பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை (மே 19) வெளியாகவுள்ளன.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை (மே 19) வெளியாகவுள்ளன.
தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 8 -ஆம் தேதி முதல் மார்ச் 30 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவர்கள் (தனித்தேர்வர்கள் உள்பட) எழுதினர்.
இந்த நிலையில், இத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 19) காலை 10 மணிக்கு, சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படவுள்ளன.
தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in  ஆகிய இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன்கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலமும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
தனித்தேர்வர்களுக்கும், ஆன்-லைனில் விண்ணப்பித்தபோது வழங்கிய செல்லிடப்பேசி எண்ணுக்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
மே 25 முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: இதைத்தொடர்ந்து வரும் 25 -ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் தங்களுக்கான தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து
www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அத்துடன், அன்றைய தினமே, மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்தின் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை (மே 17) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com