தைகள் பணியமர்த்தப்படுவதை பிரிவு 24 தடைசெய்கிறது.

6-லிருந்து 14 வயதுக்கு இடைப்பட்ட பிரிவிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமான மற்றும் கட்டாயமாக கல்வி கற்கும் வசதியை வழங்க பிரிவு 21யு மற்றும் பிரிவு 45 உறுதியளிக்கிறது.

1976-ம் ஆண்டின் கொத்தடிமை தொழில்முறை (ஒழிப்பு) சட்டம் : மேலே விவரணை செய்யப்பட்டவாறு மக்களில் வலுவிழந்த எளிய பிரிவினர் பொருளாதார மற்றும் உடல் உழைப்பு சார்ந்த சுரண்டலுக்கு ஆளாகாதவாறு தடைசெய்யும் நோக்கத்தோடு கொத்தடிமைத் தொழில்முறை அமைப்பு ஒழிக்கப்படுவதற்காக இச்சட்டம் இயற்றப்பட்டது.

குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல்) சட்டம் 1986 : ஆபத்துகரமான பணிகள் மற்றும் செயல்முறைகளில் இளவயதினரையும் மற்றும் அனைத்து பணிகளிலும் குழந்தைகளை ஈடுபடுத்துவதையும்  இச்சட்டம் தடைசெய்கிறது. குழந்தைகள் விடலைப்பருவத்தினர் வேலை செய்ய அனுமதிக்கிற அல்லது பணியமர்த்தியுள்ள எந்தவொரு நபர் மீதும் இது அபராதத்தையும் விதிக்கிறது.

குழந்தைகளின் இளவர் நீதிமுறைச் சட்டம் (பேணுதல் மற்றும் பாதுகாப்பு) 2000 ஆபத்துகரமான பணியில் ஒரு குழந்தையை பணியமர்த்தும் அல்லது பணியமர்த்தலுக்காக அழைத்துவரும் எந்தவொரு நபரையும் தண்டிக்கத்தக்க குற்றமிழைத்தவர்களாக  ஆக்குகிறது.

இந்திய தண்டனைத் தொகுப்புச் சட்டம் (IPC): IPC பிரிவு 370 படி ஒரு குழந்தை சுரண்டலுக்காக மனித வணிகம் செய்யப்படுமானால், அவ்வாறு செய்யும் நபருக்கு 10 ஆண்டுகளுக்கும் குறையாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் மற்றும் ஒரு குழந்தைக்கும் அதிகமாக மனித வணிகம் செய்யப்படும் ஒரு குற்றம் இழைக்கப்படுமானால், 14 ஆண்டுகளுக்கும் குறையாத காலஅளவுக்கு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படக்கூடியதாகும்.

நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்குகள்

உலகளாவிய சூழலில், 17 நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்குகள் (SDGs) வழியாக அதிக வளமான சமத்துவம் நிறைந்த மற்றும் பாதுகாப்பான உலகை 2030-ம் ஆண்டுக்குள் கட்டமைப்பதற்கான ஒரு செயல்திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையும் மற்றும் சர்வதேச சமூகமும் செயல்படுத்த தொடங்கின. 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தியா உட்பட 193 உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அசெம்பிளி உச்சிமாநாட்டில் நிறைவேற்றப்பட்டு 2016 ஜனவரி 1ம் தேதியன்று செயல்பாட்டுக்கு வந்த 2030-ம் ஆண்டு செயற்குறிப்பின் அங்கமாக 17 ளுனுபு-க்களும் மற்றும் அவைகளின் 169 இலக்குகளும் இடம்பெற்றிருந்தன. 17 SDG, 4 இலக்குகளும் மற்றும் அதன் பிறகு நிர்ணயிக்கப்பட்ட 5 இலக்குகளும் கொத்தடிமைத் தொழில்முறை மற்றும் சுரண்டலுக்கான மனித வணிகம் என்ற செயல்பாட்டுக்கு குறிப்பாக தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அவைகள் கீழ்வருமாறு:

SDG 5 5 – பாலின சமத்துவத்தை எட்டுதல் மற்றும் அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளை ஆற்றல் அதிகாரம் பெறச்செய்தல்

சுரண்டலுக்கான மனித வணிகம் மற்றும் பாலியல் மற்றும் பிற வகைகளிலான சுரண்டல்கள் உட்பட பொது மற்றும் தனிப்பட்ட தளங்களில் அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையின் அனைத்து வடிவங்களையும் அகற்றுவது.

