கொத்தடிமைத் தொழில்முறை குற்றம் குறித்து இந்திய தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் (IPC) 370(1)-ம் பிரிவு குறிப்பிடுவது என்ன?

இந்திய தண்டனைத் தொகுப்புச்சட்டத்தின் (IPC) 2013-ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டவாறு) 370-ம் பிரிவு,
கொத்தடிமைத் தொழில்முறை குற்றம் குறித்து இந்திய தண்டனைத் தொகுப்புச் சட்டத்தின் (IPC) 370(1)-ம் பிரிவு குறிப்பிடுவது என்ன?

முகவுரை

இந்திய தண்டனைத் தொகுப்புச்சட்டத்தின் (IPC) 2013-ம் ஆண்டில் திருத்தம் செய்யப்பட்டவாறு) 370-ம் பிரிவு, மனித வணிகத்திற்கான ஆட்கடத்தல் குற்றத்தை அறிமுகப்படுத்துகிறது. 1976-ம் ஆண்டு கொத்தடிமைத் தொழிலாளர் முறை (ஒழிப்பு) சட்டத்தின்படியான ஒரு குற்றம் எப்போது IPC 370-ம் பிரிவின்படியான ஆட்கடத்தல் குற்றமாகவும் ஆகிறது என்பதை இந்த குறிப்பு ஆராய்கிறது.

மனித வணிகத்திற்கான ஆட்கடத்தல் குற்றம் 

370-ம் பிரிவு, IPC -ல் இணைக்கப்படும் வரை, ‘ஆட்கடத்தல்’(Trafficking) என்ற சொல் இந்திய சட்டத்தில் தெளிவாக பொருள்வரையறை செய்யப்படவில்லை. மனித வணிக கடத்தலை, குறிப்பாக பெண்களை, கடத்தல் செய்வதை தடுப்பது, ஒடுக்குவது மற்றும் தண்டிப்பது (இதன்பின்பு ‘பலார்மோ நெறிமுறை (புரோட்டோகால்)’ எனப்படுவது) (இந்தியாவால் கையொப்பமிடப்பட்டு ஏற்புறுதி செய்யப்பட்டது) குறித்த நெறிமுறை பின்வருமாறு அர்த்தம் கொள்ளும் வகையில் பொருள் வரையறை செய்யப்பட்டது “(a) 'மனித வணிக கடத்தல்' என்பது அச்சுறுத்தல் அல்லது பலவந்தப்படுத்துவது அல்லது இதர வடிவங்களில் கட்டாயப்படுத்துவது, கடத்துவது, மோசடி செய்வது, ஏமாற்றுவது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது அல்லது பாதிப்புக்கு ஆளாகக் கூடிய ஒருவரின் நிலையை தவறாகப் பயன்படுத்துவது அல்லது வேறொரு நபர் மீது கட்டுப்பாடு கொண்டுள்ளவர் அவரின் ஒத்திசைவைப் பெறுவதற்கு அவரை சுரண்டும் நோக்கத்தில் பணம் அல்லது பயன் / ஆதாயம் கொடுத்தல் அல்லது பெறுதல் மூலம் ஆளெடுத்தல், ஆட்களை அனுப்பி வைத்தல், இடம் மாற்றுதல், புகலிடம் அல்லது ஆட்களை பெறச்செய்தல் என்று பொருள்படும். 'சுரண்டல் என்பதில்’ குறைந்தபட்சம், மற்றவர்களை  விபச்சாரத் தொழிலில் ஈடுபடச் செய்து அதை தனது சுயநலத்துக்காக பயன்படுத்துதல் அல்லது பிற வடிவங்களிலான பாலியல் சுரண்டல், கட்டாய வேலை அல்லது சேவைகள், அடிமைத்தனம் அல்லது அடிமைத்தனத்தை போன்ற செயல்முறைகள், அடிமை வேலை அல்லது உடல் உறுப்புகளை அகற்றுதல் ஆகியவை உள்ளடங்கும்.”

