ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை கூட்டுதல் மற்றும் கிராம சபை கூட்ட செலவுகள்...

ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் காலாண்டிற்கு ஒருமுறை கூட்டுதல் மற்றும் கிராம சபை கூட்ட செலவுகள்...

1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 3ல் கிராமசபை மற்றும் அதன் நடவடிக்கை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பார்வை ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்துவ

அ) ஊரக வளர்ச்சி (சி 1)துறை அரசாணை (நிலை) ண் . 245 நாள் : 19.11.1998

படிக்க :

1. அரசு ஆணை (நிலை) எண்.150 ஊரக வளர்ச்சித் துறை, நாள்  17.7.1998.

 2. அரசு ஆணை (நிலை) எண்.152, ஊரக வளர்ச்சித் துறை, நாள் 20.7.98.

 3. மத்திய அரசு ஊரக வேலை வாய்ப்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் மாநில அமைச்சர் அவர்கள் 8.9.98 நாளிட்டு மாண்புமிகு தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடித எண். நே.மு.ஆர்.12011/4/98-பி.ஆர்.

ஆணை:

1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 3ல் கிராமசபை மற்றும் அதன் நடவடிக்கை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பார்வை ஒன்றில் படிக்கப்பட்ட அரசாணையில் ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடத்துவது குறித்து 1998ம் ஆண்டு தமிழ்நாடு கிராமசபை (குறைவெண் வரம்பு மற்றும் கூட்ட நடவடிக்கை நடைமுறை) விதிகள் வெளியிடப்பட்டுள்ளது. பார்வை இரண்டில் படிக்கப்பட்ட அரசாணையில் கிராமசபைக்கான செய்கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மேற்படி சட்டப்பிரிவு 3(2)ன்படி கிராமசபை கூட்டம் வருடத்தில் குறைந்தது இரண்டு முறையேனும் கூட்டப்பட வேண்டும். அந்த இரண்டு கூட்டங்களுக்கு இடையேயும் ஆறு மாத கால இடைவெளி இருத்தல் கூடாது என்பது வரையறுக்கப்பட்ட விதிகளாகும்.

6. பார்வை மூன்றில் படிக்கப்பட்ட கடிதத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டங்கள் அவ்வூராட்சி தலைவர்களால் ஒவ்வொரு காலாண்டிலும் முன்னரே குறிப்பிட்ட நாட்களில் கூட்ட வேண்டுமென்ற அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள ஊராட்சித் தலைவர்களுக்கு அறிவரைகள் வழங்குமாறு மத்திய அரசின் ஊரக வேலை வாய்ப்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மாநில அமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கிராமசபை கூட்டங்கள் தேசிய விடுமுறை நாட்களான ஜனவரி 26 (குடியரசு  தினம்), மே 1 (தொழிலாளர்  தினம்), ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்), அக்டோபர் 2 (காந்தி  பிறந்த நாள்) ஆகிய நாட்களில் நடத்தலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

7. மேலே பத்தி- 2ல் உள்ள மத்திய அரசின் கருத்துருவினை அதி  கவனமுடன் பரிசீலித்தது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 1998ம் ஆண்டு அக்டோபர் 2ம் நாள் மகாத்மா காந்தி  பிறந்த நாளன்று தமிழ்நாட்டிலுள்ள 12593 ஊராட்சிகளில் 12456 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் சிறப்பான முறையில் நடைபெற்றுள்ளன. மேலும் அக்கிராம சபை கூட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களும், அரசின் பல்வேறு அலுவலர்களும் கலந்துகொண்டு கிராம சபையின் நோக்கம் மற்றும் அரசின் அனைத்துத்துறை நலத் திட்ட பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள சூழ்நிலையில் மைய அரசின் கருத்துருவினை ஏற்று அடுத்து வரும் ஆண்டுகளில் ஒவ்வொரு காலாண்டிலும் கிராமசபை கூட்டத்தை குறிப்பிட்ட நாட்களில் கூட்டவும் அக்கூட்டத்தில் என்னென்ன பொருட்கள் விவாதத் ற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்பதை வரையறுக்கவும் அக்கூட்டங்களில் அரசு அலுவலர்கள் பற்றாளர்களாக (Nodal Officer)) கலந்துகொள்ள அனுமதிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி வரும் ஆண்டுகளில் கிராமசபை கூட்டங்கள் ஊராட்சித் தலைவர்களால் கூட்டப்படுவதற்கு அரசினால் தீர்மானிக்கப்பட்ட நாட்கள் மற்றும் அக்கூட்டத்திற்கான விவாத பொருட்கள் கீழ்கண்டவாறு நிர்ணயம் செய்யப்படுகின்றன.

கால அளவுவரையறுக்கப்பட்ட நாள்விவாதத்துக்கு எடுத்துக் கொண்ட பொருள்
முதல் காலாண்டு (ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள்தொழிலாளர் தினம் (மே முதல் நாள்)அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளின் கீழ் பயன்பெறும்பயனாளிகள் பட்டியல் மற்றும் ஊராட்சிகள் ஒப்புதல் அளித்த வளர்ச்சிப் பணிகள் கிராமசபைக் கூட்டத்திற்கு முன்னர் வைக்கப்படுதல்

இரண்டாம் காலாண்டு

(ஜூலை, ஆகஸ்டு, செப்டம்பர் ஆகிய மாதங்கள்

சுதந்திர தினம் (ஆகஸ்டுத் திங்கள் 15 ஆம் நாள்)வறுமை ஒழிப்புத் திட்டம் உட்படஅனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்களினால் தனிநபர் மற்றும் சமுதாயத்தினர் ஒவ்வொரு திட்டத்தின் கீழும் பயன்பெறும் தன்மையினை எடுத்துரைத்தல்
மூன்றாவது காலாண்டு (அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்கள் இரண்டாம் நாள்)

காந்தி பிறந்தநாள் (அக்டோபர் திங்கள், இரண்டாம் நாள்)

குடியரசு தினவிழா (ஜனவரி இருபத்தாறாம் நாள்)

1. ஊராட்சி மற்றும் அரசின் இதர துறைகள் மேற்கொள்ளும் வளர்ச்சிப் பணிகள் குறித்து இடைநிலைஆய்வு மேற்கொள்ளல்.