SDG 5 16 – நிலைக்கத்தக்க வளர்ச்சிக்காக அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகங்களை பேணி வளர்த்தல், அனைவருக்கும் நீதிக்கான அணுகுவசதியை வழங்குதல் மற்றும் அனைத்து நிலைகளிலும் திறன்மிக்க பொறுப்புறுதி கொண்ட மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய அமைப்புகளை உருவாக்குதல்.

குழந்தைகளை தவறாக பயன்படுத்துதல், சுரண்டல், மனித வணிக செயல்பாடு ஆகியவற்றையும் மற்றும் குழந்தைகள் மீதான சித்திரவதை மற்றும் அவர்களுக்கெதிரான வன்முறையின் அனைத்து வடிவங்களையும் முடிவுக்குக் கொண்டுவருதல்.

நாட்டில் கட்டாயத் தொழில்முறையின் பல்வேறு வடிவங்களை முற்றிலுமாக அகற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்திருக்கிறது மற்றும் அவ்வாறு செய்வது பல்வேறு சர்வதேச ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது மற்றும் அதிகாரப்பூர்வமாக ஏற்று  செயல்படுத்த ஒப்புக்கொண்டிருக்கிறது. கொத்தடிமைத் தொழில்முறையை வெற்றிகரமாகவும் மற்றும் விரிவாகவும் எதிர்த்து போரிட நிலைக்கத்தக்க வளர்ச்சி இலக்குகள் வழியாக அரசானது, முன் முனைப்போடு தொடர்ந்து செயலாற்ற வேண்டும் மற்றும் அவைகளின் இலக்கை அடைவதற்கு அதிகமாக பாடுபட வேண்டும்.

கொத்தடிமையில் சிக்கியுள்ள குழந்தைத்தொழிலாளர் மீதான தரவு            

தேசிய குற்ற ஆவண பதிவகத்தின்படி 2016-ம் ஆண்டில் இந்தியாவில் 8132 மனித வணிக நேர்வுகள் புகார்களாக கிடைக்கப் பெற்றிருக்கின்றன (அனைத்து வயதுப் பிரிவுகளிலும் மற்றும் அனைத்து வடிவங்களிலான மனித வணிக செயல்பாடுகள் உட்பட)

18 வயதுக்கு கீழ் மனித வணிகத்தினால் பாதிப்படைந்த குழந்தைகள் ஆண்கள் : 4123

பெண்கள் : 4911

மொத்தம் : 9034

18 வயதுக்கு கீழ் மீட்கப்பட்டுள்ள / பாதிப்படைந்த குழந்தைகள் –

ஆண்கள் : 8651

பெண்கள் : 5532

மொத்தம் : 14183

மீட்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அந்த ஆண்டில் மனித வணிகத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விட அதிகமாக இருப்பதால், முந்தைய ஆண்டிலும் கூட மனித வணிகத்திற்காக கடத்தப்பட்ட நபர்களையும் மீட்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை உள்ளடக்கியதாக இருக்கக்கூடும்.

இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் - புள்ளியியல் விவரங்கள்

ஆண்டு  - 2015 

மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை - 119   

தொழில்பிரிவு - அரிசி ஆலை, செங்கற்சூளை, புழு சேகரித்தல் தொழிலகம் மாந்தோப்பு, மரஇழைப்பு தொழிலகம்

குழந்தைகள் மீட்கப்பட்ட மாவட்டங்கள் -   காஞ்சிபுரம், வேலூர் திருவள்ளுர், சித்தூர் (ஆந்திரபிரதேசம்)

***

ஆண்டு - 2016  

மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை - 32

தொழில்பிரிவு - செங்கற் சூளை, அரிசி ஆலை, பாறை உடைப்பு தொழிலகம், மரஇழைப்பு தொழிலகம்

குழந்தைகள் மீட்கப்பட்ட மாவட்டங்கள் – காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளுர், திருவண்ணாமலை

***

ஆண்டு - 2017  

மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை - 47   

தொழில்பிரிவு - செங்கற்சூளை விவசாய தோட்டம், மரஇழைப்பு தொழிலகம், இனிப்பு பலகார ஃ மிட்டாய் தயாரிப்பகம் (பிடாருக்கு அனுப்பப்பட்டவர்கள்)    

குழந்தைகள் மீட்கப்பட்ட மாவட்டங்கள் - சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம்

***

ஆண்டு - 2018  

மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை - 39

தொழில்பிரிவு - செங்கற்சூளை, மரஇழைப்பு தொழிலகம்

குழந்தைகள் மீட்கப்பட்ட மாவட்டங்கள் – காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளுர்

ஐஜேஎம் நேர்வுகளில் மட்டும் 2015-ம் ஆண்டிலிருந்து இக்குழந்தைகளின் விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

