சுதந்திரத்துக்குப் பின்னும் இந்தியாவுடன் இணைய மறுத்த 5 சமஸ்தானங்கள்

மாநில சுயாட்சி கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்த இவ்வேளையில் இந்திய எல்லையில் இடம்பெற்றிருந்த 5 சமஸ்தானங்களில் சில பாகிஸ்தான் அரசியலமைப்பின் கீழ் செயல்பட விருப்பம் தெரிவித்திருந்தன. 
சுதந்திரத்துக்குப் பின்னும் இந்தியாவுடன் இணைய மறுத்த 5 சமஸ்தானங்கள்

மாநில சுயாட்சி கோரிக்கைகள் வலுப்பெற்றிருந்த இவ்வேளையில் இந்திய எல்லையில் இடம்பெற்றிருந்த 5 சமஸ்தானங்களில் சில பாகிஸ்தான் அரசியலமைப்பின் கீழ் செயல்பட விருப்பம் தெரிவித்திருந்தன. 

ஆகஸ்டு 15-ஆம் தேதி இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் ஏற்பட்ட பெரும் குழப்பம் நாடு முழுவதிலும் இருந்த சமஸ்தானங்களை ஒன்றிணைத்து ஒரு நாடாக உருவாக்குவதில் தான் இருந்தது. அதிலும் குறிப்பாக சுமார் 500 நிலப்பிரிவுகளாக பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரங்களுடன் இந்தியா விளங்கியது தான். சுதந்திரத்தின் வழியே இந்தியா விழித்துக்கொண்டது என்று ஜவஹர்லால் நேருவின் உரையை உண்மையாக்குவதில் பலதரப்பட்ட சிக்கல்கள் நீடித்தன. பல பிரிவுகளாக பிரிந்திருந்த இந்நாட்டை ஒன்றுசேர்க்க அப்போதைய தலைவர்கள் பெரும்பாடுபட்டனர்.

ஆங்கிலேயர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்தாலும், சுய நிர்வாக உரிமை பெற்ற பிரதேசங்களாகவே விளங்கி வந்தன. அவைகளின் ஆட்சிமுறை ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அதனை செயல்படுத்துவதில் அந்தந்த சமஸ்தான அதிபதிகளின் செயல்முறையிலேயே இருந்து வந்தன. அதுபோன்று இந்த சமஸ்தானங்களை தங்களின் நண்பர்கள் என்றே ஆங்கிலேயர்களும் கூறி வந்தனர். மேலும் இவர்கள் மூலம் இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும் செய்தனர். சமஸ்தான ஆதிக்கம் தொடர்பான கட்டுப்பாடுகளை அந்தந்த அதிபதிகளிடம் வழங்கியிருந்த ஆங்கிலேயர்கள் அப்பகுதிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கும் உரிமையை பெற்றிருந்தனர். மேலும் அவர்களுக்கு தேவையான போது ராணுவத்துக்கான தேவைகளையும் பூர்த்தி செய்துகொண்டனர்.

கடந்த 1930-ஆம் வருடம் இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர்களை விரட்டிய பின்னர் இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் இணைத்து ஒரு நாடாக உருவாக்க அப்போதைய காங்கிரஸ் கமிட்டி தரப்பில் முடிவு செய்யப்பட்டிருந்தது. மேலும் 1938-ஆம் ஆண்டு ஹரிபுராவில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 

அதில், அரசியலமைப்பு, பொருளாதார சீர்திருத்தங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளும் இணைந்து ஒரு நாடாக செயல்பட வேண்டும். இந்திய எல்லைப்பகுதிகளில் அமைந்துள்ள எந்த ஒரு சமஸ்தானத்தையும் தனித்த இயங்க அனுமதிக்கக் கூடாது. அனைத்தும் ஒன்றிணைந்த பரிபூரன ராஜ்ஜியம் தான் முழு சுதந்திரத்தின் அடையாளம். இதுவே ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான காங்கிரஸ் அமைப்பின் கொள்கையாகும். இந்தியாவின் ஒறுமைப்பாட்டினை காக்க சுதந்திரத்தில் இதை செய்வதே சாத்தியமாகும் என்று அறிவித்திருந்தது. 

இந்நிலையில், சுதந்திரத்துக்குப் பிறகான தன்னாட்சி அதிகாரம் பெற்ற பின்னர் இந்தியாவுடன் இணைய மறுத்த 5 சமஸ்தானங்கள்:

திருவாங்கூர்  

கடல்சார் வணிகத்திலும், மிகப்பெரிய கனிம வளங்களையும் கொண்ட பகுதியாக திருவாங்கூர் சமஸ்தானம் விளங்கியது. சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியாவுடன் இணைய மறுத்த முதல் சமஸ்தானம் இதுவாகும். பின்னர் 1947-ஆம் ஆண்டு ஜூலை 30-ஆம் தேதி திருவாங்கூர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது.

