சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது

சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கருணை மதிப்பெண் பிரச்னை
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகாது

புதுதில்லி : சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கருணை மதிப்பெண் விவகாரம் காரணமாக இன்று தேர்வு முடிவுகள் வெளியாகாது என தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், சி.பி.எஸ்.இ. 12ஆம் வகுப்பு தேர்வில் கடினமான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கும் முறையை ரத்து செய்வதாக மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ அறிவித்தது.

இதற்கு மாநில அளவில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பிய நிலையில், சிபிஎஸ்இயின் முடிவை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கருணை மதிப்பெண் முறையை ரத்து செய்திருப்பது நியாயமற்ற, பொறுப்பற்ற நடவடிக்கை என கண்டனம் தெரிவித்தனர். இந்த முடிவு நடப்பாண்டே நடைமுறைக்கு வந்தால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால் பழையை முறையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது தொடர்பாக சிபிஎஸ்இ இன்று ஆலோசனை நடத்துகிறது. அதுன் தொடர்ச்சியாக சிபிஎஸ்இ இயக்குநர் சதூர்வேதி, பிற்பகலில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கரை சந்தித்து பேச உள்ளார்.

இதனால் எதிர்பார்த்தபடி இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி உயகர்நீதிமன்ற உத்தரவால் அடுத்த வாரத்திலேயே தேர்வு முடிவுகள் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com