நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்காக ஜியோ அறிமுகப்படுத்தும் ‘டிஜிட்டல் சாம்பியன்கள்’ திட்டம்

உலகின் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சேவைகள் நிறுவனமான ஜியோ, இன்று டிஜிட்டல் சாம்பியன்ஸ்’
நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்காக ஜியோ அறிமுகப்படுத்தும் ‘டிஜிட்டல் சாம்பியன்கள்’ திட்டம்

உலகின் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சேவைகள் நிறுவனமான ஜியோ, தற்போது 'டிஜிட்டல் சாம்பியன்ஸ்’ எனும் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்துகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்வதுடன் அதன் செயல்முறைகளில் ஆர்வமுடைய இன்றைய இளைஞர்களை மேம்படுத்தும் நோக்கில் 5 வார காலப் பயிற்சி வகுப்புகளை உள்ளடக்கி இந்த 'டிஜிட்டல் சாம்பியன்ஸ்' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் வாயிலாக அவர்களை டிஜிட்டல் சாம்பியன்களாக உருவாக்கி,  அவ்வகையில் நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கவும் உதவுகிறது.

இந்தப் பாடதிட்டத்தின் மூலம், டிஜிட்டல் டெக்னாலஜி பற்றிய முழுமையான புரிதலை மாணவர்களுக்கு ஏற்படுத்தி, வருங்காலத்தில் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களில் இந்த டிஜிட்டல் தொழில்முறைகள் (SMBs) எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பதை மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படும். ஒரு டிஜிட்டல் கருவியின் மூலம் மாணவர்களுக்கு சிக்கல்களைத் தீர்க்கும் முறைகள் வழிநடத்தப்படும். இப்பயிற்சியினால் மாணவர்கள் நேரடியாக இதன் நடைமுறை பயன்பாடுகளைக் கற்றுக் கொண்டு, அதற்குரிய தீர்வுகளையும் கண்டடையும்படியாக திறமையுடன் செயல்படுவார்கள்.  

ஜியோ இந்த டிஜிட்டல் சாம்பியன்ஸ் திட்டத்தை மே 21, 2018-லிருந்து தொடங்குகிறது. அதன் முதல் கட்டமாக, நாடெங்கிலும் 4 குழுக்களுக்கு பயிற்சி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயிற்சி திட்டமும் 5 வாரங்கள் வரை நீடிக்கும். 800-க்கும் மேற்பட்ட நகரங்களிலுள்ள பயிற்சி மையங்களை பட்டதாரி மாணவர்கள் (undergraduate students) தங்களின் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆர்வமுள்ள மாணவர்கள் டிஜிட்டல் சாம்பியன்ஸ் திட்டத்தில் இணைய இந்தச் சுட்டியில் பதிவு செய்யலாம் https://careers.jio.com/Champions.aspx

ஒரு தொழில்நுட்ப நிறுவனம் என்ற வகையில், வளர்ந்து வரும் டிஜிட்டல் டெக்னாலஜிகளால் கிடைக்கக் கூடிய புதிய நல்வாய்ப்புகளை அனைத்து தொழில் நிறுவனங்களும் பெற விரும்புவதை ஜியோ அறிந்து வைத்துள்ளது. இந்த வாய்ப்புகளை பல்லாயிரம் இளநிலை பட்டதாரிகளுக்கு வழங்குவதன் மூலம், நாளைய டிஜிட்டல் இந்தியாவில் SMB-களின் வளர்ச்சிக்கு தேவையான டிஜிட்டல் நிபுணத்துவமுடைய திறமையான குழுவொன்றினை ஜியோ உருவாக்கிவிடும் என்பது நிச்சயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com