சாஸ்த்ரா பல்கலை.யில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இந்தக் கலந்தாய்வு ஜூன் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
விழாவில் மாணவிக்குச் சேர்க்கைக் கடிதம் வழங்குகிறார் பஞ்சாப் நேஷனல் வங்கி துணைப் பொது மேலாளர் பால முகுந்தன்.
விழாவில் மாணவிக்குச் சேர்க்கைக் கடிதம் வழங்குகிறார் பஞ்சாப் நேஷனல் வங்கி துணைப் பொது மேலாளர் பால முகுந்தன்.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. இந்தக் கலந்தாய்வு ஜூன் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த ஒளிவுமறைவற்ற கலந்தாய்வை, சிட்டி யூனியன் வங்கி முதன்மை மேலாளர் ராமகிருஷ்ணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் என். முருகன், பஞ்சாப் நேஷனல் வங்கியின் துணைப் பொது மேலாளர் பால முகுந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
முன்னதாக, பல்கலைக்கழக முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ். வைத்திய சுப்பிரமணியம் பேசியது:
இப்பல்கலைக்கழகத்தில் தரமான உயர்கல்வி நியாயமான கல்விக் கட்டணத்தில் வழங்கப்படுகிறது. மேலும், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 10 சதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
நிகழாண்டு பொறியியல் படிப்புக்கு 23,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில், நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 90 சதத்துக்கும் அதிகமான மாணவர்கள் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் சராசரியாக 80 சத மதிப்பெண்களும், இணை நுழைவுத் தேர்வு (ஜே.இ.இ) மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
இப்பல்கலைக்கழகத்தைப் பொருத்தவரை ஆண்டுக்கு ஆண்டு போட்டி அதிகரித்து வருகிறது. பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதாகச் செய்திகள் வந்தாலும், இப்பல்கலைக்கழகத்தில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், நிகழாண்டில் 20 சதம் கூடுதலாக விண்ணப்பங்கள் வந்துள்ளன. தரமான கல்விச் சேவை வழங்கப்படுவதே இதற்குக் காரணம். பொறியியல் படிப்புகளுக்கான வகுப்புகள் ஜூலை 21-ம் தேதி தொடங்கப்படவுள்ளது.
மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி ஆகியவை தாமாகவே இப்பல்கலைக்கழக மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்க முன்வந்துள்ளன. இதை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் வைத்திய சுப்பிரமணியன்.
பல்கலைக்கழக மேலாண்மைத் துறை முதன்மையரும், பயிற்சி மற்றும் பணியமர்த்தல் பிரிவு இயக்குநருமான வி. பத்ரிநாத் பேசுகையில், இப்பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் சிறந்த தகுதியான மாணவர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பிரிக்ஸ் நாடுகளின் முதல் 50 சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலிலும், ஆசியாவின் 10 சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலிலும் இப்பல்கலைக்கழகம் இடம்பெற்றுள்ளது என்றார் அவர்.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆர். சேதுராமன், சென்டாப் மைய இயக்குநர் எஸ். சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com