IPC-ன் 370-ம் பிரிவில் அடங்கியுள்ள மனிதவணிக கடத்தல் குறித்த பொருள்வரையறை, ‘பலார்மோ பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதை போலவே பெரும்பாலும் இருக்கிறது என்றாலும் சில முக்கியமான வேறுபாடுகளும் இதில் உள்ளன. IPC-ன் 370-ம் பிரிவு கீழ்வருமாறு மனிதவணிகத்திற்கான ஆட்கடத்தல் குற்றத்தை குறிப்பிடுகிறது :

1. அச்சுறுத்தல்கள் பயன்படுத்துவதன் மூலம் அல்லது 2. பலவந்தம் அல்லது வேறு ஏதும் வகை கட்டாயப்படுத்துதல் மூலம் அல்லது 3. கடத்துதல் மூலம் அல்லது 4. மோசடி அல்லது ஏமாற்றுதல் மூலம் அல்லது 5. அதிகார துஷ்பிரயோகம் மூலம் அல்லது 6 தூண்டுதல் மூலம் சுரண்டல் நோக்கத்திற்காக (ய) ஆட்களை வேலைக்கு எடுக்கக்கூடிய டி) அனுப்பி வைக்கக் கூடிய உ) புகலிடம் அளிக்கக்கூடிய ன) இடமாற்றம் செய்யக்கூடிய அல்லது ந) பெறக்கூடிய ஒரு நபர் அல்லது நபர்கள் எவராக இருந்தாலும் அவர் மனிதவணிக கடத்தல் குற்றம் புரிந்தவராவர். இதில் ஆளெடுக்கப்பட்ட, அனுப்பப்பட்ட, புகலிடம் அளிக்கப்பட்ட இடமாற்றம் செய்யப்பட்ட அல்லது பெறப்பட்ட ஆள் மீது கட்டுப்பாடு கொண்டுள்ள ஏதும் நபரின் ஒத்திசைவு பெற வேண்டியதை முன்னிட்டு பணம் அல்லது குற்றம் புரிந்தவராக (என்பதும் உள்ளடங்கும்) சுரண்டல் என்ற சொல்லில், ஏதும் உடல்சார்ந்த சுரண்டல் செயல் அல்லது ஏதும் வடிவில் பாலியல் சுரண்டல் செய்தல், அடிமைத்தனம் அல்லது அடிமை வேலை போன்ற செயல்கள் செய்தல் அல்லது பலவந்தப்படுத்தி உறுப்புகளை அகற்றுதல் உள்ளடங்கும். 2. மனிதவணிக கடத்தல் குற்றம் நடைபெற்றிருக்கிறது என்பதை நிர்ணயிப்பதற்கு பாதிக்கப்பட்டவரின் ஒத்திசைவு தேவையில்லை. 1

இந்த பொருள் வரையறை இரண்டு தனித்துவ வழிகளில் பலார்மோ புரோட்டோகாலிலிருந்து வேறுபடுகிறது. 370-ம் பிரிவு சுரண்டல் பொருள் வரையறையிலிருந்து 'கட்டாயப்படுத்தும் / பலவந்தப்படுத்தும் தொழில்முறை (forced labour) என்பதை நீக்கிவிடுகிறது. ஆட்கடத்தலுக்கு ஒரு வழிமுறையாக பாதிப்பு நிலையை அதிகார துஷ்பிரயோக செயலையும் 370-ம் பிரிவு, நீக்கிவிடுகிறது. இந்த ஆய்வுக் குறிப்பு, 'கட்டாயப்படுத்தும் / பலவந்தப்படுத்தும் தொழில்முறை (forced labour) என்ற சொற்றொடர் அகற்றப்பட்டதை மட்டும் கவனத்தில் கொள்கிறது.

