பெங்களூருவிலிருந்து மலேசியா செல்வதற்கான விசா வேண்டுமா? மேற்கொண்டு படியுங்கள்!

இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்க தொடங்கியிருந்தால், வியத்தகு மலேசிய பயணத்திற்கு
பெங்களூருவிலிருந்து மலேசியா செல்வதற்கான விசா வேண்டுமா? மேற்கொண்டு படியுங்கள்!

இந்தக் கட்டுரையை நீங்கள் படிக்கத் தொடங்கியிருந்தால், வியக்கத்தகு மலேசிய பயணத்திற்கு திட்டமிடுகிறீர்கள் என்று அர்த்தம். அப்படியானால் நீங்கள் சரியான இடத்துக்குத்தான் வந்துள்ளீர்கள் என்று சொல்லலாம். உங்கள் அனைவருக்கும் விசா நடைமுறைகளை எளிமைப்படுத்த நாங்கள் உள்ளோம்.

அடிப்படையான சில கேள்விக்கு பதிலளிப்பதன் மூலம் இதனைத் தொடங்கலாம்: உங்களுக்கு விசா சிபாரிசுடன் பெற வேண்டுமா அல்லது சிபாரிசு இல்லாமல் பெற வேண்டுமா? சிபாரிசு இல்லாமல் விசா பெறுவதற்குத்தான் மலேசிய தூதரகம் சுற்றுலா, வணிகம் அல்லது சமூக வருகைக்காக ஒப்புதல் அளிக்கிறது. சிபாரிசுடன் செல்வதென்றால் வேலை, ஆய்வு அல்லது எந்தவொரு சமூக பங்களிப்பாகவும் இருக்கலாம். மலேசிய விசாவுக்கு விண்ணப்பிக்க உங்கள் பயண தேதியிலிருந்து குறைந்தபட்சம் ஒரு மாதம் தேவைப்படும் என்பதை மனதில் கொள்ளுங்கள். 

பெங்களூருவிலிருந்து மலேசியாவிற்குச் செல்ல விசாவிற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதில் சந்தேகம் இருக்கிறதா? தொடர்ந்து படிக்கவும்

பெங்களூருவில் மலேசிய சுற்றுலா விசா விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

எல்லா நாடுகளில் நடைமுறையில் உள்ளது போலவே, இந்தியாவிலும் தூதரகங்களில் VFS வழியாக விசா வழங்குதல் நடைபெறுகிறது. பெங்களூருவில் குறிப்பாக, அனைத்து விசா தொடர்பான ஆவணங்களும் (கீழே குறிப்பிடப்பட்டவை) VFS அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றன, இவை மலேசிய தூதரகத்தின் அனுமதி மற்றும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

மலேசியாவின் விசா பெங்களூரு வழியாக விண்ணப்பிக்கும் போது, கீழே குறிப்பிடப்பட்டுள்ள மலேசிய விசா அத்தியாவசிய ஆவணங்களை இந்தியர்கள்
கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்

  • குறைந்தபட்சம் மூன்று வெற்று பக்கங்களுடனான 6 மாத காலப்பகுதிக்கு மேற்பட்ட பாஸ்போர்ட் 
  • வெள்ளைப் பின்னணியுடன் 3.5cms X 4.5cms அளவிலான சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் 
  • திரும்பி வருவதற்கான விமான டிக்கெட்
  • முற்றிலும் பூர்த்தி செய்யப்பட்டு கையெழுத்திடப்பட்ட விசா படிவம்
  • தங்கும் காலத்திற்கான ஹோட்டல் முன்பதிவு சீட்டு. 
  • திட்டமிடப்பட்ட பயணக் குறிப்புகள்
  • சிறுவர்களுக்கு பிறந்த நாள் சான்றிதழ்.
  • உங்கள் நிறுவனத்தின் HR இடமிருந்து மலேசியாவில் தங்கவிருக்கும் இடத்தின் முழுமையான உள்ளூர் முகவரியைக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். அக்கடிதம் நிறுவனத்தின் லெட்டர் ஹெட்டில் இருக்க வேண்டும். உங்கள் பாஸ்போர்ட் தென் இந்தியாவில் வழங்கப்பட்டிருந்தால் இந்த ஆவணம் தேவையில்லை.
  • கடந்த ஆறு மாத கால வங்கிக் கணக்கு அறிக்கை, அதில் முழு பெயர் மற்றும் முறையான குடியிருப்பு முகவரியைக் குறிப்பிட வேண்டும். உங்கள் பாஸ்போர்ட் இந்தியாவின் தெற்கில் இருந்து வழங்கப்பட்டால் இந்த ஆவணமும் தேவையில்லை.

மேற்கூறப்பட்ட அனைத்து ஆவணங்களும் A4 பேப்பர் அளவில் இருக்க வேண்டும். மேற்சொன்ன ஆவணங்களின் பட்டியல், நீங்கள் விண்ணப்பிக்கும் பிராந்திய விசா மையத்தின் அடிப்படையில் வேறுபடலாம்.

மலேசியா விசாவின் செலவினம் மற்றும் கால வரையறை

உங்கள் பாஸ்போர்ட்டைப் பெற பொதுவாக ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் கூட ஆகும். மக்கள் தங்கள் பாஸ்போர்ட்டை 5 வேலை நாட்களில் கூட பெற்றுள்ளார்கள். ரூபாய் 3,400/- என்பது ஒரு வருடத்திற்கான மட்டுமேயான விசா கட்டணமாகும். விசா தொடர்பான தகவல்களை நேரடியாக அல்லது SMS மூலம் பெற கூடுதல் கட்டணத்துடன் பெற முடியும். இதைப் பற்றி மேலும் இங்கே படிக்கலாம்.

ஈ-விசா பெற என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் மலேசிய பயணத்துக்கு ஈ-விசா பெற இந்தச் சுட்டியை திறக்கலாம்.  மலேசியா ஈ-விசா விண்ணப்பம் மேலும் நீங்கள் சில விஷயங்களை தெரிந்து வைத்து கொள்ள:

  1. தாய்லாந்து அல்லது சிங்கப்பூரில் இருந்து நீங்கள் வருவதாக இருந்தால், மலேசிய ஈ-விசாவுக்கு அனுமதி கிடைத்துவிடும்.
  2. நீங்கள் குறைந்தபட்சமாக 1000 டாலர்களை ரொக்கமாக கையிருப்பாக வைத்திருக்க வேண்டும் மற்றும் வருகைக்குப் பின், விசாவிற்கு 100 டாலர்கள் செலுத்த வேண்டும்.
  3. உங்கள் விசா வருகைக்கு பிறகு அதிகபட்சமாக 7 நாட்களுக்கு அந்நியச் செலாவணி கணக்கிடப்படும்
  4. சிங்கப்பூர் அல்லது தாய்லாந்த் விசாவினை நீங்கள் திரும்பி வரும் விமானப் பயண டிக்கெட்டுடன் வைத்திருக்க வேண்டும்
  5. உங்கள் விசா மலேசியாவில் ஒப்புதல் பெற, பின்வரும் விமான நிலையங்களின் ஊடே நீங்கள் பயணம் செய்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்:

• KLIA
• LCCT
• பினாங்கு விமான நிலையம்
• செனாய் விமான நிலையம்
• குச்சிங் விமான நிலையம், மற்றும்
• கோட்டா கினாபாலு விமான நிலையம்

இவை அனைத்தையும் மிகச் சரியாக செய்து முடித்த பின்னரும், உங்கள் விசா ஒப்புதல் என்பது முற்றிலும் துணை தூதரகத்தில் கையில்தான் உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com