பத்தாம் வகுப்பு சமூக அறிவியலில் 2 குழப்ப வினாக்கள்: தேர்வுகள் நிறைவு

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் இரண்டு வினாக்கள் குழப்பமாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் இரண்டு வினாக்கள் குழப்பமாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
தமிழகம், புதுவையில் கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் செவ்வாய்க்கிழமையுடன் (மார்ச் 28) நிறைவடைந்தன.
தமிழகம், புதுவையில் கடந்த 8-ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கின. இந்தத் தேர்வுகளை சுமார் 10.40 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்பு கடைசி தேர்வான சமூக அறிவியலில் இரு குழப்பமான வினாக்கள் இருந்தன.
ஒரு மதிப்பெண் பிரிவில் 13-வது வினாவாக இந்திய திட்டக்கமிஷன் தலைவர் யார் என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது. பாடப் புத்தகத்தில் இந்த வினா இருந்தாலும், இந்தியாவின் திட்டக் கமிஷன் அண்மையில் கலைக்கப்பட்டுவிட்ட நிலையில், அதற்கு எந்தப் பதிலை எழுதுவது என்று தெரியாமல் மாணவர்கள் குழப்பமடைந்தனர்.
இருப்பினும் பாடப்புத்தகத்தில் இருப்பதைப் போன்று பிரதமர் என்ற பதிலையே எழுதியிருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். அதேபோல், 15-ஆவது வினாவாக இடம் பெற்றிருந்த பொருத்துக பகுதியில், அதிக மழை பெய்யும் பகுதி என்பதற்கான பதிலாக சிரபுஞ்சி என்று நேரடியாக குறிப்பிடப்படாமல், ஷில்லாங் பீடபூமி என்று சற்று சிந்தித்து பதில் எழுதும் வகையில் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும் மே 19-ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காப்பியடித்த 18 பேர்: பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் காப்பியடித்ததாக 18 பேர் பிடிபட்டனர். ராமநாதபுரம், மதுரை, ஈரோடு, திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் தலா ஒருவர், விழுப்புரம்-8, கடலூர்-5 என மொத்தம் 18 பேர் பிடிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com