இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கு 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம்

இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.

இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
6 கல்லூரிகள்: சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரி, அரசு யுனானி மருத்துவக் கல்லூரி, அரசு யோகா -இயற்கை மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி, திருமங்கலம் அரசு ஹோமியோபதி கல்லூரி, நாகர்கோவில் அரசு ஆயுர்வேதா கல்லூரி ஆகிய ஆறு அரசு கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 2 -ஆம் தேதி தொடங்கியது.
விநியோகம் தொடங்கிய முதல்நாளே 1,100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டன. வார நாள்கள் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்ப விநியோகம் நடைபெற்று வருகிறது. புதன்கிழமை நிலவரப்படி, தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 3 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விண்ணப்பங்களை நேரில் பெறுவதற்கும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்வதற்கும் ஆகஸ்ட் 30 கடைசியாகும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆகஸ்ட் 31 -ஆம் தேதி கடைசியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com