தெரியுமா உங்களுக்கு? ஐஐடில படிக்கனும்னா அதுக்குன்னு உங்க ஜாதகத்துல ஸ்பெஷல் அமைப்பு இருக்கனுமாம்! (பார்ட் -1)

ஒரு ராசியை 24 சம பாகங்களாக பிரிப்பது சதுர்விம்சாம்சமாகும். 1 பாகம் என்பது 1 பாகை 15 கலைகளை கொண்டதாகும். இராசி சக்கரத்தில் நின்ற கிரகங்களின் நிலைகள் D24-ல் மாறுபட்டு இருக்கும். D24-ல் கிரகங்கள் நல்ல
தெரியுமா உங்களுக்கு? ஐஐடில படிக்கனும்னா அதுக்குன்னு உங்க ஜாதகத்துல ஸ்பெஷல் அமைப்பு இருக்கனுமாம்! (பார்ட் -1)

கல்வியும் சதுர்விம்சாம்சமும் - D24

முன்னுரை...

மனிதர்களுக்கு மட்டுமே எதையும் பகுத்தறிந்து பார்க்கின்ற ஆறாவது அறிவு என்பது உண்டு. இவ்வறிவு மிருகங்களுக்குக் கிடையாது. பகுத்தறிந்து, நன்கு சிந்தித்து, புத்திக்கூர்மையைப் பயன்படுத்தி செயல்படுவதும் பேசுவதும் மனித இனத்துக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட வரங்களாகும். ஒரு சூழ்நிலையை சரியாக பொருள்படுத்துவதும், எதையும் ஆழ்ந்து புரிந்துகொள்வதும், தான் படித்த கருத்தை சந்தேகமில்லாமல் புரிந்துகொண்டு வாழ்க்கையில் பயன்படுத்தவும், ஒருவரின் புத்திக்கூர்மை முக்கியப் பங்காற்றுகிறது. 

ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவர்கள் எதையும் மேம்போக்காக படிக்காமல் ஆழ்ந்து சிந்தித்து படிப்பதால், எத்துறையிலும் முதன்மையாக திகழ்கிறார்கள். இம்மாணவர்களின் கல்வியின் தரத்தையும், புத்தி கூர்மையையும் சதுர்விம்சாம்சம் D24 மூலம் ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். 

சதுர்விம்சாம்சம் D24 என்றால் என்ன?

ஒரு ராசியை 24 சம பாகங்களாக பிரிப்பது சதுர்விம்சாம்சமாகும். 1 பாகம் என்பது 1 பாகை 15 கலைகளை கொண்டதாகும். இராசி சக்கரத்தில் நின்ற கிரகங்களின் நிலைகள் D24-ல் மாறுபட்டு இருக்கும். D24-ல் கிரகங்கள் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே ஒருவருக்கு கல்வி என்பது சிறப்பாக அமையும்.

ஆய்வுத் தரவுகள்... 

இந்தியாவில், மத்திய அரசால் நிறுவப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்கள் 15-க்கும் அதிகமாக உள்ளன. இதில் உயர்கல்வியை பயில மிகவும் கடினமான நுழைவு தேர்வுகள் 2 படி நிலைகளில் நடத்தப்படுகின்றன. (JEE Mai and Advance). அதிக புத்தி கூர்மை உடையவர்களுக்கு மட்டுமே இக்கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன. எனவே இங்கு சென்னை ஐ.ஐ.டி.யில் பி.டெக் படிக்கும் 50 மாணவர்களின் ஜாதகங்கள் ஆய்வுத் தரவுகளாக எடுக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 

ஆய்வு அணுகுமுறை...

இந்த 50 ஜாதகங்களும் 5 முக்கிய விதிகளைக் கொண்டு ஆய்வு செய்யபட்டுள்ளன. இவ்விதிகள் அனைத்தும் D24 என்ற வர்க்கச் சக்கரத்தில் பொருத்திப் பார்த்து முடிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கல்விக்கான பாவங்களும் கிரகங்களும்...

