பொறியியல் படிப்பு: 2016 -இல் மாணவர் சேர்க்கையில் கடும் சரிவு: 1.35 லட்சம் இடங்கள் நிரம்பவில்லை

ஒட்டுமொத்த பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் முந்தைய ஆண்டைவிட, 2016 -ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஒட்டுமொத்த பொறியியல், தொழில்நுட்பப் படிப்புகளில் முந்தைய ஆண்டைவிட, 2016 -ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்திருப்பது தெரிய வந்துள்ளது.
முந்தைய ஆண்டைவிட, 2016 -இல் 20 ஆயிரம் மாணவர்கள் குறைவாக பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர். 1,35,335 இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்தன.
இதுதொடர்பாக, சட்டப்பேரவையில் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாத்தின்போது வெளியிடப்படும் அரசின் கொள்கை விளக்கக்குறிப்பில் இடம்பெற்றிருக்கும் புள்ளி விவரங்கள்:
பொறியியல் படிப்புகளில் (பி.இ., பி.டெக்., பி.ஆர்க்.) அரசு ஒதுக்கீடு மற்றும் தனியார் கல்லூரிகளின் நிர்வாக இடங்கள் என, 2015-16 கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் 583 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளில் 2,86,461 இடங்கள் இருந்தன. இதில் 1,12,207 மாணவர்கள், 57,588 மாணவிகள் என மொத்தம் 1,69,795 பேர் சேர்க்கை பெற்றனர். இது அடுத்த ஆண்டில் 20 ஆயிரம் அளவுக்கு குறைந்துள்ளது.
அதாவது, 2016 -17 கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள 584 பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளில் 2,85,934 இடங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் 99,823 மாணவர்கள், 50,776 மாணவிகள் உள்பட மொத்தம் 1,50,599 பேர் மட்டுமே சேர்ந்தனர்.
1.35 லட்சம் இடங்கள் காலி: மாணவர் சேர்க்கை குறைந்ததன் காரணமாக 2016-17 கல்வியாண்டில் 1,35,335 இடங்கள் காலியாக இருந்தன. இது முந்தைய ஆண்டைவிட 18 ஆயிரம் இடங்கள் கூடுதலாகும். 2015 -16 கல்வியாண்டில் 1,16,666 இடங்கள் நிரம்பாமல் காலியாக இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com