மனித வணிகத்திற்கு எதிரான சட்டம்! உடனடி மற்றும் அத்தியாவசியத் தேவை

மனித வணிகம் என்ற சொற்றொடருக்கு ஒரு நாடு அல்லது பகுதியிலிருந்து வேறொன்றுக்கு, வழக்கமாக கட்டாய வேலை
மனித வணிகத்திற்கு எதிரான சட்டம்! உடனடி மற்றும் அத்தியாவசியத் தேவை

மனித வணிகம் என்ற சொற்றொடருக்கு ஒரு நாடு அல்லது பகுதியிலிருந்து வேறொன்றுக்கு, வழக்கமாக கட்டாய வேலை அல்லது வர்த்தக நோக்கில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது என்ற நோக்கங்களுக்காக சட்ட விரோதமாக மக்களை கொண்டு செல்வது / கடத்துவது என அகராதியில் பொருள் வரையறை செய்யப்படுகிறது. மனித வணிகம் என்பது என்ன என்று இந்த பொருள் வரையறையே மிக தெளிவாக எடுத்தியம்புகிறது.

தவறாக பயன்படுத்துவதற்காக சிறார்களை பணிக்கு ஆட்சேர்ப்பு செய்தல், போக்குவரத்து, மாற்றுகை, ஒளித்து தங்க வைத்தல் அல்லது பெறுதல் ஆகிய செயல்பாடுகள் சிறார்களின் / குழந்தைகளின் மனித வணிகத்தில் இடம்பெறுகிற செயல்பாடுகளாகும். குழந்தைகளின் வர்த்தகரீதியிலான பாலியல் சுரண்டல் என்பது பல வடிவங்களை எடுக்கலாம்; விபச்சாரத்திற்குள் ஒரு குழந்தையை பலவந்தமாக ஈடுபடுத்துதல் அல்லது வேறு வடிவங்களிலான பாலியல் செயல்பாடுகள் அல்லது குழந்தைகளை இடம்பெற செய்கிற ஆபாச படங்கள் ஆகியவை இதில் உள்ளடங்கும். குழந்தைகளை தவறாக பயன்படுத்துவதில், கட்டாய வேலை அல்லது சேவைகள், அடிமைத்தனம் அல்லது அடிமை வேலைகள் போன்ற நடைமுறைகள், உடல் உறுப்புகளை அகற்றுதல், சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு தத்து கொடுத்தல், சிறுவயதிலேயே திருமணத்திற்காக கடத்துவது. குழந்தை படைவீரர்களாக செயல்படுவதற்கு ஆட்சேர்ப்பு, பிச்சையெடுத்தல் அல்லது விளையாட்டுகளுக்கு பயன்படுத்துவதற்காக ஆட்சேர்ப்பு (ஒட்டக ஜாக்கி அல்லது கால்பந்தாட்ட வீரர்  போன்ற செயல்பாட்டுக்கு) ஆகியவையும் சிறார்களை தவறாக பயன்படுத்தலில் இடம் பெறுகின்றன. குழந்தைகளை தவறான நோக்கங்களுக்காக கடத்துபவர்கள் குழந்தைகளது பெற்றோர்களின் கடுமையான ஏழ்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். தாங்கள் வாங்கிய கடனை அடைப்பதற்கு அல்லது வருவாய் ஈட்டுவதற்கு பெற்றோர்கள் இத்தகைய நபர்களிடம் தங்களுடைய குழந்தைகளை விற்கக் கூடும் அல்லது தங்களது குழந்தைகளுக்கு சிறப்பான வாழ்க்கை மற்றும் திறன் பயிற்சிக்கான வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற ஆசை வார்த்தைகளினால் பெற்றோர்கள் ஏமாற்றப் படக் கூடும். வேலை, பாலியல் செயல்பாடுகள் அல்லது சட்ட விரோத தத்தெடுப்பு ஆகிய நோக்கங்களுக்காகவும் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை விற்கக் கூடும்.

