பி.டெக். மாணவர்களும் இரட்டை பட்டம் பெறும் வாய்ப்பு: சென்னை ஐஐடியில் அறிமுகம்

பி.டெக். இளநிலை பட்ட மாணவர்களும் இரட்டைப் பட்டம் பெறும் வகையில் புதிய திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது

பி.டெக். இளநிலை பட்ட மாணவர்களும் இரட்டைப் பட்டம் பெறும் வகையில் புதிய திட்டத்தை சென்னை ஐஐடி அறிமுகம் செய்துள்ளது. நடப்புக் கல்வியாண்டு முதல் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இதுகுறித்து சென்னை ஐஐடி வெளியிட்ட செய்தி: சென்னை ஐஐடி-இல் ஏற்கெனவே 5 ஆண்டுகள் கொண்ட பி.டெக்., எம்.டெக்., இரட்டைப் பட்டம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த இரட்டைப் பட்டப் படிப்பு இளநிலை, முதுநிலை பட்டம் இரண்டிலும் ஒரே துறை சார்ந்த படிப்பாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பி.டெக். இளநிலை படிப்புடன் தொடர்புடைய வேறு துறை சார்ந்த எம்.டெக். படிப்பை மேற்கொள்ளும் வகையில் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பி.டெக்., எம்.டெக். படிப்புத் திட்டத்தை சென்னை ஐஐடி இப்போது அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கெனவே இரட்டைப் பட்டப் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள் மட்டுமின்றி, 4 ஆண்டுகள் பி.டெக். படிப்புகளில் சேர்ந்த மாணவர்களும் சேர முடியும். ஆனால், இந்தத் திட்டத்தில் சேர விரும்பும் மாணவர்கள் 5-ஆவது பருவத் தொடக்கத்தில் ஒட்டுமொத்த மதிப்பெண் சராசரி (சி.ஜி.பி.ஏ.) 8 புள்ளிகள் பெற்றிருப்பது அவசியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com