D24-ன் முதல் பாவம்:

1. லக்னம், லக்னாதிபதி நன்றாக அமைந்தால் கல்வி சிறப்பாக அமையும். லக்னத்தில் நின்ற, பார்த்த, வேறு வகையில் தொடர்புடைய கிரகங்களின் கல்வியை பயில வாய்ப்புள்ளது. 
2. ஆரம்ப கல்வி) மற்றும் முதுநிலை கல்வி ஆகியவற்றை இரண்டாம் வீட்டை கொண்டு முடிவு செய்யலாம்.
3. தபால் முறை கல்வி, தனது முயற்சியினால் கல்விக்கான இடம், மாற்றம் முதலியவற்றை மூன்றாம் வீட்டின் மூலம் அறியலாம்.
4. பள்ளிக்கல்வி 10-ம் வகுப்பு வரை இவ்விடத்திலிருந்து முடிவு செய்யலாம். மேலும் கல்வி பயிலும் இடத்தின் சூழ்நிலையும், கல்வியில் ஜாதகரின் மனநிலையையும் இவ்விடம் முடிவு செய்யும். எனவே 4-ம் அதிபதியும், 4-ம் இடமும் நன்கு அமைந்து விட்டால் பள்ளிக்கல்வி சிறப்பாக அமையும். இதற்கு புதனும், சந்திரனும் காரகர்கள் ஆவர்.
5. 5-ம் இடத்தை கொண்டு ஜாதகரின் புத்தி கூர்மையை முடிவு செய்யலாம். ஐந்தாம் இடம், 5-ம் அதிபதி நன்கு அமைய வேண்டும். இவ்விடத்திற்கு காரக கிரகம் குருவாகும். இவ்விடத்தில் குரு (அ) கேது நின்றாலும் பார்த்தாலும் 5-ம் அதிபதியுடன் குரு தொடர்பு பெற்றாலும் புத்தி கூர்மை உண்டு. 
6. ஆறாமிடத்தை கொண்டு கல்வியில் ஜாதகரின் போட்டியாளர், பள்ளியில் ஏற்படும் சண்டை சச்சரவுகளை அறிந்துகொள்ள முடியும்.
7. ஏழாம் பாவத்திலிருந்து கூட்டுக் கல்வி, ஆராய்ச்சி கல்வி, முனைவர் பட்டத்திற்கான கல்வி இவைகளை அறியலாம்.
8. படிப்பில் தடைகள், மாற்றம், ஆன்மீக கல்வி, தத்துவம், ஜோதிடம், மறை பொருள் கல்வி இவைகளை எட்டாம் பாவத்தின் மூலம் அறியலாம்.
9. உயர்கல்வி, இளநிலை பட்டக்கல்வி, தன்னுடைய குருவை பற்றி சொல்லும் இடம். தான் மற்றவர்களுக்கு எவ்வகையில் குருவாக முடியும் என்பதை பற்றி 9-ம் இடம் முடிவு செய்யும். எனவே 9-ம்   அதிபதி, 9-ம் இடம் நன்கு அமைவது அவசியமாகும்.
10. தொழில் கல்வி, சிறப்பு கல்வி, கல்வியில் தன்னுடைய செயல்பாடுகள், தான் படித்த கல்வியை பயன்படுத்தி செயல்படுத்தும் விதம் 10-ம் வீட்டின் மூலம் அறியலாம்.
11. படிப்பின் மூலம் ஜாதகருக்கு கிடைக்கும் வெகுமதிகள், பரிசுகள், பட்டங்கள், படிப்பினால் வரும் அனைத்து லாபங்களும் 11-ம் இடம் குறிக்கும்.
12. வெளிநாட்டு கல்வி, வெளிநாட்டு மொழி வெளிநாட்டில் தங்கி படித்தல், தொலை தூரம் சென்று படித்தல் ஆகியவை 12-ம் இடம் தெரிவிக்கும்.

கிரகங்களின் காரகங்கள்...

