நீட் தேர்வு குளறுபடி: இந்தி, குஜராத்தி, மராத்தி மொழி வினாத்தாள்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சமர்ப்பிக்க உத்தரவு

நீட் தேர்வின் இந்தி, குஜராத்தி, மராத்தி மொழி வினாத்தாள்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சமர்ப்பிக்குமாறு, மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை
நீட் தேர்வு குளறுபடி: இந்தி, குஜராத்தி, மராத்தி மொழி வினாத்தாள்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சமர்ப்பிக்க உத்தரவு

நீட் தேர்வின் இந்தி, குஜராத்தி, மராத்தி மொழி வினாத்தாள்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சமர்ப்பிக்குமாறு, மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
நாடு முழுவதும் மே 7ஆம் தேதி மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்) நடைபெற்றது.
பல்வேறு மொழிகளில் நடந்த இந்த தேர்வின் வினாத்தாள் ஒரே மாதிரியாக வழங்கப்படாமல், சில மொழிகளில் எளிமையாகவும், சில மொழிகளில் கடினமாகவும் வினாக்கள் இடம் பெற்றிருந்தன என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அதனால் அந்த தேர்வை ரத்து செய்தும், தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என்று திருச்சியைச் சேர்ந்த சக்திமலர்கொடி, மதுரையைச் சேர்ந்த சூர்யா, சித்தார்த், அஜய் சரண், கெளதம் சங்கர், உள்ளிட்ட மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஏ.ஜெரோபோ கிளாட்வின் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஆங்கிலத்தை விட இந்தி, குஜராத்தி, மராத்தி மொழி வினாத்தாள்களில் கேள்விகள் எளிதாகக் கேட்கப்பட்டிருந்தன. ஆங்கிலம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கேள்விகள் கடினமாக அமைந்திருந்தன. எனவே நீட் தேர்வை ரத்து செய்து அதற்குப் பதிலாக பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்தி, மராத்தி, குஜராத்தி மொழி வினாத்தாள்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சமர்ப்பிக்க மனுதாரருக்கு உத்தரவிட்டார்.
மேலும், இந்த மனுவை நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட முந்தைய மனுக்களோடு சேர்த்து விசாரணைக்குப் பட்டியலிட உத்தரவிட்டு ஜூன் 12ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com