நிஷா லோபோ.. உங்கள் ஒரு சொட்டுக் கண்ணீர் கீ-போர்டில் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!

முகத்தில் ஒரு பரு வந்துவிட்டால் அதைப் பற்றிக் கவலைப்படாத பருவ வயதினரே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இங்கே நாம் அறிந்து கொள்ளப் போகும் நிஷா லோபோவின் கதை விசித்திரமானது. 
நிஷா லோபோ.. உங்கள் ஒரு சொட்டுக் கண்ணீர் கீ-போர்டில் விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!


முகத்தில் ஒரு பரு வந்துவிட்டால் அதைப் பற்றிக் கவலைப்படாத பருவ வயதினரே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இங்கே நாம் அறிந்து கொள்ளப் போகும் நிஷா லோபோவின் கதை விசித்திரமானது. 

இதைப் படித்த பிறகு சுயக்காதல் நிச்சம் குறைந்து போகக் கூட வாய்ப்பிருக்கிறது. அதற்கும் தயாராகுங்கள்.

அலோமா - டேவின் லோபோவுக்கு 5 குழந்தைகள். சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு ஆதரவற்றோர் இல்லத்தில் நிஷாவைப் பார்த்த போது, மேலும் ஒருவருக்குக் கூட வீட்டில் இடமிருக்கிறது என்று அந்த தம்பதி உணர்ந்தனர்.

நிஷா.. மரபணு குறைபாட்டுடன் பிறந்த குழந்தை. பிறந்து 2 வாரங்களுக்குள் பெற்றோரால் கைவிடப்பட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டவள்.

நிஷா பற்றி எனது நண்பர் என்னிடம் கூறினார். லட்சத்தில் ஒரு குழந்தைக்கு ஏற்படும் மரபணு குறைபாட்டுடன் ஒரு குழந்தை அனாதையாக விடப்பட்டுள்ளது. ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருந்த நிஷாவின் தோல் காய்ந்து சுருங்கி இருந்தது. பிறக்கும் போதே கண் இமைகள் இல்லாமல் பிறந்த நிஷாவுக்கு பார்வைக் குறைபாடும் இருந்தது என்கிறார் அலோமா.

இந்த குழந்தையை தத்தெடுக்க விரும்பிய தம்பதி, தங்களது மூத்த பிள்ளைகள் இருவருடன் இல்லத்துக்குச் சென்று நிஷாவை பார்த்தனர். அப்போது, எனது இளைய மகள் நிஷாவைத் தூக்கி வைத்துக் கொண்டு நிச்சயம் இவளை நம்முடன் அழைத்துச் செல்வோம் என்றாள். எனது குடும்பத்தினர் கொடுத்த ஆதரவால் நிஷாவுடன் வீட்டுக்கு வந்தோம்.

முதலில் எங்களுடன் நெருங்க நிஷா பயந்தாள், முதல் 3 மாதங்கள் சவாலாக இருந்தது. இங்க் ஃபில்லர்கள் மூலம்தான் உணவளிக்கப்பட்டது. நிறைய பராமரிப்புத் தேவைப்பட்டது. மற்றக் குழந்தைகளைப் போலவே அவளும் வளர்ந்தாள். 

அடுத்த சவால் பள்ளி... பள்ளியில் அவளைச் சேர்க்க முயன்றோம். பெங்களூருவில் உள்ள டிரியோ உலக அகாடமி பள்ளியில் அவளைச் சேர்த்தோம். அங்கு அவளுடன் படிக்கும் பிள்ளைகள் அவளை மிக மரியாதையோடு நடத்தினர். பல தடைகளைத் தாண்டி தற்போது அவளுக்கு 18 வயதாகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவளை அந்த நிறுவனம் வரவேற்றுக் கொண்டாடுகிறது. சுய மரியாதைக்காக எப்போதும் போராடும் குணம் கொண்ட நிஷா தனது குடும்பத்தாரிடம் மிகவும் அன்பாக இருப்பவள். 

ஒரு முறை, ஒருவர் அவளை அசிங்கப்படுத்திவிட்டார். நான் மிகவும் கவலை அடைந்தேன். ஆனால் அவளோ எனக்கு ஆறுதல் சொல்லி, இது அவருடைய பிரச்னை அம்மா, என் பிரச்னை அல்ல என்று கூறினாள். அவள் வெளியே செல்லும் போது பெரியவர்கள் கூட ஒதுங்கிக் கொள்வார்கள். சிறுவர்களை அவள் அருகே விளையாட விட மாட்டார்கள். ஒரு முறை அவள் இருக்கும் விமானத்துக்குள்ளேயே வர மாட்டேன் என்று ஒருவர் கூற, மற்றவர்கள் எங்களுக்காக குரல் கொடுத்தனர்.

நான் யாரோ அதுவே தான் நான். நான் பார்க்கத்தான் இப்படி இருக்கிறேன், ஆனால் உண்மையில் நான் நல்ல மனுஷி என்று தன்னைப் பற்றி நிஷா கூறுகையில் கண்ணீர் கசிகிறது.

தன்னை ஒதுக்குபவர்களையும், அவமானப்படுத்துபவர்களையும் நிஷா ஒருபோதும் வெறுப்பதில்லை. அவர்களையும் ஏற்கவும் மதிக்கவும் ஏற்கனவே பழகியிருந்தாள். 

தங்களுக்குப் பிறகு நிஷாவின் எதிர்காலம் குறித்துத்தான் தற்போது அலோமா - லோபோ தம்பதியினர் கவலை கொள்கிறார்கள். மேலும், மரபணுக் குறைபாடு என்பது ஒருவரது மதிப்பைக் குறைத்துவிடாது, அவர்களும் மனிதர்கள்தான் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறார்கள். 

விக்ஸ் நிறுவனத்தின் டச் ஆப் கேர் என்ற விழிப்புணர்வு பிரசாரத்துக்காக எடுக்கப்பட்ட தத்தெடுப்பின் மகிழ்ச்சி என்ற குறும்படத்தின் மூலம் தற்போது நிஷாவின் கதை வெளிஉலகுக்குத் தெரிய வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com