ஜோத்பூர்

அதிகளவிலான ஹிந்து மக்கள் தொகை கொண்ட பகுதியாகவும், ஹிந்து அரசரால் ஆளப்பட்ட இந்த ராஜ்புட் சமஸ்தானம், பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படும் நிலையில் இருந்தது. முதலில் இந்தியாவுடன் இணையலாம் என்ற யோசனையில் இருந்தபோது இச்சமஸ்தானத்தின் இளவரசர் மஹாராஜா ஹன்வந்த் சிங், திடீரென பாகிஸ்தானுடன் இணைய முடிவுசெய்திருந்தார். ஏனென்றால் புதிதாக உருவாக்கப்படும் பாகிஸ்தான் நாட்டின் எல்லைப் பகுதியில் ஜோத்பூர்  அமைந்திருந்ததால், அது அவர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தார். மேலும் ஜின்னா அளித்த சில சலுகைகள் இதற்கு காரணமாக இருந்தது. 

இதுதொடர்பாக வல்லபாய் படேலுக்கு தெரியவந்த போது, இஸ்லாமிய நாட்டுடன் இணைந்தால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து தெரிவித்ததோடு, இந்தியாவுடன் இணைந்தால் ஏற்படும் சாதகங்கள் குறித்தும் கூறியதோடு, சில சலுகைகளையும் முன்வைத்தார். பின்னர் ஒருவழியாக ஜோத்பூர் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்க அதன் இளவரசர் ஒப்புக்கொண்டார்.

போபால்

அதிகளவிலான ஹிந்து மக்கள் தொகை கொண்ட போபால் சமஸ்தானம் இஸ்லாமிய நவாப் ஹமிதுல்லா கான் அரசவையின் கீழ் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. முஸ்லீம் லீக்கின் மிக நெருங்கிய நண்பரான இவர், காங்கிரஸ் ஆட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் போபால் சமஸ்தானத்துக்கு தனி சுதந்திரம் வழங்குமாறும் மௌன்ட் பேட்டனிடம் கோரிக்கை வைத்திருந்தார். இருப்பினும் இதர மன்னர்கள் இந்தியாவுடன் இணைய சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், 1947 ஜூலை மாதம் போபால் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைய சம்மதம் தெரிவித்தார்.

ஹைதராபாத்

சமஸ்தானங்களிலேயே அதிக சிக்கல் கொண்டதாக ஹைதராபாத் விளங்கியது. இந்தியாவின் மத்தியப் பகுதியில் மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்டிருந்த ஹைதராபாத் சமஸ்தானத்தில் சுதந்திரத்தின் போது மிகப்பெரிய ஹிந்து மக்கள் தொகை கொண்ட இப்பகுதி நிசாம் மிர் உஸ்மான் அலியின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் செல்லும் வேளையில், ஹைதராபாத் சமஸ்தானத்தை தனி நாடாக அறிவிக்கக் கோரிக்கை விடுத்தார். 

இதற்கிடையில் அங்கு தனிநாடு தொடர்பான கலவரங்கள் ஏற்பட்டன. மேலும் இந்தியாவின் மிகப்பெரிய இஸ்லாமிய அரசாக திகழ்ந்த ஹைதராபாத்தின் நிஸாமுக்கு ஜின்னாவின் முழு ஆதரவு இருந்தது. ஆனால் இதை வல்லபாய் படேல் நிச்சயம் விரும்பவில்லை. 

பின்னர் 1948-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி ஆபரேஷன் போலோ என்ற பெயரில் இந்திய ராணுவம் ஹைதராபாத் சென்றது. அப்போது நடைபெற்ற 4 நாள் போரில் ஹைதரபாத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் இந்திய ராணுவம் கைப்பற்றியது. பின்னாளில் தோல்வியை ஒப்புக்கொண்டதற்காக ஹைதராபாத்தின் ஆளுநராக நிஸாம் நியமிக்கப்பட்டார். 

ஜூனாகத்

குஜராத்தில் உள்ள இந்த ஜூனாகத் சமஸ்தானமும் சுதந்திரத்துக்குப் பின்னர் இந்தியாவுடன் இணைய மறுத்தது. இங்கும் மிகப்பெரிய ஹிந்து மக்கள் தொகையின் நவாப் ஆக 3-ஆம் முஹம்மது மஹாபத் கான்ஜி ஆட்சி நடைபெற்று வந்தது. இதனிடையே பாகிஸ்தானின் கீழ் செயல்பட விரும்பிய இச்சமஸ்தானம், அதற்கான பணிகளில் தீவிரமாக இருந்தது. மேலும் இவர்களின் கோரிக்கையை பாகிஸ்தான் அரசும் ஏற்றுக்கொண்டது. ஆனால் அதற்கு இந்திய அரசு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் அது ஜின்னா செய்துகொண்ட இரு நாடுகளின் ஒப்பந்தத்துக்கு எதிரானது என்றும் சாடியது. 

அப்போது ஏற்பட்ட இந்த இடையூறுகளின் காரணமாக இந்த சமஸ்தானத்தின் பொருளாதாரம் கடுமையாகச் சரிந்தது. அதன் நவாப் கராச்சி சென்று தஞ்சமடைந்தார். அச்சமயம் இவ்விவகாரம் தொடர்பாக வல்லபாய் படேல், ஜூனாகத் சமஸ்தானத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த பாகிஸ்தானிடம் வலியுறுத்தினார். அதில் மூன்றில் இரண்டு பங்கு இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தது. மேலும் 1948 பிப்ரவரி 20-ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது 91 சதவீதம் பேர் இந்தியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தனர். எனவே ஜூனாகத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com