2.ஊராட்சியின் முந்தைய ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் வரவு, செலவுக் கணக்கின் மீதான தணிக்கை குறிப்புகள் கிராம சபைக் கூட்டத்தின் முன் சமர்பித்தல்.

 

நான்காவது காலாண்டு.

(ஜனவரி, ஃபிப்ரவரி, மார்ச் ஆகிய மாதங்கள்)

குடியரசு தினவிழா

ஜனவரித் திங்கள் 26 ஆம் நாள்.

ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக அடுத்து வரும் நிதியாண்டுக்கான திட்ட அறிக்கையினை கிராம சபைக் கூட்டத்தின் முன் வைத்து ஒப்புதல் பெறுதல்.

4. சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் கிராமசபை கூட்டம் நடைபெறும் நாட்களில் தங்கள் கீழ்பணிபுரியும் பல்வேறு துறை அலுவலர்களை பற்றாளர்களாக (Nodal Officer) அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கிராமசபை கூட்டம் முடிந்தவுடன் மாவட்ட ஆட்சியர்கள் தங்களது அறிக்கையை ஒரு வாரத்திற்குள் ஊரக வளர்ச்சி இயக்குநருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளை ஒருங்கிணைத்து காலாண்டிற்கு ஒருமுறை  அரசுக்கு அனுப்பி வைக்குமாறு ஊரக வளர்ச்சி இயக்குநர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

(ஆளுநரின் ஆணைப்படி)

இரமேஷ் சந்திர பண்டா 

      அரசு செயலாளர்

ஆ) உயர்நிலைக் குழு பரியதுரைகள் கிராம சபை கூட்டம் கிராம சபை கூட்ட செலவின வரம்பினை உயர்த்துதல்.

அரசாணை (நிலை) எண். 160 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் (ப.ரா.1) துறை நாள் : 30.9.2008

படிக்கப்பட்டவை:

1 அரசாணை (நிலை) எண்.245, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,

நாள் 19.11.1998.

2 அரசாணை (நிலை) எண்.76, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை,

நாள் 26.3.2000.

3 ஆணையர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி, கடிதம்

எண்.ந.க.58584/08/ப.ரா.அ.2.2, நாள் 2.9.2000

ஆணை

மேலே படிக்கப்பட்ட அரசாணை ஒன்றில் கிராம சபை ஒவ்வொரு ஆண்டிலும் குறைந்தது நான்கு முறையாவது, அதாவது ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15 மற்றும் அக்டோபர் 2 தே களில் நடத்தப்படவேண்டும் என்று ஆணையிடப்பட்டது. கிராம சபையினை நடத்த, கிராம ஊராட்சியின் அனுமதியின்படி, கிராம ஊராட்சி நிதியிலிருந்து, அதிகபட்சமாக ரூ.500/செலவு செய்ய கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அனுமதியளித்து படிக்கப்பட்ட அரசாணை இரண்டில் ஆணையிடப்பட்டது.

1. மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்களின் தலைமையிலான மூன்றாவது உயர்நிலைக் குழு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெறப்பட்டகோரிக்கைகளின் அடிப்படையில், கிராம சபை நடத்துவதற்கான செலவினத்தை ரூ.500/- லிருந்து ரூ.1,000/ஆக உயர்த்துவது என பரிந்துரைத்துள்ளது.

2. அதன் பொருட்டு, கிராம ஊராட்சி நிதியிலிருந்து கிராம சபை நடத்த 26.3.2000ம் நாளிட்ட ஊரக வளர்ச்சித்துறை, அரசாணை எண்.76 ன் படி ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.500/என்பது போதுமானதாக இல்லை என்றும், எனவே உயர்நிலைக்குழுவின் பரிந்துரையின்படி கிராம சபை நடத்துவதற்கான செலவினத்தின் வரம்பினை ரூ.1,000/ஆக உயர்த்தலாம் என்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் பரிந்துரைத்துள்ளார். மேலும் இதன் பொருட்டு ஏற்படும் செலவினத்தை கிராம ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளலாம் என்றும், இதனால் அரசுக்கு எந்தவித கூடுதல் நிதிச் சுமையும் ஏற்படாது என்றும் எனவே, இதன் பொருட்டு அரசாணை வெளியிடுமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் அரசினைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

3. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமாக பரிசீலனை செய்தது. அதன் அடிப்படையில் கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கான செலவினங்களை ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் அதிகபட்சமாக ரூ. 1,000/மட்டும் (ரூபாய் ஆயிரம் மட்டும்) செலவினம் மேற்கொள்ள ஊராட்சித் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கி ஆணையிடப்படுகிறது.

4. மேலே பத்தி  நான்கில் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் ஊராட்சியின் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் அரசு ஆணையிடுகிறது.

5. இவ்வரசாணை நிதித்துறையின் அ.சா.எண். 57584/ஊ.வ/08 நாள் 22.9.2008ன் இசைவுடன் வெளியிடப்படுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

க. அசோக் வர்தன் ஷெட்டி,

அரசு முதன்மைச் செயலாளர்

தொடரும்….

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com