உலகெங்கிலும், 4.5 மில்லியன் நபர்களின் பாலியல் நோக்கங்களுக்கான மனித வணிகம் பாதிக்கிறதென்று சர்வதேச தொழிலாளர் அமைப்பு குறிப்பிடுகிறது. இதில் சிக்கி பாதிக்கப்படுபவர்களுள் அநேகர் கட்டாயப்படுத்தப்படுகிற அல்லது சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகிற சூழ்நிலைகளில் சிக்கி தவிக்கின்றனர். இவற்றிலிருந்து தப்பிப்பது சிரமமானது மட்டுமல்ல; ஆபத்தானதும் கூட.

பாலியல் சுரண்டலுக்காக / தொழிலில் ஈடுபடுத்துவதற்காக ஆட்கடத்தல் செய்வதென்பது, உடல் ரீதியாக நிர்ப்பந்தித்தல், ஏமாற்றுதல் மற்றும் கட்டாயப்படுத்தப்படுகிற கடன் வழியாக அடிமைத்தனத்தில் சிக்க வைத்தல் போன்றவற்றை பயன்படுத்தி பாலியல் தொழிலுக்காக நாடுகளுக்குள் மற்றும் நாடுகளுக்கிடையே மக்களை, வழக்கமாக பெண்களை ஒழுங்கமைப்பு முறையின்கீழ் இடம்பெயரச் செய்வது என்றே முன்பு கருதப்பட்டது.

பாலியல் தொழிலுக்கான மனித வணிகத்தில், குடிபெயர்தலை ஏற்பாடு செய்வதற்கு அல்லது அனுமதிப்பதற்காக பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுமாறு, குடிபெயரும் ஒரு நபரை நிர்ப்பந்திப்பது உள்ளடங்கும். பாலியல் தொழிலுக்கான மனித வணிகம், உடல் சார்ந்த அல்லது பாலியல் சார்ந்த நிர்ப்பந்தம், ஏமாற்றுதல் அதிகாரத்தை / பதவியை தவறாக பயன்படுத்துதல் மற்றும் கடனின் வழியாக ஏற்பட்ட அடிமைத்தனம் ஆகியவற்றை பயன்படுத்துகிறது. இவ்வாறு கடத்தப்படுகிற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு, எடுத்துக்காட்டாக, வீட்டு வேலைக்காக அல்லது சேவைத் தொழில்துறையில் பணி வழங்கப்படும் என்ற உறுதிமொழி பெரும்பாலும் வழங்கப்படுகிறது; ஆனால், அதற்கு பதிலாக விபச்சார விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்படும் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவர்களது, பாஸ்போர்ட்களும் மற்றும் அடையாளச் சான்று ஆவணங்களும் அவர்களிடமிருந்து பறித்துக் கொள்ளப்படுகின்றன. அவர்களை வாங்குவதற்காக கொடுத்த விலை அத்துடன் அவர்களது பயணம் மற்றும் விசா கட்டணங்களுக்கான செலவு ஆகியவற்றை விபச்சாரத்தின் மூலம் சம்பாதித்து தந்ததற்கு பிறகே அவர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்ற வாக்குறுதி தரப்படுகிறது. பல நேரங்களில் அவர்கள் அடித்து உதைக்கப்படுகின்றனர் அல்லது காவலில் வைக்கப்படுகின்றனர்.

கட்டாய திருமணம் :

கட்டாயம் திருமணம் என்பது, திருமண பந்தத்தில் ஈடுபடும் நபர்களுள் இருவரது அல்லது ஒருவரது, சுதந்திரமாக வழங்கப்பட்ட சம்மதம் இல்லாமலேயே நடைபெறுகிற திருமணமாகும். அடிமைப்பணி திருமணம் என்பது, அந்த திருமணத்திற்குள் விற்கப்படுகிற, மாற்றப்படுகிற அல்லது சுவீகரிக்கப்படுவதை உள்ளடக்கிய ஒரு திருமணம் என பொருள் வரையறை செய்யப்படுகிறது. 'கட்டாய திருமணத்திற்காக குழந்தைகளை / சிறார்களை கடத்துவது என்பது, மனித வணிகத்தின் மற்றுமொரு வெளிப்பாடாகவே இருக்கிறது; குறிப்பிட்ட தேசிய இனங்கள் அல்லது நாடுகளுக்கு மட்டும் இது உரியதல்ல.’   

