பத்தாம் வகுப்பு சிறப்புத் தேர்வு: தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் புதன்கிழமை (ஜூன் 21) முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் புதன்கிழமை (ஜூன் 21) முதல் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வெழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்களும் (தத்கல் உள்பட) புதன்கிழமை
(ஜூன் 21) முதல்www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வு அடங்கிய அறிவியல் பாடத்தில் செய்முறைத் தேர்வில் 25 மதிப்பெண்களில் தேர்ச்சியான குறைந்தபட்ச மதிப்பெண் 15-க்கு குறைவாகப் பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்தவதோடு எழுத்துத் தேர்வுக்கும் வர வேண்டும்.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு வராதவர்கள் ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள சிறப்பு துணைப் பொதுத்தேர்வு அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதுவதோடு அறிவியல் பாட கருத்தியல் தேர்வையும் கண்டிப்பாக எழுத வேண்டும். இந்தத் தனித் தேர்வர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் அறிவிக்கப்பட்ட தேர்வு மையத்திலேயே ஜூன் 22, 23 ஆகிய இருநாள்களில் செய்முறைத் தேர்வு நடத்தப்படும். எனவே தேர்வர்கள் உரிய தேர்வு மைய தலைமை ஆசிரியரை மேற்கண்ட நாள்களில் அவசியம் அணுக வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com