எம்பிபிஎஸ், பிஇ படிப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரிக்கை

மருத்துவம், பொறியில் படிப்புகளில் 5 சதவீத இட ஒதுக்கீட்டை மாற்றுத் திறனாளிகளுக்கு அமல்படுத்த வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

மருத்துவம், பொறியில் படிப்புகளில் 5 சதவீத இட ஒதுக்கீட்டை மாற்றுத் திறனாளிகளுக்கு அமல்படுத்த வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்த விவரம்: கடந்த ஜூன் 19 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தில் பிரிவு 32-ன்படி நாடு முழுவதும் உள்ள அரசு, அரசு உதவிபெறும் உயர் கல்வி நிறுவனங்களில் 5 சதவீதத்துக்கும் குறையாத இடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என விதிகள் உள்ளன. அதுபோல், 40 சதவீதத்துக்கு மேல் உள்ள ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் 5 ஆண்டுகள் வரை வயது வரம்பில் தளர்வு செய்ய வேண்டும் என்றும் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கவுள்ளது. ஆனால், இதுவரை ஊனமுற்றோருக்கான புதிய சட்டவிதிகளின்படி 5 சதவீத இட ஒதுக்கீடு, 5 ஆண்டுகள் வரை வயது வரம்பு குறித்து தமிழக அரசு வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. இதனால், மாற்றுத்திறனாளிகளிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
எனவே, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து உயர் கல்விகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலை நாட்டுவதற்கு அரசு முன்வர வேண்டும். இதற்கான, உத்தரவுகளை முதல்வர் பிறப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் வலியுறுத்திள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com