கட்டாய திருமணம் என்பது குறிப்பிட்ட சில சூழல்களில் மனித வணிகத்தின் ஒரு வடிவமாக இருக்கக் கூடும். ஒரு பெண் வெளிநாட்டுக்கு அனுப்பப்படுவாரானால், திருமண பந்தத்திற்குள் கட்டாயமாக திணிக்கப்பட்டிருப்பாரானால் மற்றும் அவளது புதிய கணவருடன் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டிருப்பாரானால், அப்போது, அவளது அனுபவமானது, பாலியல் செயல்பாட்டுக்கான மனித வணிகமாகும். புதிதாக திருமணமான மணப்பெண், அவளது கணவரால் மற்றும் / அல்லது அவரது குடும்பத்தினரால் ஒரு வீட்டு பணியாளராக நடத்தப்படுவாரானால், அப்போது இது கட்டாயப் பணிக்கான மனித வணிகத்தின் ஒரு வடிவமாக இருக்கும்.

வேலைக்கான மனித வணிகம் என்பது, கட்டாய வேலை மற்றும் சேவைகளுக்காக மனிதர்களை இடம்பெயர செய்வது, கொத்தடிமைத் தொழில்முறை, விருப்பமில்லாத அடிமைப்பணி, வீட்டு வேலை மற்றும் குழந்தைத் தொழிலாளர்முறை ஆகியவை இதில் உள்ளடங்கும். வேலைக்கான மனித வணிக செயல்பாடு, பெரும்பாலும், வீட்டு வேலை, விவசாயம், கட்டுமானப் பணி, உற்பத்தி மற்றும் கேளிக்கைத் துறை ஆகிய தளங்களில் நிகழ்கிறது; குடிபெயரும் தொழிலாளர்கள், சமூகப் பொருளாதார ரீதியில் கடைநிலையில் உள்ளவர்கள் மற்றும் பழங்குடியினர் இதில் சிக்கி பாதிப்படைபவர்களாக குறிப்பாக இருக்கின்றனர். மக்களை ரகசியமாக கொண்டு செல்லும் கடத்தல் செயல்பாடுகளும் அவர்களது வேலையை தவறாக பயன்படுத்துவதற்காக இந்த போக்குவரத்தில் ஈடுபடும் நபர்களுக்கும் தெரிந்திருக்கிறது. எ.கா., போக்குவரத்து பணியில் ஈடுபடுவோர்களாக.

உடல் உறுப்புகளில் வர்த்தக செயல்பாடும் மனித வணிகத்தின் ஒரு வடிவமே. இது பல்வேறு வடிவங்களை எடுக்கக் கூடும். சில நேர்வுகளில், பாதிப்புக்கு உட்படுத்தப்படும் நபர் அவரது உடல் உறுப்புகளை வழங்குமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார். வேறு நேர்வுகளில் பணம் அல்லது பொருளுக்கு பதிலாக தனது உடலுறுப்பை விற்க ஒப்புக் கொள்கிறார். ஆனால் உறுதியளிக்கப்பட்ட பணம் தரப்படுவதில்லை அல்லது குறைவாக தரப்படுகிறது. இறுதியாக, பாதிப்புக்கு ஆளாகுபவருக்கு தெரியாமலேயே அவரது உடலுறுப்பானது அகற்றப்படக் கூடும். (பொதுவாக, அந்நபர் மற்றொரு மருத்துவ பிரச்னைக்காக / நோய்க்காக - உண்மையானதாகவோ அல்லது பிரச்னை / நோய் இருப்பதாக புனையப்பட்டோ சிகிச்சையளிக்கப்படும்போது) குடிபெயரும் தொழிலாளர்கள், குடியிருப்பு வசதியில்லாத நபர்கள் மற்றும் படிப்பறிவில்லாத நபர்கள், இந்த வகையான சுரண்டலுக்கு குறிப்பாக உட்படுத்தப்படுகின்றனர். உடல் உறுப்புகளில் வணிகம் என்பது, கீழ்வரும் பல குற்றவாளிகளை கொண்டு, ஒழுங்கமைவுடன் நடத்தப்படும் ஒரு குற்றமாகும் :

ஆட்சேர்ப்பு செய்பவர்

  • அழைத்துச் செல்பவர் (போக்குவரத்து)
  • மருத்துவ பணியாளர்கள்
  • தரகர்கள் / ஒப்பந்ததாரர்கள்
  • உறுப்புகளை வாங்குபவர்கள்

அடிமைத்தனம் என்பது, வெறும் ஒரு கனவு / கற்பனை சிந்தனையோ அல்லது கதையோ அல்ல சமீபத்தில் 72-வது சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடிய ஜனநாயக வரலாறு கொண்ட ஒரு நாட்டில் இது யதார்த்தமான உண்மையாகும்.

