ஜூன் 10, 2018 ல் கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது விழா!

‘இயல் விருது’ என்றழைக்கப்படும் இந்த விருது பாராட்டுக் கேடயமும் 2500 டொலர்கள் பணப்பரிசும் கொண்டது. புனைவு, அபுனைவு, கவிதை, தமிழ், தகவல் தொழில் நுட்பம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளிலும் வருடா வருடம் பரிசு
ஜூன் 10, 2018 ல் கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது விழா!

கனடா தமிழ் இலக்கியத் தோட்ட இயல் விருது விழா, ஞாயிற்றுக்கிழமை  ஜூன் 10-ம் தேதி  2018 அன்று ஆறு மணிக்கு டோரொண்டோவில் நடைபெறுகிறது.
 

கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள்  மூலம் 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் இயங்கி வரும் எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையான  'இயல் விருது' வழங்கப்படுகிறது. இது 2500 கனடிய டாலர் மதிப்பு கொண்டது. அதைத் தொடர்ந்து  'வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்' நாவலுக்கான புனைவுப் பரிசு எழுத்தாளர் தமிழ்மகன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அபுனைவுப் பரிசு பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களுக்கும், கவிதைப் பரிசு பா. அகிலன் அவர்களுக்கும், மொழிபெயர்ப்பு பரிசு டி.ஐ. அரவிந்தனுக்கும், ஆங்கில இலக்கியப் பரிசு அனுக் அருட்பிரகாசத்துக்கும் வழங்கப்படுகிறது. இவை 500 கனடிய டாலர் மதிப்பு கொண்டவை. சர்வதேச அளவில் வழங்கப்படும் இந்த விருது உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் கௌரவம் மிக்கதாகப் போற்றப்படுகிறது.  விழாவின் முதன்மை விருந்தினர்களாக சிறப்பிப்பவர்கள்;  தண்ணீர் திரைப்படப் புகழ் 'தீபா மேத்தா' மற்றும் நியூ யோர்க் ஸ்டோனி புரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிய முனைவர் பாலா சுவாமிநாதன்.


கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளையாகும். அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்பு செய்வது, தமிழ், ஆங்கில நூல்களின் மொழிபெயர்ப்பை ஊக்குவிப்பது, மாணவர் கல்விக்கு புலமைப் பரிசில் வழங்குவது, தமிழ் பட்டறைகள் ஒழுங்கு செய்வது, கனடிய நூலகங்களுக்கு இலவசமாக தமிழ் நூல்கள் அளிப்பது போன்ற சேவைகள் இதனுள் அடங்கும். இந்த இயக்கத்தின்
முக்கியமான பணி வருடா வருடம் உலகத்தின் மேன்மையான தமிழ் இலக்கிய சேவையாளர் ஒருவருக்கு வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது வழங்கி கௌரவிப்பதாகும். 

‘இயல் விருது’ என்றழைக்கப்படும் இந்த விருது பாராட்டுக் கேடயமும் 2500 டொலர்கள் பணப்பரிசும் கொண்டது. புனைவு, அபுனைவு, கவிதை, தமிழ், தகவல் தொழில் நுட்பம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளிலும் வருடா வருடம் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்கும் சிறந்த மாணவருக்கு ஆயிரம் டாலர் புலமைப் பரிசிலும் உண்டு. வருடாவருடம் ரொறொன்ரோ பல்கலைக் கழகத்துடன் இணைந்து தமிழ் இலக்கியத் தோட்டம் தமிழ் அறிஞர்களின் விரிவுரைகளுக்கும் ஏற்பாடு செய்கிறது. அத்துடன் மறக்கப்பட்ட நிலையில் உள்ள நாட்டுக்கூத்து போன்ற கலைகளுக்கு புத்துயிரூட்டும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

2001 ஆம் ஆண்டு முதல் 2017 வரை கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் இயல்விருது பெற்றோர் பட்டியல்...

2001 - சுந்தர ராமசாமி
2002 - கே.கணேஸ்
2003 - வெங்கட் சாமிநாதன்
2004 - இ. பத்மநாப ஐயர்
2005 - ஜோர்ஜ் எல்.ஹார்ட்
2006 - தாசீசியஸ்
2007 - லக்‌ஷ்மி ஹோம்ஸ்ட்ரோம்
2008 - அம்பை
2009 - கோவை ஞானி என்றழைக்கப்படும் பழனிச்சாமி
2009 - ஐராவதம் மகாதேவன்
2010 -  எஸ்.பொன்னுத்துரை
2011 - எஸ்.ராமகிருஷ்ணன்
2012 - நாஞ்சில் நாடன்
2013 - டொமினிக் ஜீவா
2013 - தியோடர் பாஸ்கரன்
2014 - ஜெயமோகன்
2015 - இ. மயூரநாதன்
2016 - கவிஞர் சுகுமாரன்
2017 - வண்ணதாசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com