ஒரு சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு மறு ஆய்வு செய்வதற்காகவும் மற்றும் ஒரு அவசரச் சட்ட வடிவில் ஒப்புதல் அளிப்பதற்காகவும் அரசுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. 'கட்டாய தொழில்முறை மற்றும் அதன் தொடர்புடைய பணிகள் (சேவைகள்)’ என்ற சொற்றொடர், 2013-ம் ஆண்டு குற்றவியல் சட்டம் அவசரச்சட்டத்தில் 'சுரண்டல்’ என்பதன் விளக்கத்தில் இணைக்கப்பட்டது. எனினும், துறை தொடர்புடைய உள்துறை விவகாரங்கள் குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு கலந்தாலோசித்து, அந்த சொற்றொடரை பொருள் வரையறையிலிருந்து நீக்கிவிடுவதற்கு முடிவு செய்தது. இதை நீக்குவதற்கான காரணம், 2012-ம் ஆண்டின் குற்றவியல் (திருத்த) சட்டம் சட்டமுன்வடிவின் மீதான உள்நாட்டு விவகாரம் குறித்த துறை தொடர்புடைய நாடாளுமன்ற நிலைக்குழுவின் நூற்று அறுபத்து ஏழாவது அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 'பிரிவு 370 மற்றும் 370யு ஆகிய பிரிவுகளில் ஆட்கடத்தல் பற்றி விவாதிக்கும்போது, சில உறுப்பினர்கள் “forced labour” அல்லது “services” ஆகிய சொற்களை தற்போதைய சட்டத்தில் பயன்படுத்துவது பற்றி சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த சட்டம், குறிப்பாக குற்றவியல் தாக்குதலுக்குரியது என்று கருதப்படுவதால், labour, forced labour, முதலியன தொடர்புடைய அனைத்து வகைமுறைகளும் வெவ்வேறு சட்டங்களில் உரியவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கருதப்பட்டது. உள்துறை செயலாளர் அவர்கள் நிலைக்குழுவின் கருத்தை ஏற்றுக் கொண்டு “forced labour” அல்லது நிலைக்குழுவின் கருத்தை ஏற்றுக்கொண்டு “forced labour” அல்லது “services” என்ற சொற்களை நீக்கிவிட்டு, அதை உரிய சட்டத்தின் கீழ் தனியாக நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறினார் எனினும், இந்த வகைமுறைகளை நீக்கும்போது, இந்த வகைமுறைகள் மற்றும் இது தொடர்புடைய குற்றங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்ற ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்தக் கூடாது என்று நிலைக்குழு கருதியது. அவை சரிநிகர் முக்கியத்துவம் உடையது என்றும் அவை தொடர்புடைய சட்டத்தின்படி உரியவாறு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்றும் நிலைக்குழு கருத்து தெரிவித்தது. இதையடுத்து, “physical exploitation (உடல் உழைப்பு சார்ந்த சுரண்டல்)” என்ற சொற்றொடர் சேர்க்கப்பட்டு “forced labour (கட்டாய / நிர்ப்பந்த வேலை)” என்ற சொற்றொடர் நீக்கப்பட்டது.

 1 Indian Penal code 1860

உடல்ரீதியாக சுரண்டல், அடிமைத்தனம் அல்லது அடிமைத்தனத்திற்கு நிகரான நடைமுறைகள், அடிமை வேலை ஆகியவை கொத்தடிமைத் தொழில்முறையைக் குறிக்கிறது:-

மேற்குறிப்பிட்டவை இருந்த போதிலும், IPC 370-ம் பிரிவில் உள்ளடங்கியபடி 'சுரண்டல்” என்ற சொல்லில் கொத்தடிமைத் தொழிலாளர்முறை உள்ளடங்கும் என்று இந்த குறிப்பு நிரூபிக்கிறது. பின்வரும் காரணங்களுக்காக, ஒரு கொத்தடிமைத் தொழில்முறை அமைப்பானது, உடல்ரீதியாக சுரண்டல், அடிமைத்தனம் அல்லது அடிமைத்தனத்திற்கு நிகரான நடைமுறைகள், அடிமை வேலை ஆகியவற்றின் அர்த்தத்திற்குள் வருகிறது :