சமீபத்தில் தமிழ்நாட்டில் திருவள்ளுர் மாவட்டத்தில் ஒரு மரம் வெட்டும் தொழிலகத்தில் தமிழ்நாடு அரசின் அதிகாரிகளால் 3 குடும்பங்கள் மீட்கப்பட்ட நிகழ்விலிருந்து மிகவும் தெளிவாக வெளிப்படுகிறது. 'அப்போது 8 வயதாகும் கவிதா என்ற சிறுமி, வருவாய் கோட்ட அலுவலரின் மடியில் அமர்ந்திருந்த நிலையில், தான் பள்ளியில் படிக்க விரும்புவதாக’ கூறிய நிகழ்வு குறிப்பிடத்தக்கது.

உலகளாவிய அடிமைத்தன குறியீட்டு அட்டவணையில் 167 நாடுகளில் இந்தியா 53-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் நவீன அடிமைத்தனத்தின் பல்வேறு வடிவங்களில் 80 லட்சம் மக்கள் கடும் சிரமத்தோடு வாழ்ந்து வருவதாக நாங்கள் மதிப்பிட்டிருக்கிறோம். எனினும், 2016-ஆம் ஆண்டில் தேசிய குற்ற ஆவணப்பதிவகம், மனித வணிக குற்றச் செயல்கள் 8132 என்று மட்டுமே பதிவு செய்திருக்கிறது.

மிகச் சமீப காலம் வரை, அடிமைத்தனத்தில் தனிப்பட்ட நபர்கள் மற்றும் குடும்பங்கள் சிக்கியிருக்கின்றன என்று மட்டுமே நான் அறிந்திருந்தேன். அருணாச்சல பிரதேஷ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சமீபத்தில், உண்மை கண்டறியும் ஆய்வு பயணத்தை நான் மேற்கொண்டிருந்தேன். அருணாச்சல பிரதேஷ் மாநிலத்தில் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வருகின்ற ஒரு சமூகத்தையே சந்தித்து பேசுகின்ற ஒரு நேரடி அனுபவம் கடந்த வாரம் எனக்கு கிடைத்ததது.  இந்த உண்மை கண்டறியும் பயணத்தில் சல்லாங் பழங்குடியினர் என்று அறியப்படுகிற சமூகத்தில் 10,000-க்கும் அதிகமான நபர்கள் இருக்கின்றனர் என்பது எனக்கு வியப்பையும், அதிர்ச்சியையும் அளித்தது. விலங்குகளைப் போலவே வசிக்கின்ற இந்த பழங்குடி சமூகத்தினர், நிஷிஷ் என்று அழைக்கப்படுகின்ற மற்றொரு சாதி மக்களுக்கு முழுமையாக அடிமைப்பணி செய்பவர்களாக இருக்கின்றனர். மாலிக்ஸ் அல்லது முதலாளிகளுக்கே இவர்கள் சொந்தமானவர்கள் இவர்களது வாழ்க்கை, திருமணம், குழந்தைகள், கல்வி என ஒவ்வொரு விஷயமும் உயர் ஜாதி பழங்குடியினங்கள் என அழைக்கப்படும் இவர்களாலே தான் முடிவு செய்யப்படுகிறது. ஒரு பசு போன்ற வீட்டில் வளர்க்கப்படும் விலங்கான மிதுன் என்பதற்கு எதிரான ஒரு பண்டமாற்று முறையை பின்பற்றி இந்த இனத்து மக்கள் விற்கப்படுகின்றனர்.

