தொடர்ந்து 5-ஆவது ஆண்டாக திருச்சி பார்வையற்றோர் பள்ளி 100% தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருச்சி பார்வையற்றோர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 5-ஆவது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் திருச்சி பார்வையற்றோர் மகளிர் மேல்நிலைப்பள்ளி தொடர்ந்து 5-ஆவது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
திருச்சி புத்தூரில் பார்வை குறைபாடுடைய மகளிருக்கான மேல்நிலைப்பள்ளி கடந்த 1956-ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 2016-2017-ஆம் கல்வியாண்டில் 13 மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இதில் 10 மாணவிகள் 500க்கு 400 மதிப்பெண்களுக்கு மேலும், 3 மாணவிகள் 300 மதிப்பெண்களுக்கு மேலும் எடுத்துள்ளனர்.
இதுகுறித்து இப்பள்ளியின் தலைமையாசிரியை ம. தமிழ்ச்செல்வி கூறியது:
எங்களது பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகள் உள்ளன. தற்போது பள்ளியில் 115 பேர் படித்து வருகின்றனர். இங்கு பார்வை குறைபாடுடைய மாணவிகளுக்கு பிரெய்லி முறையில் தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு சிறந்த முறையில் பாடம் நடத்தப்படுகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் எங்களது பள்ளி 5-ஆவது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. இதற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்ட எங்களது ஆசிரியர்களும், நன்கு படிக்கும் எங்களது மாணவிகளுமே காரணம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com