1.            'ஒரு கொத்தடிமைத் தொழிலாளர் என்பவர், உண்மையிலேயே அடிமையாகிறார் மற்றும் ஒரு கொத்தமைத் தொழிலாளரின் சுதந்திரம் மற்றும் இயக்கம் என்பது அவருடைய வேலை விஷயத்தில் முற்றிலும் பறித்துக் கொள்ளப்படுகிறது மற்றும் கட்டாய உழைப்பு அவர் மீது திணிக்கப்படுகிறது,” என்று மேன்மை பொருந்திய இந்திய உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இந்திய உச்சநீதிமன்றம் ‘Beggar’ (அடிமைப்பணி) என்ற சொல்லை விளக்கும்போது, 'அடிமை, அடிமைப்பணி போன்ற” என்ற சொற்றொடரை கவனக்குறைவாக பொருள்வரையறை செய்துள்ளது. உச்சநீதிமன்றம் கூறுகையில், ‘begger’ (அடிமைப்பணி) என்ற சொல் ஆங்கிலமொழியில் பொது பயன்பாட்டில் உள்ள சொல் இல்லை. இது, மற்ற பல சொற்களைப்போலவே ஆங்கில சொல்லகராதியில் இடம்பெற்றிருக்கும். இச்சொல், இந்திய பு+ர்வீகத்தைச் சேர்ந்த ஒரு சொல் ஆகும். ‘begger’ (அடிமைப்பணி) என்ற சொல்லுக்கு துல்லியமான பொருள்வரையறை உருவாக்குவது மிகவும் சிரமமானதாகும். ஆனால், ஊதியம் எதுவும் பெறாமலே ஒருவரை வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தக்கூடிய ஒரு வகை பலவந்த தொழிலாளர் முறை என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது. ‘begger’ (அடிமைப்பணி) என்பது, செய்யும் வேலைக்கு ஊதியம் கொடுக்காமலேயே ஒரு அரசாங்கத்தால் அல்லது அதிகாரத்திலுள்ள ஒருவரால் பெறப்படும் வேலை அல்லது சேவை என்று மோல்ஸ்-வொர்த் விவரணை செய்கிறார்.3

நீதித்துறை மற்றும் வருவாய்த்துறை சொற்களுக்கான வில்சன்ஸ் அருஞ்சொல் அகராதி, ‘begger’ (அடிமைப்பணி) என்ற சொல்லுக்கு பின்வரும் பொருள் அர்த்தம் கூறுகிறது. 

'பழைய முறையின் கீழ் தனிநபர்களுக்கு அல்லது பொதுமக்களுக்கு பாரச்சுமைகள் எடுத்துச்சொல்வதற்கு கட்டாயப்படுத்தப்படும் ஒரு தொழிலாளர், பொதுப்பணிக்கு கட்டாயப்படுத்தப்பட்டு, ஊதியம்/பணம் எதுவும் கொடுக்கப்படாதவர். டீநபபயசல (அடிமைப்பணி) என்ற சொல்லுக்கு பொதுநோக்கங்களுக்கு கட்டாயப்படுத்துவதற்கு இன்னும் கடப்பாடுடையவர் என்றபோதிலும், எந்த ஊதியமும் பெறாமல் வேலைசெய்யுமாறு கட்டாயப்படுத்தப்படுவதால் வேலைசெய்வது என பொருள்படும். 4 இந்த அர்த்தமே begger (அடிமைப்பணி) என்ற சொல்லுக்கு பம்பாய் உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட ஒரு அமர்வால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.5 எனவே ‘begger’ (அடிமைப்பணி) என்பது, ஒரு வகையிலான / வடிவத்திலான கட்டாயத்தொழில்முறை (forced labour) ஆகும்.

