முதுநிலை மருத்துவப் படிப்பு: தனியார் கல்லூரிகளுக்கான கட்டணம் நிர்ணயம்: ரூ.13 லட்சம் வரை பெறலாம்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் தலைமையிலான குழு நிர்ணயித்துள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் தலைமையிலான குழு நிர்ணயித்துள்ளது.
அதன்படி, ரூ.3 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குமான கட்டண நிர்ணயக் குழு நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் தலைமையில் அமைக்கப்பட்டது.
இந்தக் குழு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளின் முதுநிலை படிப்புகள் தொடர்பான செலவு கணக்குகளை தாக்கல் செய்ய கேட்டுக் கொண்டிருந்தது.
அதன் அடிப்படையில் 2017-18 -ஆம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 7 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 7 பல் மருத்துவக் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கட்டணம் எவ்வளவு?: சிறுபான்மை கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ. 3 லட்சம், நிர்வாக இடங்களுக்கு ரூ.11.5 லட்சம், மருத்துவ ஆசிரியர் பணிக்கான முதுநிலை படிப்புகளில் (சர்ய் - ஸ்ரீப்ண்ய்ண்ஸ்ரீஹப்) அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.2.25 லட்சம், நிர்வாக இடங்களுக்கு ரூ.3.25 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.2.5 லட்சம், நிர்வாக இடங்களுக்கு ரூ.3.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் அரசு இடங்களுக்கு ரூ.2.5 லட்சம், நிர்வாக இடங்களுக்கு ரூ.8.5 லட்சம், ஆசிரியர் பணிக்கான முதுநிலை பல் மருத்துப் படிப்பில் அரசு இடங்களுக்கு ரூ.2.25 லட்சம், நிர்வாக இடங்களுக்கு ரூ.3.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை அல்லாத கல்லூரிகளில் முதுநிலை படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.3 லட்சம், நிர்வாக இடங்களுக்கு ரூ.13 லட்சம், ஆசிரியர் பணிக்கான முதுநிலை படிப்புகளில் (சர்ய் - ஸ்ரீப்ண்ய்ண்ஸ்ரீஹப்) அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.2.5 லட்சம், நிர்வாக இடங்களுக்கு ரூ.3.5 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை டிப்ளமோ படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.2.5 லட்சம், நிர்வாக இடங்களுக்கு ரூ.3.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் அரசு இடங்களுக்கு ரூ.2.5 லட்சம், நிர்வாக இடங்களுக்கு ரூ.9.5 லட்சம், ஆசிரியர் பணிக்கான முதுநிலை பல் மருத்துவப் படிப்பில் அரசு இடங்களுக்கு ரூ.2.5 லட்சம், நிர்வாக இடங்களுக்கு ரூ.3.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணத்தில் சேர்க்கைக் கட்டணம், கல்விக் கட்டணம், சிறப்புக் கட்டணம், ஆய்வகம், கணினி, பராமரிப்பு மற்றும் சிறப்பு வசதிகளுக்கான கட்டணம், கூடுதல் கல்வி நடவடிக்கைகள் என அனைத்தும் அடங்கும். இந்த கட்டணங்களைத் தவிர, மாணவரிடம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கட்டணம் வசூலித்தால், குறிப்பிட்டக் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com