எஸ்.எஸ்.எல்.சி.-பிளஸ் 2 துணைத் தேர்வு: நாளைமுதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்

2016-ஆம் ஆண்டு செப்டம்பர்- அக்டோபர் பருவத்தில் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு புதன்கிழமை (ஜனவரி 4) முதல் அசல்,

2016-ஆம் ஆண்டு செப்டம்பர்- அக்டோபர் பருவத்தில் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி. துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு புதன்கிழமை (ஜனவரி 4) முதல் அசல், ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் வசுந்தராதேவி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: தேர்வர்களுக்கு நவம்பர் 3-ஆம் தேதி முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை தேர்வர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு மார்ச், ஜூன் பருவத்தில் தேர்வெழுதி தேர்ச்சி பெறாமல் செப்டம்பர்-அக்டோபர் துணைத் தேர்வுகளை எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்.
இதர தேர்வர்களுக்கு செப்டம்பர்-அக்டோபர் பருவத்தில் தேர்வெழுதிய பாடங்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மட்டுமே வழங்கப்படும். இந்தச் சான்றிதழை புதன்கிழமை (ஜனவரி 4) காலை 10 மணி முதல் தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com