2 AIR 1984 SC 802 Bandhua Mukti Morcha Vs Union of India

3 AIR 1982 SC 1473 People’s Union for Democratic Rights and Ors Vs Union Of India

4 Wilson’s glossary of Judicial and Revenue

5 ( 1963 ) IILLJ264 Bom

2.            மேலும் தனுராஜ்யா படேல் மற்றும் Anr எதிர் ஒரிசா அரசு (21.8.2002-ORHC) வழக்கில், மேன்மைபொருந்திய ஒரிசா உயர்நீதிமன்றம் கூறுகையில் 'இந்திய தண்டனை தொகுப்பு சட்டம் ‘Slave’ (அடிமை) அல்லது ‘slavery’ (அடிமைப்பணி) என்ற சொற்களை பொருள்வரையறை செய்யவில்லை என்றது. எனினும் IPC-ன் பிரிவுகள் 370 (பழைய பதிப்பு), 371 மற்றும் 367 ஆகியவை அத்தகைய சொற்றொடர்களை குறிப்பிடுகின்றன. உயர்நீதிமன்றம் ‘slave’ மற்றும் ‘slavery’ என்ற சொற்கள் குறித்து பல அகராதிகளின் பொருள்வரையறைகளை மதிப்பீடு செய்து... “[8] ‘Slave’ மற்றும் ‘slavery’ என்ற சொற்களுக்கு நபர் அல்லது சொத்து பொறுத்தவரை சுதந்திரமாக நடமாடுவதற்கு மற்றும் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதற்குரிய உரிமையை இழக்கச் செய்தலே, பொருத்தமானதாக தோன்றுகிறது,”என்று தெரிவித்தது. இந்த வழக்கில் அரசு தரப்பு குற்றச்சாட்டின்படி, ஒரு நபர் ரூ.30/- என்ற ஒரு சொற்ப தொகைக்கு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும்படி ஒரு தொழிலாளி, அவருடைய குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் உழைக்கும்படி செய்யப்பட்டிருந்தாலும்கூட, சுரண்டல் குறித்தும் மற்றும் சொற்ப கூலி குறித்தும் தன்னுடைய மனக்குறையை தெரிவிப்பதற்கு அவருக்கு சுதந்திரம் இல்லை. இதனால் தற்போதைய சூழல் மற்றும் இப்போது அமலிலுள்ள சட்டத்தின் சூழலில் ‘அடிமைப்பணி / அடிமைத்தனம்’ என்ற சொற்றொடரின் பொருளை விவரணை செய்வதற்கு நீதிமன்றத்திற்கு இதைவிட சிறந்த எடுத்துக்காட்டு இருப்பதாக இந்த நீதிமன்றம் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டது.

ஒரு சிறந்த மேற்கோளுக்கு உயர்நீதிமன்றம் சார்ந்திருந்த அகராதியின் பொருள்வரையறைகள்ஃஅர்த்தங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :

வெப்ஸ்டர்ஸ் அகராதியில் ஒரு அடிமை என்பது பின்வருமாறு பொருள்வரையறை செய்யப்பட்டிருக்கிறது.’ “Slave (அடிமை) என்றால், செயல்படுவதற்கு சுதந்திரம் இல்லாத ஒருவர்; ஆனால், அவரது உடலும் மற்றும் அவருடைய பணிகளும் வேறொருவரின் முழு கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய நபர், செஞ்சுரி அகராதியில் ஒரு Slave (அடிமை) என்றால், வேறொருவரின் இயங்கு உடைமைப்பொருளாக அல்லது சொத்தாக இருக்கும் ஒரு நபர் மற்றும் கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் நபரின் விருப்பத்திற்கு முற்றிலுமாக கட்டுப்பட்டிருப்பவர் என்று பொருள்படும் என்று குறிப்பிடுகிறது.  வார்ட்டன்ஸ் சட்ட அகராதியில் ‘slavery (அடிமைத்தனம், அடிமைப்பணி)’ என்பது, ஒருவருக்கு மற்றொருவரின் சுதந்திரத்தின்மீது முழ அதிகாரமுள்ள குடிமுறை உறவு என பொருள்வரையறை  செய்யப்பட்டிருக்கிறது. 

