காப்பீடு தொழில்முறை படிப்புக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

காப்பீட்டு தொழில்முறை படிப்புக்கு இந்திய காப்பீட்டு நிறுவனத்துடன் லயோலா மேலாண்மை கல்வி நிறுவனம் புதன்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

காப்பீட்டு தொழில்முறை படிப்புக்கு இந்திய காப்பீட்டு நிறுவனத்துடன் லயோலா மேலாண்மை கல்வி நிறுவனம் புதன்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் லயோலா மேலாண்மை கல்வி நிறுவனம் (லிபா), இந்திய காப்பீட்டு நிறுவனத்துடன் காப்பீட்டு படிப்புக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து இந்திய காப்பீட்டு நிறுவன முதன்மைச் செயலர் வேணுகோபால், லயோலா மேலாண்மை கல்வி நிறுவன இயக்குநர் கிறிஸ்டி ஆகியோர் கூறியதாவது: இந்திய காப்பீட்டு தொழில்துறை பிரிவில் முக்கிய கல்வித்திட்டம் குறித்து லயோலா மேலாண்மை கல்வி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், மேலாண்மை நிபுணத்துவம் பெற்றுள்ள கல்வியும், தொழில்முறையும் இணைந்து ஓராண்டு படிப்புக்கான கல்விமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்முறை படிப்பில், காப்பீட்டு கோட்பாடுகள், ஆயுள், பொது உள்ளிட்ட காப்பீடுகளின், நடைமுறை, ஒழுங்குமுறைகள், சட்டப்பூர்வ அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கற்றுத்தரப்பட உள்ளன. இதற்காக, காப்பீட்டு நிறுவன, மேலாண்மை கல்வி நிபுணத்துவம் பெற்றவர்கள் மாணவர்களுக்கு கற்றுத்தருவர். பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்த ஓராண்டு படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். இந்தப் படிப்பை முடித்த பிறகு காப்பீட்டு துறையில் அதிக வேலைவாய்ப்புகளைப் பெற இது வழிவகுக்கும். இந்தப் படிப்புக்கான வகுப்புகள் ஜூலை மாதம் முதல் தொடங்க உள்ளன என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com