அதிர்ச்சி வைத்​தி​யம்!

உத்​த​ரப் பிர​தே​சம், பிகார் மாநி​லங்​க​ளில் நடந்து முடிந்த சட்டப்​பே​ரவை, மக்​க​ள​வைத் தொகு​தி​க​ளுக்​கான இடைத்​தேர்​தல் முடி​வு​கள்

உத்​த​ரப் பிர​தே​சம், பிகார் மாநி​லங்​க​ளில் நடந்து முடிந்த சட்டப்​பே​ரவை, மக்​க​ள​வைத் தொகு​தி​க​ளுக்​கான இடைத்​தேர்​தல் முடி​வு​கள், மத்​தி​யில் ஆளும் பாஜ​க​வுக்​குப் பெரும் அதிர்ச்​சியை ஏற்​ப​டுத்தி இருக்​கும் என்​ப​தில் சந்​தே​கம் இல்லை. பாஜ​க​வைப் பொருத்​த​வரை, மத்​திய - மாநில ஆட்சி​க​ளின் மீது மக்​கள் மத்​தி​யில் பர​வ​லாக ஏற்​பட்​டி​ருக்​கும் அதி​ருப்​தி​யின் வெளிப்​பா​டு​தான் இந்த இடைத்​தேர்​தல் முடி​வு​கள். 
உத்​த​ரப் பிர​தேசத்​தில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்​தும், துணை முதல்​வர் கேசவ் பிர​சாத் மெளரி​யா​வும் 2014-இல் பெரும் வாக்கு வித்​தி​யா​சத்​தில் வெற்றி பெற்ற மக்​க​ள​வைத் தொகு​தி​க​ளில் பாஜக தோற்​க​டிக்​கப்​பட்​டி​ருப்​பது, யாருமே எதிர்​பார்த்​தி​ராத அதி​ரடி தேர்​தல் திருப்​பம். பாஜ​க​வின் கோட்டை என்று கரு​தப்​ப​டும் கோரக்​பூர் மக்​க​ள​வைத் தொகு​தி​யில் கடந்த 1998 முதல் ஐந்து முறை தொடர்ந்து வெற்றி பெற்​ற​வர் இப்​போ​தைய உத்​த​ரப் பிர​தேச முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத். உத்​த​ரப் பிர​தேச முதல்​வ​ரா​ன​தைத் தொடர்ந்து தனது மக்​க​ளவை உறுப்​பி​னர் பத​வியை அவர் துறந்​த​தால், கோரக்​பூர் இடைத்​தேர்​தலை சந்​திக்க நேர்ந்​தது. அதே​போல, கேசவ் பிர​சாத் மெளரியா துணை முதல்​வ​ரா​ன​தால், புல்​பூர் மக்​க​ள​வைத் தொகு​திக்கு இடைத் தேர்​தல் நடை​பெற்​றது. 
கடந்த 2014-இல் மூன்று லட்சத்​துக்​கும் அதி​க​மான வாக்கு வித்​தி​யா​சத்​தில் வென்ற கோரக்​பூர் தொகு​தியை இப்​போது 29,000 வாக்​கு​கள் வித்​தி​யா​சத்​தி​லும், கடந்த முறை 3.2 லட்சத்​துக்​கும் அதி​க​மான வாக்​கு​கள் வித்​தி​யா​சத்​தில் வெற்றி பெற்ற புல்​பூர் தொகு​தியை 59,613 வாக்கு வித்​தி​யா​சத்​தி​லும் சமாஜ்​வாதி கட்சி​யி​டம் பாஜக பறி​கொ​டுத்து தோல்​வி​யைத் தழுவி இருக்​கி​றது. இந்​தத் தோல்​விக்​குப் பல கார​ணங்​கள் முன் வைக்​கப்​பட்​டா​லும்​கூட, பாஜ​க​வின் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்​தும் கூறு​வ​து​போல இது எதிர்​பா​ராத தோல்வி என்​பது மட்டும் நிஜ​மல்ல. 
இதற்கு முன்​னால் நடந்த உத்​த​ரப் பிர​தேச மாந​க​ராட்​சித் தேர்​தல்​க​ளில் வெற்றி பெற்ற பாஜக, உள்​ளாட்சி, ஊராட்சி அமைப்​பு​க​ளுக்​கான தேர்​தல்​க​ளில் படு​தோல்வி அடைந்​தது பர​வ​லாக வெளி​யில் தெரி​ய​வில்லை. ஏற்​கெ​னவே இருந்த அதி​ருப்​தி​யின் வெளிப்​பா​டு​தான் இடைத்​தேர்​தல் தோல்​வி​கள் என்​பது பாஜக தலை​மைக்கு நன்​றா​கவே தெரி​யும். இடைத்​தேர்​த​லில் பின்​ன​டைவு நேரி​டும் என்​பதை பாஜக எதிர்​பார்த்​த​தால்​தான், இந்த இரண்டு தொகு​தி​க​ளுக்​கும் இடைத்​தேர்​தல் தொடர்ந்து தள்​ளி​வைக்​கப்​பட்டு வந்​தன. குஜ​ராத் சட்டப்​பே​ர​வைத் தேர்​தல் நடை​பெற்​ற​போதே, நடந்​தி​ருக்க வேண்​டிய இடைத்​தேர்​தல்​கள் இவை என்​பதை நாம் மறந்​து​வி​டக் கூடாது.