'ஆக்ஸ்ஃபோர்டு அட்வான்ஸ் லேர்னர்” அகராதி 1. வேறொருவருக்கு சொந்தமானவரும் மற்றும் அவருக்கு பணி செய்ய வேண்டியவருமான ஒருவர். 2.கடின வேலை செய்பவர் (மட்டுமீறிய உழைப்பை வழங்குபவர்) 3.கண்மூடித்தனமான பக்தன் (ஃபேஷன் அடிமை) 4. மற்றொருவரால் நேரடியாக கட்டுப்படுத்தப்படும் ஒரு இயந்திரம் அல்லது அதன் அங்கம். சேம்பர்ஸ் டுவன்ட்டியத் செஞ்சுரி அகராதியில் ஒரு ‘slave’ என்பது சொத்தாக அல்லது ஒரு ஜடப்பொருளாக வைக்கப்பட்டிருக்கும் ஒருவர்; என்று பொருள் வரையறை செய்யப்பட்டிருக்கிறது; ஆதிக்கத்திற்கு அடிபணிபவர்; அடிபணிந்து தன்னையே வழங்கக்கூடிய விசுவாசமுள்ள நபர்; எதிர்ப்புத்திறனை இழந்த ஒரு நபர்; ஒரு அடிமைபோல கடினமாக உழைப்பவர்; வேறொரு இயக்கமுறையால் கட்டுப்படுத்தப்படும் ஒரு இயக்கமுறை எ.கா. ஒரு மைய செயல்முறைக்கருவியால் கணித்தல் / கணக்கிடுதல் : ஒரு எஜமான் - அடிமை உறவை கையாளுபவர் என்று கூறுகிறது. பிளாக்ஸ் சட்ட அகராதி : ‘Slave’ (அடிமை) : வேறொருவரின் விருப்பத்திற்கு முற்றிலும் உட்படக்கூடிய ஒருவர்; செயல்பட சுதந்திரம் இல்லாத ஒருவர்; ஆனால், அவரும், அவருடைய பணிகளும் மற்றொருவரின் முழு கட்டுப்பாட்டில் இருக்கும். ஒரு எஜமானரின் அதிகாரத்தின் கீழ் இருப்பவர் மற்றும் அவருக்கு சொந்தமானவர்; எனவே எஜமான், அந்த அடிமையை (உடல் / உடல் உழைப்பை) அடிமையின் தொழிலை மற்றும் அவருடைய உழைப்பை விற்கலாம் மற்றும் தீர்வுசெய்யலாம், அவரால் (அடிமையால்) முதலாளிக்கு சேர வேண்டிய எதையும் செய்ய முடியாது, அவருக்கென எதுவும் இருக்காது அல்லது அவரால் எதையும் வாங்க முடியாது. முழு கட்டுப்பாட்டின்மீது சட்டத்தால் வைக்கப்பட்ட ஒவ்வொரு வரம்பும் மாறி, அந்தளவுக்கு அடிமையின் நிலைமையை மாற்றுகிறது.

3.            குற்றவியல் சட்டதிருத்தச் சட்டத்தால் (2013) IPC-ல் சேர்க்கப்பட்ட பிற குற்றங்கள் தனிப்பட்ட சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதைப் போலவே கொத்தடிமைத் தொழில்முறையும், கொத்தடிமைத் தொழில்முறை (ஒழிப்பு) சட்டத்தின்கீழ் குறிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சமாகும். ஆகவே, மனிதவணிகத்திற்காக ஆட்கடத்தலிலிருந்து கொத்தடிமைத் தொழில்முறையை விலக்குவதற்கு இது ஒரு காரணமாக இருக்க முடியாது.

கொத்தடிமைத் தொழில்முறை, அடிமைத்தனம் அல்லது அடிமைப்பணி (beggary உள்ளிட்ட) போன்ற செயல்முறைகள் என்பவற்றை பொருள்வரையறைக்குள் வருகின்றன என்பதை மேற்குறிப்பிட்ட விளக்கங்களும், ஆதாரங்களும் தெளிவாக நிரூபிக்கின்றன. ஆகவே, கொத்தடிமைத் தொழில்முறையானது, IPC-ன் 370-ம் பிரிவின்படி ‘சுரண்டல்’ (Exploitation) என்பதாகவே அமையும்.

முடிவுரை

கொத்தடிமைத் தொழில்முறை குற்றத்தை செய்யும் எந்தவொரு குற்றவாளியும்           IPC-ன் பிரிவு 370-ன் கீழ் குற்றம் சாட்டப்படலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com