இந்திய டிஎன்ஏ கைரேகை தொழில்நுட்ப தந்தையும் பிரபல விஞ்ஞானியுமான லால்ஜி சிங் காலமானார்

இந்தியாவின் டிஎன்ஏ கைரேகை தொழில்நுட்ப தந்தையும் பிரபல விஞ்ஞானியுமான லால்கி சிங் (70) திடீர் நெஞ்சுவலியால் தில்லி செல்லும்
இந்திய டிஎன்ஏ கைரேகை தொழில்நுட்ப தந்தையும் பிரபல விஞ்ஞானியுமான லால்ஜி சிங் காலமானார்

லக்னோ: இந்தியாவின் டிஎன்ஏ கைரேகை தொழில்நுட்ப தந்தையும் பிரபல விஞ்ஞானியுமான லால்கி சிங் (70) திடீர் நெஞ்சுவலியால் தில்லி செல்லும் வழியில் காலமானார். 

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள கல்வாரி கிராமத்தை சேர்ந்தவர் லால்ஜி சிங். இவர் புகழ்பெற்ற விஞ்ஞானியும், இந்திய டிஎன்ஏ கைரேகை தொழில்நுட்பத்தின் தந்தை என்றும் அழைக்கப்படுபவர் லால்ஜி சிங். 

இவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் 25வது துணைவேந்தராக 2011 முதல் 2014 வரை பணியாற்றினார். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தில்லி செல்வதற்காக லால் பகதூர் சாஸ்திரி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். உடனே அவர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள சுந்தர் லால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  

உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். 

அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவத்து வருகின்றனர். டிஎன்ஏ கைரேகை தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளார்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி, எம்எஸ்சி மற்றும் பிஹெச்டி ஆகிய படிப்புகளை படித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள செல்லுலார் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் (CCMB) நிறுவனரான இவர், அந்தமான் மற்றும் நிக்கோபார் பழங்குடி இனத்தவர்களுக்கு செய்த தனது பணிக்காக சர்வதேச பாராட்டைப் பெற்றார். 1998 முதல் 2009 வரை அவர் சிசிஎம்பி இயக்குநராக இருந்து வந்துள்ளார். 

பத்மஸ்ரீ விருது பெற்றவர் விஞ்ஞானி லால்கி சிங்கின் மறைவுக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ​​நாடு ஒரு சிறந்த விஞ்ஞானி மற்றும் புகழ்பெற்ற ஒரு ஆசிரியரை இழந்துவிட்டது என்று தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

லால்ஜி சிங் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com