சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டுபவர்களே கொஞ்சம் நில்லுங்கள்.. இது எங்க ஏரியா!

அவர்களை மாறச் சொல்லுங்கள் நாங்கள் மாறுகிறோம் என்பது சினிமா வசனமாக இருக்கலாம். ஆனால் மாற்றம் என்பது நம்மிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்பதே சித்தாந்தம்.
சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டுபவர்களே கொஞ்சம் நில்லுங்கள்.. இது எங்க ஏரியா!

அவர்களை மாறச் சொல்லுங்கள் நாங்கள் மாறுகிறோம் என்பது சினிமா வசனமாக இருக்கலாம். ஆனால் மாற்றம் என்பது நம்மிடம் இருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்பதே சித்தாந்தம்.

சித்தாந்தம், வேதாந்தம் எல்லாம் சொல்லப் போகும் தகவலுக்கு சம்பந்தமில்லை. ஆனால் நமக்கும் சொல்லப் போகும் விஷயத்துக்கும் சம்பந்தம் இருக்கு.

சாலைப் போக்குவரத்து நெரிசல் என்பது எல்லோருமே அனுபவித்திருக்கும் தவிர்க்க முடியாத தர்மசங்கடம்தான். ஆனால், இரு சக்கர வாகன ஓட்டிகளை விடவும், நடந்து செல்பவர்களை விடவும் அதிகம் பாதிப்புக்குள்ளாவது சைக்கிள் ஓட்டுபவர்கள்தான்.

சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் சென்னை நகரின் முக்கியப் பகுதிகளில் சுமார் 17 கி.மீ. தூரத்துக்கு சாலையில் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கான பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது, சுமார் ரூ.36 லட்சம் செலவில்.

இதனால் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு ஏதேனும் நன்மை வாய்த்ததா? அவர்கள் இந்த பாதைகளில் சிரமம் இன்றி பயணிக்கிறார்களா? இல்லை. எதுவும் மாறவில்லை.

ஒவ்வொரு 200 மீட்டருக்கும் இடையே பச்சை தெர்மோபிளாஸ்டிக் நிற பெயிண்டால் சாலையில் சைக்கிள் அடையாளம் ஏற்படுத்தப்பட்டு, இது சைக்கிள் ஓட்டிகளுக்கான பாதை என்று தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்து நெரிசல் இல்லாத அதிகாலை நேரத்தில் மட்டுமே இப்பாதையில் சைக்கிள் ஓட்டிகள் நிம்மதியாக செல்ல முடிகிறது.

மற்றபடி இந்த பாதையை ஆக்ரமிக்க யாரும் தயக்கம் காட்டுவதில்லை. வாகனங்களை நிறுத்துவது முதல், கார், ஆட்டோ என எந்த வாகன ஓட்டியும் இந்தப் பாதையைப் பயன்படுத்த எப்போதும் யோசிப்பதே இல்லை. 

இது பற்றி ஒருவர் கூறுகையில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சாலையில் வாகனங்கள் நின்றிருக்கும் போது நாங்கள் மட்டும் அவர்களைக் கடந்து செல்வதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. முதல் கட்டமாக ஒரு காரோ அல்லது ஆட்டோவோ இந்த பாதையை ஆக்ரமித்து நின்று கொள்ளும். அவ்வளவுதான் அவர்களுக்குப் பின்னால்தான் நாங்கள் நிற்க வேண்டும் என்கிறார்.

இது பற்றி மற்றொரு இளைஞர் கூறுகையில், ஒரு முறை சைக்கிளை தூக்கிக் கொண்டு நடைமேடைக்கேச் சென்றுவிட்டேன். அவ்வளவு வேகமாக இப்பாதையில் லாரி ஒன்று வந்தது. அதிலும் ஆட்டோக்காரர்கள் சைக்கிள் ஓட்டிகளை மதிப்பதே இல்லை என்கிறார்.

இளைஜி ஒருவர் கூறுகையில், கே.கே. நகரில் சைக்கிளுக்கான பாதையைத்தான் வாகன நிறுத்துமிடமாகப் பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம்சாட்டுகிறார்.

சைக்கிளுக்கான பாதையில் மற்ற வாகனங்கள் பயணிக்காமல் தடுக்க சென்னை மாநகராட்சி தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

எப்போதும் நாம் முன்னாடி சென்றால் போதும் என்று முன்னேறிக் கொண்டே இருக்காமல், நம்முடன் பயணிப்பவர்களுக்கும் இது பொதுவான சாலைதான், அவர்களுக்கான உரிமைகளை நாம் பறிக்கக் கூடாது என்று உணரும் தருணம் வந்துவிட்டது. முதலில் மாற்றத்தை நம்மிடம் இருந்தே ஏற்படுத்துவோம். பிறகு மற்றவர்களும் மாறுவார்கள். 

சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுவதை விட்டுவிட்டு, ராக்கெட் ஏவுதலை விடவும் சவாலான விஷயம், போக்குவரத்து நெரிசலான சாலையில் சைக்கிள் ஓட்டுவதுதான் என்பதை முதலில் உணருங்கள்.

சைக்கிள் கேப்பில் சைக்கிள் மட்டுமே செல்லட்டும். கொஞ்சம் வழிவிடுங்கள்...
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com