சென்னையில் டிசம்பர் மாதத்தில் நிகழும் பேச்சுக் கச்சேரி! (அழைப்பிதழ் இணைப்பு)

தமிழ் இசை, புத்தகத் திருவிழா, உணவுத் திருவிழா என டிசம்பர் மாதம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே நடைபெற ஆரம்பித்துள்ளன.
சென்னையில் டிசம்பர் மாதத்தில் நிகழும் பேச்சுக் கச்சேரி! (அழைப்பிதழ் இணைப்பு)

தமிழ் இசை, புத்தகத் திருவிழா, திரை விழா, உணவுத் திருவிழா என டிசம்பர் மாதம் முழுவதும் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே நடைபெற ஆரம்பித்துள்ளன. கலாச்சார திருவிழாவாக நடைபெறும் இத்தகைய நிகழ்வுகளில், தமிழ் பாராம்பரியத்தின் பல்வேறு அம்சங்களையும் முன்னிறுத்த வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. கச்சேரி என்றாலே அது இசைக் கச்சேரியாக மட்டும் இருக்க வேண்டுமா என்ன என்ற கேள்வியுடன், தொடர் சொற்பொழிவுகள் கூட, கச்சேரிகள்தான் என்ற மையக் கருத்தை முன்வைத்து தமிழ் பாராம்பரிய அறக்கட்டளை பேச்சுக் கச்சேரி என்ற தொடர் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தியது. தொடர் பேச்சுகள் மேற்கொள்வதுடன், பல்வேறு தளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, விவாதங்களை ஆரம்பிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதுதான் பேச்சுக் கச்சேரி. கடந்த ஐந்தாண்டுகளில் ஏராளமான வரலாற்று அறிஞர்கள், ஓவியக் கலைஞர்கள், தொழில் நுட்ப அறிஞர்கர்களை அழைத்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2011 டிசம்பரில் முதல் பேச்சுக் கச்சேரி ஆரம்பமானது. 

இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் பேச்சுக் கச்சேரி நிகழ்ச்சி இன்று (15 டிசம்பர் 2018) மற்றும் நாளை (16 டிசம்பர் 2018) ஆகிய இரண்டு நாட்கள் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை 'சோழவளநாடு கலையுடைத்து’என்ற தலைப்பில் தமிழ் பாராம்பரிய அறக்கட்டளை ஒழுங்கமைத்துள்ளனர்.

நிகழ்ச்சி அழைப்பிதழ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com