தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு: புதிய தலைவராக நீதிபதி மாசிலாமணி நியமனம்

தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்டுள்ள குழுவின் புதிய தலைவராக டி.வி.மாசிலாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
தனியார் பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு: புதிய தலைவராக நீதிபதி மாசிலாமணி நியமனம்

தனியார் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்த அமைக்கப்பட்டுள்ள குழுவின் புதிய தலைவராக டி.வி.மாசிலாமணி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை செயலாளர் த.உதயச்சந்திரன் பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்விக் கட்டண விகிதங்களை ஒழுங்குப்படுத்தவும், கூடுதலாக கட்டண வசூலிலும், நன்கொடை வசூலிலும் ஈடுபடும் பள்ளிகளின் செயல்பாட்டை சட்டரீதியாக எதிர்கொள்ளவும், தமிழ்நாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தும்) சட்டம், கடந்த 2009 -ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது.
அதன்படி, ஓய்வுபெற்ற நீதிபதியை தலைவராகக் கொண்டு இந்தக் குழு ஏற்படுத்தப்பட்டது. பள்ளிக் கல்வி இயக்குநர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர், பொதுப்பணித் துறை இணைத் தலைமை பொறியாளர் (கட்டடங்கள்) ஆகியோர் பதவி வழி உறுப்பினர்களாகவும், பள்ளிக் கல்வித் துறை கூடுதல் செயலாளர் குழுவின் உறுப்பினர் மற்றும் செயலராகவும் இருப்பர்.
இந்தக் குழுவின் தலைவராக நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு பொறுப்பு வகித்து வந்தார். அவரது பதவிக் காலம் 2015 -ஆம் ஆண்டு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து, புதிய தலைவரைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
இந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி டி.வி.மாசிலாமணியை குழுவின் தலைவராக நியமனம் செய்ய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவின் தலைவராக நீதிபதி டி.வி.மாசிலாமணி நியமிக்கப்படுகிறார். மூன்று ஆண்டுகளுக்கு அவர் இந்தப் பதவியை வகிப்பார் என்று தனது உத்தரவில் உதயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com