இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை (மே 19) வெளியாகவுள்ளது.
இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை (மே 19) வெளியாகவுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 8 முதல் 30 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம், புதுச்சேரியில் 12,187 பள்ளிகளிலிருந்து மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவர்கள் எழுதினர்.
வெள்ளிக்கிழமை (மே 19) காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் வெளியிடப்படவுள்ளது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in  ஆகிய இணையதள முகவரிகளில் அறிந்து கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com