சாஸ்த்ரா பல்கலைக்கழக முதன்மையருக்கு பரிசு

மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உலோகவியல் ஆய்வு சங்க மாநாட்டில் தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக முதன்மையருக்கு விருது வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக முதன்மையர் எஸ். சுவாமிநாதனுக்கு பரிசு வழங்குகிறார் இந்திய உலோகவியல் ஆய்வு சங்கத் தலைவர் சுரேஷ் தாஸ்.

மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (ஐ.ஐ.டி.) இந்திய உலோகவியல் ஆய்வு சங்கத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக நானோ தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட வேதிஉலோகவியல் மைய (சென்டாப்) இயக்குநரும், நிதியுதவி பெறும் ஆய்வுப் பிரிவு முதன்மையருமான எஸ். சுவாமிநாதனுக்கு சங்கத் தலைவர் சுரேஷ் தாஸ் உலோக அறிவியல் ஆண்டுப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கினார்.
தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழக நானோ தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட வேதிஉலோகவியல் மையத்தில் இயக்குநர் சுவாமிநாதனும், அவரது ஆய்வுக் குழுவும் மேற்கொண்டுவரும் பரிசோதனை மற்றும் கருத்தாக்கவியல் பணியை அங்கீகரிக்கும் விதமாக இப்பரிசு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com