சூரியன்: சூரியன் ஒளியை வெளியிடும் கிரகமாகும். D24-ல் சூரியன் ஜாதகரின் அறிவு ஒளியை வெளிபடுத்தும் கிரகமாகக் கொள்ள வேண்டும். சூரியன் D24-ன் லக்னத்தில் 5 (அ) 9 இல் அமைவது கல்வியில் சிறப்பைத் தரும்.
சந்திரன்: சந்திரன் ஜாதகரின் மனதை குறிக்கும் கிரகமாகும். கல்விக்கு மனம் என்பது மிக முக்கியமாகும். மனம் சமநிலையில் இருந்தால் மட்டுமே ஜாதகரால் கல்வியில் நன்கு தேர்ச்சி அடைய முடியும். 24இல் சந்திரன் சர ராசிகளில் நின்றால் ஒரு கருத்தை படிக்கும் பொழுது அதை நன்கு சிந்திக்காமல் அடுத்த கருத்துக்கு சென்று விடுவார். ஸ்திர ராசியில் நின்றால் ஜாதகர் அக்கருத்தை ஆழ்ந்து சிந்திப்பார். உபய ராசியில் நின்றால் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையாகும்.
புதன்: தான் கற்ற கல்வியை முறையாக தன்னுடைய வாக்கின் மூலம் வெளிப்படுத்துவது புதனாகும். D24 இல் புதன் நன்கு அமைந்தால் மட்டுமே வாக்கு சாதுர்யம் உண்டாகும். தான் புரிந்துக் கொண்டதை எழுத்து பூர்வமாகவும் வெளிப்படுத்துவது புதனாகும். 
குரு: ஜாதகரின் புத்தி கூர்மையை நிர்ணயிப்பது குருவாகும். புத்தி கூர்மை உடையவர்கள் மட்டுமே குரு ஸ்தானத்தில் நின்று மற்றவர்களுக்கு உபதேசிக்க முடியும். குரு உச்சமடைந்தால் வடமொழியில் உள்ள நமது சாஸ்திரங்களை வேதங்கள், ஜோதிடம் ஆகியவற்றைப் படிக்க தூண்டும் ஜாதக அமைப்பைப் பெறலாம். D24-ல் குரு நன்றாக அமைந்தால் மட்டுமே புத்தி கூர்மை உண்டாகும்.
கேது: மறைந்துள்ள உண்மையை வெளி கொண்டு வரும் தன்மை கேதுக்கு உண்டு. எனவே 5, 9 ஆகிய பாவங்களில் கேது தொடர்பு பெறுதல் பல மறைந்த உண்மைகளை வெளி உலகத்திற்கு கொடுக்கும்.
செவ்வாய் : செவ்வாய் ஒரு நெருப்பு கிரகமாகும். பொறியாளர்களுக்கு செவ்வாய் சிறப்பாக அமைய வேண்டும். செவ்வாய் தர்க்கரீதியாகவும், பகுப்பாய்வு முறையில் சிந்தித்து காரணகாரியங்களை தெளிவுப்படுத்தும் கிரகமாகும். எனவே தொழில்நுட்பத்தை செவ்வாய் கிரகத்தின் துணைக் கொண்டு அறிய முடியும்.

விதிகளும் விளக்கங்களும்:

1. D24-ன் 4-ம் வீடும், 4-ம் வீட்டு அதிபதியும் நன்றாக அமைய வேண்டும். இவை நன்றாக அமைந்து விட்டால் நல்ல கல்வியை தரும். அஸ்தமனம், கிரகயுத்தம், கிரகணம் ஆகியவைகளினால் பாதிக்கப்பட்ட கிரகங்களில் வீடுகளில் D24-ன் 4-ம் பாவகம் அமைய கூடாது. அப்படி அமைந்தால் கல்வி சிறப்பாக அமையாது. 4-ம் அதிபதியும் 3, 6, 8, 12-ல் நிற்க கூடாது. நின்றால் கல்வியில் தடைகள் ஏற்படும். 
2. D1-ன் 4-ம் அதிபதி D24-ல் 3, 6, 8, 12–ம் வீடுகளில் அமைய கூடாது. பலமிழந்த கிரகங்களின் வீடுகளில் அமையக் கூடாது. நீச்சம், பகை அடையாமல் இருக்க வேண்டும். 4–ம் அதிபதி நன்றாக அமைந்தால் மிக விரைவில் ஜாதகர் கல்வியில் சிறந்து விளங்குவார். உச்சம், ஆட்சியில் இருப்பது சிறப்பு. கேந்திர ஃ திரிகோணங்களில் நிற்பது சிறப்பை தரும்.
3. D24-ன் லக்னம், லக்னாதிபதி நன்றாக அமைய வேண்டும். இரண்டும் பலமிழந்த கிரகங்களின் வீடுகளில் அமைய கூடாது. மேலும் 3, 6, 8, 12 லக்னாதிபதி நின்றாலும் கல்வியில் சிறப்பு ஏற்படாது. 
4. D24-ன் 1, 2, 4, 5, 9-ம் வீட்டு அதிபதிகள் ஒன்றுக்கொன்று ஏதேனும் ஒரு வகையில் தொடர்பில் இருப்பது சிறந்த கல்வியை ஜாதகருக்கு தரும்.
5. சூரியன், சந்திரன், புதன், செவ்வாய், குரு, கேது முதலிய கிரகங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருப்பது சிறந்த கல்வியை ஜாதகருக்கு தரும்.
6. செவ்வாய் சுக்கிரன் வீட்டில், நட்சத்திரத்தில் இருப்பது, இருவருக்கும் பார்வை இணைவு மூலம் தொடர்பு ஏற்பட்டால் நல்ல பொறியாளராவார். அல்லது சனி ஆட்சி உச்சம் பெற்றாலும் சிறந்த பொறியாளராவார்.

சதுர்விம்சாம்சம் அல்லது D24 குறித்த இக்கட்டுரையின் அடுத்த பாகம் நாளை விரிவாக வெளியிடப்படும்.

தொடரும்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com