பி.இ. சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பி.இ. சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை மாலை வெளியிட்டது. இதில் 59 பேர் 200-க்கு 200 கட்-ஆஃப் பெற்றுள்ளனர்.
பி.இ. சேர்க்கை: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பி.இ. சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வியாழக்கிழமை மாலை வெளியிட்டது. இதில் 59 பேர் 200-க்கு 200 கட்-ஆஃப் பெற்றுள்ளனர்.

பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இதற்கு 1,41,077 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 1,36,988 மாணவ, மாணவிகள் தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர்.
இவர்களுக்கான சமவாய்ப்பு எண் பல்கலைக்கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால், பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் இந்துமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கலந்தாய்வு தள்ளிப்போகக் காரணம் என்ன? பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் அன்பழகன் அளித்த பதில்: பி,இ, கலந்தாய்வை வரும் 27-ஆம் தேதி முதல் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், மருத்துவப் படிப்புச் சேர்க்கைக்கான "நீட்' தகுதித் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதமாவதால், திட்டமிட்டத் தேதியில் பி.இ. கலந்தாய்வைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
பி.இ. தரவரிசைப் பட்டியலில் 59 மாணவ, மாணவிகள் 200-க்கு 200 கட்-ஆஃப் பெற்றுள்ளனர். இவர்களில், 36 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர வாய்ப்புள்ளது. அடுத்ததாக 199 கட்-ஆஃப் மதிப்பெண்ணில் 811 பேர் உள்ளனர். இவர்களில் 645 பேர் எம்.பி.பி.எஸ். செல்ல வாய்ப்புள்ளது.
198 கட்-ஆஃப் மதிப்பெண்ணில் 2,097 பேர் உள்ளனர். இவர்களில் 1,681 பேர் எம்.பி.பி.எஸ். சேர வாய்ப்புள்ளது. ஒருவேளை, பி.இ. கலந்தாய்வு திட்டமிட்டபடி தொடங்கி, மருத்துவப் படிப்புக்குச் செல்ல வாய்ப்புள்ளவர்களில் பெரும்பாலானோர் எம்.பி.பி.எஸ். சென்றுவிட்டால், அவர்கள் தேர்வு செய்த பி.இ. இடத்துக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்துவது இயலாத காரியம். அதன் காரணமாகவே எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு தொடங்கிய பின்னர், பி.இ. கலந்தாய்வு தொடங்கப்படுகிறது.
இப்போது, பி.இ. கலந்தாய்வு தள்ளிப்போவதால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பி.இ. முதலாமாண்டு வகுப்பை ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்க முடியாத நிலை ஏற்படும். இருந்தபோதும், ஒரு வார காலம் அல்லது 10 நாள்கள் தள்ளி முதலாமாண்டு வகுப்புகளைத் தொடங்கிக் கொள்ள சிறப்பு அனுமதி பெற்றுக்கொள்ளப்படும் என்றார் அமைச்சர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com