தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!

மேற்கண்ட 10 வாசகிகளும் நாளை சென்னை, விருகம்பாக்கம், மெட்ரோ மாலில் இருக்கும் ஐநாக்ஸ் திரையரங்கில் நடைபெறும் இறுதிச் சுற்றுப் போட்டியில் கலந்து கொள்வார்கள்.
தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!


தைத்திருநாளை முன்னிட்டு தினமணி இணையதளம் சார்பாக ரங்கோலி போட்டி ஒன்றை அறிவித்திருந்தோம். ரங்கோலி கோலப்போட்டி என்றதும் அறிவித்த முதல்நாளிலிருந்து போட்டிக்கான இறுதி நாள் வரை தினமணியின் வாசகிகள் அதற்கு அளித்து வந்த வரவேற்பு அபிரிமிதமானது. தமிழகம் முழுவதிலுமிருந்து...  எங்களை வந்தடைந்த கோலங்கள் அனைத்துமே வெகு அழகானவை. மிகுந்த கலைநுட்பம் கொண்டவை. எதைத் தேர்ந்தெடுப்பது? எதை விடுப்பது? என்ற முடிவுக்கு அத்தனை எளிதாக வந்து விட முடியவில்லை. அத்தனையும் அருமையான கோலங்கள். அந்தக் கோலங்களில் வெளிப்பட்டது அதன் நேர்த்தியும் அழகும் மட்டுமல்ல, அதைச் சிரத்தையுடன் போட்டிக்காக அனுப்பிய வாசகிகளின் மெனக்கெடலும் ஈடுபாடும் தான். அந்த ஈடுபாடும், மெனக்கெடலும் எங்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டது. 

போட்டிக்கான இறுதிநாள் நெருங்க, நெருங்க சென்னை தாண்டி,  வெளிமாவட்ட வாசகிகள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது ரங்கோலிகளை அனுப்பி இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் தினமணியின் நெஞ்சார்ந்த நன்றிகள் பல உரித்தாகட்டும். ஆனால் போட்டிக்கான விதிகளின் படி இறுதிச் சுற்றில் 10 நபர்களை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டியிருந்ததால், வந்து குவிந்த ரங்கோலிகளில் இருந்து சிறந்த 10 என நடுவர் குழு தேர்ந்தெடுத்த கோலங்களை இங்கே வாசகர்கள் முன்பு பார்வைக்கு வைக்கிறோம்.

இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்படாத கோலங்கள் தினமணி இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில், புகைப்படப் பிரிவின் கீழ்  அவற்றை அனுப்பிய வாசகிகளின் புகைப்படத்துடன் ஃபோட்டோ கேலரியாக  கூடிய விரைவில் உருவாக்கம் பெறவிருக்கிறது. ஆதலால் எந்த ரங்கோலியும் மிஸ் ஆகப்போவதில்லை. எல்லாமே தினமணி.காமில் வெளியிடப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகளும் மற்றும் அவர்களது ரங்கோலிகளும்...

1. அனுராதா கமலக்கண்ணன்...

2. S.R. வித்யா

3. ரெமா ரமணி

4. வனஜா ராதாகிருஷ்ணன்

5. M.மாலா

6. சந்திரா ரங்கராஜ்

7. குணசெல்வி

8. ஷாலினி முகுந்தன்

9. வள்ளியம்மை

10. விஜயலட்சுமி

வெற்றி பெற்ற வாசகிகள் அனைவருக்கும் தினமணியின் வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்!

மேற்கண்ட 10 வாசகிகளும் நாளை சென்னை, விருகம்பாக்கம், மெட்ரோ மாலில் இருக்கும் ஐநாக்ஸ் திரையரங்கில் நடைபெறும் இறுதிச் சுற்றுப் போட்டியில் கலந்து கொள்வார்கள். அவர்களது ரங்கோலிகளில் சிறந்த மூன்று தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். இறுதிச்சுற்றில் பங்குபெறும் அனைத்து வாசகிகளுக்கும் சிறப்புப் பரிசுகளும் உண்டு!

வாழ்த்துக்களுடன்

தினமணி இணையதளக் குழு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com