பல்கலைக்கழகங்கள் சர்வதேச தரத்தை எட்ட தன்னாட்சி அதிகாரம் வேண்டும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை அளிப்பதன் மூலம் சர்வதேச தரத்தில் கல்வியை அளிக்க முடியும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ்
மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியர் ஜி.எஸ்.வாசு, ஆசிரியர் குழுவின் இயக்குநர் பிரபு சாவ்லா.
மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழின் ஆசிரியர் ஜி.எஸ்.வாசு, ஆசிரியர் குழுவின் இயக்குநர் பிரபு சாவ்லா.

இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி அதிகாரத்தை அளிப்பதன் மூலம் சர்வதேச தரத்தில் கல்வியை அளிக்க முடியும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.
’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் ’திங்க் எடு கான்க்ளேவ் 2017' மாநாடு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் கல்வி மற்றும் உயர்கல்வி சார்ந்த பல்வேறு சிறப்புரைகள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.
தொடக்க விழாவில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியது:
இந்தியாவில் ஆரம்ப கல்வி முதல் முதுநிலை பட்டப்படிப்புகள் வரை 27 கோடி பேர் படித்து வருகின்றனர். 1 முதல் 8 -ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி அளிக்க வேண்டும் என்று தமிழகம், கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் மட்டுமே வலியுறுத்துகின்றன. ஆனால், பல மாநிலங்கள் தேர்வுகளின் மூலம் மாணவர்களுக்கு தேர்ச்சி அல்லது தோல்வியை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.
இந்த நிலையில், 5 -ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சியடையாத மாணவர்களுக்கு 3 மாத கால இடைவெளிக்குப் பின்பு மீண்டும் தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களை அடுத்த வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம். ஆனால் 2 -வது முறையும் தேர்ச்சி பெறாத மாணவர்களின் கல்வித் தரம் உண்மையிலேயே குறைவாக இருக்கும். எனவே, அவர்கள் மீண்டும் அதே வகுப்பில் படிக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆலோசனை அளித்துள்ளது. இந்தத் திட்டத்தை மாநில அரசுகள் விரும்பினால் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது கட்டாயத் தேர்ச்சி முறையையே பின்பற்றலாம். இதுகுறித்த சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
உயர்க்கல்வி: இந்தியாவில் 790 பல்கலைக்கழகங்கள், 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 4 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால், சர்வதேச அளவிலான 200 கல்லூரிகளின் பட்டியலில் பெங்களூரைச் சேர்ந்த இந்திய அறிவியல் நிறுவனம் மட்டுமே இடம்பெற்றுள்ளது.
அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி உரிமம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக இந்திய மேலாண்மை நிறுவனத்துக்கும் (ஐ.ஐ.எம்), அதனைத் தொடர்ந்து பிற பல்கலைக்கழகங்களுக்கும் தன்னாட்சி உரிமம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்கலைக்கழகங்கள் பாடத்திட்டம், செயல்முறைகள் உள்ளிட்டவற்றை தங்களுக்கு ஏற்றாற்போல் உருவாக்கிக் கொள்ள முடியும். அதன் மூலம் சர்வதேச தரத்துக்கு பல்கலைக்கழகங்களை மேம்படுத்த முடியும்.
ஆய்வுக்கு முக்கியத்துவம்: ஆய்வுகளில் ஈடுபட விரும்பும் 500 திறமையான மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் இருந்து மாதம் ரூ.1 லட்சம் அளிக்கப்படும். அதன் மூலம் சிறப்பான ஆய்வுகளில் மாணவர்கள் ஈடுபட ஊக்குவிக்கப்படுவர். மேலும் இணையதளம் மூலம் படிக்கும் வகையில் 2 ஆயிரம் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்றார் அவர்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ’திங்க் எடு கான்க்ளேவ் 2017' மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மனோஜ்குமார் சொந்தாலியா, நடிகர் சரத்குமார்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ’திங்க் எடு கான்க்ளேவ் 2017' மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மனோஜ்குமார் சொந்தாலியா, நடிகர் சரத்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com