அஸ்ஸாமைச் சேர்ந்த குழந்தைகள் கடத்தப்படுதல்

வீட்டு வேலை என்ற பெயரில் அஸ்ஸாமிலிருந்து மாநில எல்லையை தாண்டி அருணாச்சல பிரதேசத்திற்கு குழந்தைகள் கொண்டு செல்லப்படுவது, இது தொடர்பாக நாங்கள் நடத்திய கலந்துரையாடல்களில் அதிக கவனம் பெற்ற மற்றுமொரு பிரச்னையாகும். அஸ்ஸாமில் எல்லைப்புற மாவட்டங்களில் வசிக்கும் ஆதிவாசிகள் மற்றும் பழங்குடி இனத்தவரான விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்களே இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றனர். முற்போக்கான சட்டங்களுக்கு இந்தியா பிரபலமாக அறியப்படுகிறது. ஆனால், மனித வணிகம் என்பது, இன்னும் இதற்குரிய சட்டம் எதுவும் இயற்றப்படாத, செயல்படுத்தப்படாத தளமாகவே இருந்து வருகிறது.

சர்வதேச தொழிலாளர் நல அமைப்பின், நவீன அடிமைத்தனத்தை உலகளாவிய மதிப்பீடுகள் 2017 அறிக்கையின்படி, கட்டாய வேலையில் 24.9 மில்லியன் மற்றும் கட்டாய திருமணத்தில் 15.4 மில்லியன் நபர்கள் உட்பட நவீன அடிமைத்தனத்தில் 40.3 மில்லியன் நபர்கள் சிக்கித் தவிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மனிதர்களில் தவறான நோக்கங்களுக்காக இந்த வணிகம் என்பது அடிப்படை உரிமைகளை மீறுகிற உலகின் 3-வது மிகப்பெரிய ஒழுங்கமைவு கொண்ட குற்றச் செயலாக இருக்கிறது. இக்குற்றத்தை ஒடுக்குவதற்கோ, கலைவதற்கோ குறிப்பிட்ட சட்டம் எதுவும் இயற்றப்படவில்லை.

2015-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதியன்று மனித வணிகம் மீதான தேசிய கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங், 'இந்தியாவை மாடுகளைப் போல வணிகத்தில் விற்கப்படுகின்றனர் மற்றும் கொத்தடிமைத் தொழில்முறை இன்னும் வலுவாகவும், பரவலாகவும் இருந்து வருகிறது,’ என்று குறிப்பிட்டார். இது அதிக அதிர்ச்சியளிக்கிறது என்று கூறிய அவர், மனித வணிகத்திற்கு எதிரான செயல்பிரிவுகளை (AHTUs) வலுப்படுத்த உள்துறை அமைச்சகம், பல்வேறு மாநிலங்களின் ஒத்துழைப்போடு சேர்ந்து திருத்தியமைக்கப்பட்ட செயல்திட்டத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்று குறிப்பிட்டார். மனித வணிகத்தை எதிர்த்து போரிட்டு வெற்றி காண்பதற்கு என்ஜிஓ-க்கள் உட்பட இதில் அக்கறையுள்ள பல்வேறு நபர்கள் மற்றும் அமைப்புகளின் பங்கை இந்திய அரசும் மற்றும் உச்சநீதிமன்றமும் வலியுறுத்தியுள்ளன.

2030-ம் ஆண்டுக்குள் 1.84 கோடி கொத்தடிமைத் தொழிலாளர்களை விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வு வழங்க வேண்டுமென்ற தனது தொலைநோக்குத் திட்டத்தை அறிவித்திருப்பதன் மூலம் 2016-ம் ஆண்டு ஜுலை மாதத்தில், கட்டாய வேலையின் ஒரு தீவிர வடிவமான கொத்தடிமைத் தொழில்முறையின் பிரச்னையின் கடும் பாதிப்பு நிலையையும், தீவிரத்தையும் இந்திய அரசு உறுதிப்படுத்தியிருக்கிறது.

பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாடு துறையின் மாண்புமிகு அமைச்சர் மேனகா காந்தி அவர்களால் 2018-ம் ஆண்டு ஜுலை 2018-ம் தேதியன்று மனித வணிகத்திற்கு எதிரான சட்ட மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மனித வணிகத்திற்காக கடத்தப்படும் நபர்களை மீட்பது மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வளிப்பது மற்றும் இது நிகழாமல் தடுப்பது ஆகியவற்றுக்கு இந்த மசோதா வகை செய்கிறது. மனித வணிக பிரச்னையை சமாளிப்பதற்கு தென்-ஆசிய நாடுகள் மத்தியில் முன்னணி நாடாக இந்தியாவை ஆக்குவது இதன் நோக்கமாகும். மனித வணிகம், கட்டாய வேலை மற்றும் பாலியல் சுரண்டல் ஆகியவற்றை குறிப்பாக இலக்காகக் கொண்டு வகுக்கப்பட்டுள்ள முதல் தேசியளவிலான சட்ட மசோதாவாக இது இருக்கிறது.

மனித வணிகத்தை போராடி வெல்வதில் தான் கொண்டிருக்கும் பொறுப்புறுதியை வெளிப்படுத்துவதற்காக கீழ்கண்டவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய அரசை நாங்கள் வேண்டி கேட்டுக் கொள்கிறோம்:

  1. மனித வணிகத்தால் பாதிக்கப்படுபவர்களை விடுவிப்பதற்கு கால வரம்புடன் செயல் நடவடிக்கைகள்.
  2. மனித வணிகத்தால் பாதிக்கப்படுபவர்களின் கடன் / கடமைப் பொறுப்பின்மையை புதிய சட்டம் பாதுகாக்க வேண்டும்.
  3. மீட்பதற்கு, முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்வதற்கு மற்றும் பதிவு செய்வதற்கு, கைது செய்வதற்கு சான்றுகளை கைப்பற்றுவதற்கு, புலன் விசாரணை செய்வதற்கு மற்றும் வழக்கு தொடர்வதற்கு என ஒரு நேர்வின் அனைத்து செயல்பாடுகளிலும் மீட்பு மற்றும் புலன் விசாரணைக்கான அதிகாரங்களை கொண்டிருப்பதற்கு இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் AHTUs ளுக்கு அதிகாரமளித்தல்.
  4. மீட்கப்படுபவர்களுக்கும் மற்றும் அவர்களை சார்ந்து வாழ்பவர்களுக்கும் தங்குமிட மற்றும் உணவு வசதி உட்பட அதிகாரிகள், மீட்கப்படுபவர்கள் மற்றும் NGOக்களுக்கு ஆதரவு வழங்குவதற்காக கட்டாய பணியில் ஈடுபடுத்தப்படுகிற மாநிலங்களுக்கு இடையிலான வழக்குகளை ஒருங்கிணைப்பதற்கு உரிய நெறிமுறைகளும் மற்றும் நிதி ஆதாரங்களும் கிடைக்கப் பெறச் செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு இடையில் பாதிக்கப்பட்டவர்களை மாற்றுகை செய்கின்ற போது போதுமான காவல்துறையினரின் பாதுகாப்பு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
  5. வேலைக்கான மனித வணிகம் மற்றும் கொத்தடிமை தொழில்முறை உட்பட அனைத்து வடிவங்களிலான மனித வணிகத்தை போராடி வெல்வதில் NGOக்களை மிக முக்கிய பங்கை அங்கீகரிப்பது மற்றும் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது.
  6. மனித வணிகம் மீதான புதிய சட்டத்தை அமலாக்கம் செய்வதற்கு போதுமான நிதியையும் மற்றும் ஆதார வளங்களையும் ஒதுக்கீடு செய்வது.

மனித வணிகத்தின் மீதான இந்த புதிய மற்றும் விரிவான சட்டம் இயற்றப்படுவது, மனித வணிகத்தை எதிர்த்து போரிட தெற்கு ஆசிய நாடுகள் மத்தியில் தலைவராக இந்தியாவை இது நிலை நிறுத்தும். எஸ்ஃஎஸ்டி பிரிவினர், குடிபெயரும் தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற ஏழ்மையான மற்றும் வசதியற்ற சமூகத்தினர் உட்பட, அதிக பாதிப்புக்கு ஆளாகக்கூடிய நபர்களை பாதிக்கின்ற, பரவலாக இருந்து வருகிற, ஆனால் கண்ணுக்கு புலப்படாத இந்த கொடுங்குற்றத்தை எதிர்த்து தீவிரமாக செயல்படுவதில் தெற்கு ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் தலைமைத்துவ பங்கை இது உலகிற்கு எடுத்துக்காட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com