மாயா​வ​தி​யின் அர​சி​யல் சாதுர்​யத்​துக்​குக் கிடைத்த வெற்றி இது என்று பல அர​சி​யல் நோக்​கர்​கள் கருத்​துத் தெரி​விக்​கி​றார்​கள். அர​சி​யல் சாதுர்​யம் என்​ப​தை​விட, சமாஜ்​வாதி கட்சி​யு​டன் கூட்டணி சேர்​வ​தைத் தனது பகு​ஜன் சமாஜ் கட்சி​யி​னர் ஒப்​புக்​கொள்​வார்​களா என்​பதை சோதித்​துப் பார்க்​கும் கள​மாக, இந்​தத் இடைத்​தேர்​தல்​களை மாயா​வதி பயன்​ப​டுத்​திக் கொண்​டார் என்​று​தான் கொள்​ள​லாம். அர​சி​யல் ரீதி​யாக இரு பிரி​வி​ன​ரும் இணைய முடி​யாது என்​கிற பாஜ​க​வின் அர​சி​யல் கணக்​கைப் பொய்​யாக்கி இருக்​கி​றது கோரக்​பூர், புல்​பூர் இடைத்​தேர்​தல் முடி​வு​கள்.
பொது எதி​ரி​யான பாஜ​கவை வீழ்த்​து​வ​தற்கு எந்​த​வித நிபந்​த​னை​யும் இல்​லா​மல் சமாஜ்​வாதி கட்சி வேட்பா​ளர்​க​ளுக்கு பகு​ஜன் சமாஜ் கட்சி​யின் ஆத​ரவை அளித்த மாயா​வதி, இதே​போல அடுத்து வர இருக்​கும் 2019 மக்​க​ள​வைத் தேர்​த​லில் அகி​லேஷ் யாத​வு​டன் கூட்டணி அமைக்க முன்​வ​ரு​வாரா என்​கிற கேள்​விக்கு இப்​போதே விடை​ய​ளித்​து​விட முடி​யாது. தனது ஆத​ரவு இல்​லா​மல் சமாஜ்​வாதி கட்சி​யால் உத்​த​ரப் பிர​தே​சத்​தில் வெற்றி பெற முடி​யாது என்​பதை உணர்ந்​து​விட்ட மாயா​வ​தி​யின் நிபந்​த​னை​கள் கடு​மை​யா​கவே இருக்​கக்​கூ​டும் என்​பதை அகி​லேஷ் யாதவ் உண​ரா​மல் இருக்க மாட்டார்.
உத்​த​ரப் பிர​தேச இடைத்​தேர்​தல் முடி​வு​க​ளால் மகிழ்ச்சி அடைய முடி​யா​மல் இருப்​பது பாஜக மட்டு​மல்ல, காங்​கி​ர​ஸும்​தான். காங்​கி​ரஸ் தனித்​துப் போட்டி​யிட்ட கோரக்​பூர், புல்​பூர் இரண்டு தொகு​தி​க​ளி​லும் வைப்​புத் தொகையை இழந்​தி​ருக்​கும் அவ​லம், பாஜ​க​வின் தோல்​வி​யால் வெளி​யில் தெரி​யா​மல் மறைந்து விட்டி​ருக்​கி​றது. புல்​பூர் தொகுதி பண்​டித ஜவா​ஹர்​லால் நேருவை, அவர் பிர​சா​ரத்​துக்​குச் செல்​லா​ம​லேயே தொடர்ந்து மக்​க​ள​வைக்​குத் தேர்ந்​தெ​டுத்து வந்​தது என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.
பிகா​ரில் நடந்த அரா​ரியா மக்​க​ள​வைத் தொகு​திக்​கான இடைத்​தேர்​த​லில் வாக்கு வித்​தி​யா​சம் குறைந்​தி​ருக்​கி​றது என்​றா​லும்​கூட, லாலு பிர​சா​தின் ராஷ்ட்​ரீய ஜன​தா​த​ளம் வெற்றி பெற்​றுத் தக்க வைத்​துக் கொண்​டி​ருக்​கி​றது. ஜெகா​னா​பாத் சட்டப்​பே​ர​வைத் தொகு​தி​யை​யும் தக்க வைத்​துக் கொண்​டி​ருக்​கி​றது. ஐக்​கிய ஜனதா தளம் பிரிந்​து​விட்ட நிலை​யி​லும், லாலு பிர​சாத் ஊழல் வழக்​கில் தண்​டிக்​கப்​பட்டு சிறை​யில் இருந்​தும், ராஷ்ட்​ரீய ஜ​னதா தளம் அர​சி​யல் சக்​தி​யாக வலம் வரு​கி​றது என்​ப​தன் அடை​யா​ள​மா​கத்​தான் இதை நாம் பார்க்க வேண்​டும்.
வட​கி​ழக்கு மாநி​லங்​க​ளில் தனது செல்​வாக்கை நிலை​நாட்​டி​விட்ட மகிழ்ச்​சி​யில் வலம் வந்து கொண்​டி​ருந்த பாஜ​க​வுக்கு, உத்​த​ரப் பிர​தே​சம், பிகார் இடைத்​தேர்​தல்​கள் மிகப்​பெ​ரிய பின்​ன​டைவு. 2017-க்குப் பிறகு நடந்​தி​ருக்​கும் அமி​ரு​த​ச​ரஸ், ஸ்ரீந​கர், மலைப்​பு​ரம், குர்​தாஸ்​பூர், ஆஜ்​மீர், அல்​வர், உலு​பெ​ரியா, கோரக்​பூர், புல்​பூர், அரா​ரியா ஆகிய 10 மக்​க​ள​வைத் தொகு​தி​க​ளுக்​கான இடைத்​தேர்​தல்​க​ளி​லும் பாஜக தோல்​வி​ய​டைந்​தி​ருக்​கி​றது. இன்​னும் 15 மாதங்​க​ளில் பொதுத்​தேர்​தல் நடை​பெற இருக்​கும் நிலை​யில், பாஜக கவ​லைப்​பட்​டாக வேண்​டும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com