நாசாவின் கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த 9 வயது சிறுவன்: பதில் அனுப்பிய நாசா

நாசாவில் கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த 9 வயது சிறுவன் அனுப்பிய கடிதத்திற்கு நாசா பதில் கடிதம் அனுப்பியது
நாசாவின் கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த 9 வயது சிறுவன்: பதில் அனுப்பிய நாசா

வாஷிங்டன்: நாசாவில் கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பித்த 9 வயது சிறுவன் அனுப்பிய கடிதத்திற்கு நாசா பதில் கடிதம் அனுப்பி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

நாசா கோள் பாதுகாப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்கக் (planetarty protection officer job) கோரி செய்தி ஒன்றை கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில், அறிவியல் அல்லது கணிதத்தில் பட்டம் பெற்றவர்கள் மற்றும் அரசு பணியில் ஒரு ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த செய்தியை படித்த நியூ ஜெர்சி மாகாணத்தை சேர்ந்த 9 வயது மாணவன் ஜக் டேவிஸ் என்பவர் அந்த பதவிக்கு விண்ணப்பித்து நாசா நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அவன் அனுப்பிய கடிதத்தில்,  அன்புள்ள நாசா, எனது பெயர் ஜாக் டேவிஸ். நான் கோள் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக் விரும்புகிறேன். எனக்கு 9 வயதாக இருக்கலாம், ஆனால், நான் இந்த வேலைக்கு தகுதியானவன் என நம்புகிறேன். ஏனென்றால் நான் விண்வெளி மற்றும் வேற்றுக் கிரக வாசிகள் குறித்த படங்களை அதிகமாக பார்ப்பேன். நான் இளமையாக இருக்கிறேன். மேலும் என்னை எனது சகோதரி வேற்று கிரக வாசி என அழைப்பாள். எனவே, எனக்கு வேலை தருமாறு குறிப்பிட்டிருந்தான். மேலும், அந்த கடிதத்தில் அவன் கையோப்பத்திற்கு கீழே விண்வெளியின் பாதுகாவலன் என எழுதியிருந்தான்.

இதையடுத்து அவருடைய கடிதத்திற்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பதிலளித்த நாசாவின் கிரக ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் ஜேம்ஸ் எல். கிரீன் ரால், ஜக் டேவிஸின் நிலைப்பாட்டை பாராட்டி ஒரு கடிதம் எழுதினார்.

அதில், ஜக் டேவிஸ்ஸின் ஆர்வத்திற்கு பாராட்டு. மேலும் இந்த பதவி மிகவும் முக்கியமான பதவி. சந்திரன், விண்கற்கள் மற்றும் செவ்வாய் கிரகத்தில் இருந்து மாதிரிகள் மீண்டும் கொண்டு வரும்போது, சிறிய நுண்ணுயிரிகளிலிருந்து பூமியைப் பாதுகாப்பது. சூரிய கிரகணத்தை நாம் கவனமாக ஆராய்ந்து பார்ப்பது போல, பிற கிரகங்கள் மற்றும் நிலங்களைப் பாதுகாப்பதும் குறித்து ஆராய்வதுதான் இதன் வேலை.

அதற்கு நாங்கள் நல்ல விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை நியமிக்க உள்ளோம். அதனால் நீங்கள் பள்ளியில் நன்றாக படியுங்கள். வருங்காலத்தில் நீங்கள் நாசாவில் வேலை செய்ய எங்கள் வாழ்த்துக்கள் என நாசா கிரக இயக்குநர் கிரீன் தெரிவித்துள்ளார்.

சிறுவனின் கடிதத்திற்கு நாசா பதில் கடிதம் அனுப்பியது அனைவரையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com