மேலும் சில புள்ளி விவரங்கள்

இடம் - திருவள்ளுர்

மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை - 450   

நிகழ்வு நடைப்பெற்ற மாநிலங்கள் - ஒடிசா

இடம் - கோயம்புத்தூர்    

மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை - 152   

நிகழ்வு நடைப்பெற்ற மாநிலங்கள் - அஸ்ஸாம், கர்நாடகா, பீஹார், மேற்கு வங்கம், கேரளா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், ஆந்திரபிரதேசம், ஒடிசா, மஹாராஷ்டிரா, ஜார்கண்ட் மத்திய பிரதேசம்

***

இடம் - சென்னை

மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை - 54   

நிகழ்வு நடைப்பெற்ற மாநிலங்கள் - மேற்கு வங்கம் சத்தீஸ்கர்

***

இடம் - வேலூர்     

மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை - 50   

நிகழ்வு நடைப்பெற்ற மாநிலங்கள் – ஆந்திரபிரதேசம், அஸ்ஸாம், ஜார்கண்ட், அருணாச்சல பிரதேசம், மேற்கு வங்கம்

***

இடம் - நாமக்கல்    

மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை - 28   

நிகழ்வு நடைப்பெற்ற மாநிலங்கள் – சத்தீஸ்கர்

***

இடம் - மதுரை

மீட்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை - 5

நிகழ்வு நடைப்பெற்ற மாநிலங்கள் – ராஜஸ்தான், பீஹார், மஹாராஷ்டிரம், மணிப்பூர்

கொத்தடிமைத் தொழில்முறைக்கு எதிரான செயல் நடவடிக்கையை கண்காணிப்பதற்கான ஒரு வழிமுறையாக கணக்கெடுப்பு ஆய்வுகள் வழியாக தரவு சேகரிப்பையும் மற்றும் இச்சட்டத்தை அமல்படுத்த பொறுப்புடைய நபர்களை பொறுப்புறுதிக்கு உட்படுத்துவதையும் கொத்தடிமைத் தொழில்முறை (ஒழிப்பு) சட்டம் 1976 வலியுறுத்துகிறது. முதலாவதாக, டீடுளுயு-ன் பிரிவுகள் 13 மற்றும் 14-ன்படி கொத்தடிமைத் தொழில்முறை செயல்படுத்தப்படும் சாத்தியமுள்ள பகுதிகளில் அல்லது தொழில்துறைகளில் பணி அமைவிடங்களில் மாவட்ட மற்றும் தாலுகா அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் ஆய்வுகளை மேற்கொள்வது அவசியமாகும். இரண்டாவதாக, ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை கொத்தடிமைத் தொழில்முறை செயல்பாட்டை சோதித்து உறுதிசெய்வதற்காக ஒரு கணக்கெடுப்பு ஆய்வை நடத்துவது தொழிலாளர்நல துறைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொத்தடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கான மத்தியத் துறை திட்டம் (2016) இத்தகைய கொத்தடிமைத் தொழில்முறை கணக்கெடுப்பு ஆய்வுகளை நடத்துவதற்காக நிதியுதவியை மாநில அரசுகளுக்கு வழங்குகிறது.

துரதிர்ஷ்டவசமாக, கொத்தடிமைத் தொழில்முறையை கண்காணிப்பதற்கும் மற்றும் இப்பிரச்சினை மீதான தரவுகளை சேகரிப்பதற்குமான இந்த இயக்க முறைகள் தற்போது அமல்படுத்தப்படுவதில்லை அல்லது திறம்பட செயல்படுவதில்லை. இச்சட்டங்கள் தவறாது குறித்த கால அளவுகளில் பொறுப்புக்கு உட்படுத்தும் அம்சத்தோடு, நடைமுறைப்படுத்தப்படும்வரை மற்றும் போதுமான அளவு கணக்கெடுப்பு ஆய்வுகள் நடத்தப்படும் வரை கொத்தடிமையில் சிக்கியுள்ள குழந்தைத் தொழிலாளர் மீதான போதுமான அளவு தரவினை தொகுத்து வழங்குவது என்பது மிகவும் கடினமானதாகவே தொடர்ந்து இருக்கும்.

வருங்காலத் திட்டம்

என்ன செய்ய முடியும்?

குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கவும் மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர்களாக ஆவதிலிருந்து அவர்களை தடுக்கவும் போதுமான சட்டங்களை இந்தியா ஏற்கனவே கொண்டிருக்கிறது. எனினும், நாம் பேசுகிற இந்த நேரத்தில் அடிமைத்தனம் முடிவுக்கு வரும் சாத்தியமே கண்ணுக்குத் தெரியாமல், கொத்தடிமைத் தொழிலாளர்களாக பணியாற்ற வஞ்சகமாக அழைத்துவரப்பட்டு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகள் இந்தியாவில் இருக்கின்றனர். அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் வன்முறை மீதான தொடர்ச்சியான அச்சத்தில் அவர்கள் வாழ்கின்றனர். அச்சம் மற்றும் அவமானத்தின் காரணமாக இந்த சட்டவிரோத நடைமுறை தங்கள் விதியாக ஏற்றுக்கொள்ளுமாறு அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளை பாதுகாப்பதற்கு அவசியமான மற்றும் நல்ல சட்டங்கள் ஏற்கனவே இருக்கின்றன; ஆனால் அவற்றை முறையாக அமல்படுத்தாதவரை இச்சட்டங்களினால் பயன் ஏதும் இல்லை.

குழந்தை கொத்தடிமைத் தொழில்முறை என்ற குற்றத்தை ஒழிப்பதற்கு அச்சுறுத்தல் உணர்வை குற்றம் செய்பவர்களிடம் உருவாக்குவது ஒரு மிக முக்கியமான உத்தியாகும். ஒரு குற்றத்திற்காக குற்றம் செய்த நபர் தண்டிக்கப்படும்போது, குற்றம் இழைக்கக்கூடிய பிற நபர்களுக்கு, சட்டத்தின்படி குற்றத்திற்கு தண்டனை கிடைக்கும் என்ற தெளிவான செய்தியை அது அனுப்பும். எவ்வித அச்சமோ, தயக்கமோ இன்றி குழந்தைகளை சுரண்டலால் அல்லது தவறாக பயன்படுத்தலாம் என்ற சிந்தனை வராமல் தடுப்பதற்கு வழங்கப்படும் தண்டனை கடுமையானதாக ஆக்கப்பட வேண்டும். விரைவான மற்றும் பயனளிக்கக்கூடிய வழக்கு விசாரணையும், தண்டனைத் தீர்ப்பும் பரவலாக மக்களுக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். கொத்தடிமைத் தொழில்முறை என்பது இனிமேலும் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது என்ற செய்தியினை அனைத்து ஊடகங்கள் வழியாகவும் பரப்ப வேண்டும்.  

முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள், ‘பொருளாதார வளமையோடு, நாகரீக பாரம்பரியமும் இணைவதால் உருவாகிற வளமான மற்றும் பாதுகாப்பான இந்தியாவை நமது இளைய தலைமுறையினருக்கு நாம் வழங்கினால் மட்டுமே, நாம் நினைவுகூரப்படுவோம்’ என்று தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார். கொத்தடிமைத் தொழில்முறையில் அவதியுறும் இந்த குழந்தைகளுக்காக வரலாற்றை திருத்தி எழுதுவதற்கு நாம் நடவடிக்கைகள் எடுப்போமானால் நாம் என்றும் நினைவுகூரப்படுவோம்.

முதலாவதாக, குழந்தைகள் கொத்தடிமைக்குள் சிக்காமல் தடுக்கிறவாறு நமது அமைப்புமுறையானது உருவாக வேண்டும். இதை எட்டுவதற்கு அக்கறையும் பொறுப்புமுள்ள அனைவருமே அவரவர் பங்கினை செய்தாக வேண்டும். தொழிலாளர் நல ஆணையர்கள் கொத்தடிமைத் தொழில்முறையை கண்டறிவதற்காக முழுமையான ஆய்வினை மேற்கொள்ள வேண்டும்; காவல்துறை அதிகாரி ஒரு உரிய காலஅளவுக்குள் புகார்களை பதிவுசெய்து, விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களை மீட்க வேண்டும். குற்றமிழைத்தவர்களுக்கு சட்டத்தில் கூறப்பட்டுள்ளவாறு உரிய தண்டனைகளை வழங்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் (IPC சட்டம் 370-ன்படி 7 ஆண்டுகளிலிருந்து ஆயுள்தண்டனை வரை). அனைத்து அக்கறைப் பங்காளர்களின் முயற்சிகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படுமானால், கொத்தடிமைத் தொழிலாளர்களாக அவதியுறுவதிலிருந்து குழந்தைகள் தடுக்கப்படுவதற்கு அவசியமான அச்சுறுத்தல் உணர்வை குற்றமிழைப்பவர்கள் மனத்தில் உருவாக்க இயலும்.

- சாரா ஏஞ்சலின் ஜேம்ஸ்

சட்ட அலுவலர். ஐஜேஎம், ரெனி மு ஜேக்கப் 

கூட்டாண்மைகளுக்கான இயக்குநர், ஐஜேஎம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com