கல்லூரி அறிவிப்புப் பலகையில் அண்டை மாநில மொழியில் ஒரு வாக்கியம்: யுஜிசி அறிவுறுத்தல்

மத்திய அரசின் "ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் அறிவிப்புப் பலகையில்

மத்திய அரசின் "ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களின் அறிவிப்புப் பலகையில் அண்டை மாநில மொழியில் ஒரு வாக்கியம் எழுதுமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மத்திய அரசின் "ஒரே பாரதம் உன்னத பாரதம்' திட்டத்தின் கீழ் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நுழைவு வாயிலில் அனைவருக்கும் தெரியக்கூடிய வகையில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்புப் பலகையில் பக்கத்து மாநில மொழியில் ஒரு வார்த்தை அல்லது ஒரு வாக்கியத்தை எழுதி வைக்க வேண்டும்.
மாணவர்களை பக்கத்து மாநிலத்துக்கு சுற்றுலா அழைத்துச் சென்று சாகச முகாம்கள் நடத்துவது. அந்த மாநில மக்கள் முன்பாக நாடகம், கலை நிகழ்ச்சிகளில் கல்லூரி மாணவர்கள் ஈடுபட வைப்பது. அதுபோல அந்த மாநில மாணவர்களை அழைத்து கலை நிகழ்ச்சிகளை நடத்துச் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்களும், உறுப்புக் கல்லூரிகளும் மேற்கொள்ள வேண்டும்.
இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக நவம்பர் 4-ஆம் தேதியும், அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் யுஜிசிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com