சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.
சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

சென்னை: சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கான, பொதுத்தேர்வு, மார்ச் மாதம் 12 ஆம் தேதி முதல் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடந்தது. தில்லி, சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் இந்த ஆண்டு 10.98 லட்சம் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். சென்னை மண்டலத்தில் இந்த ஆண்டு 61 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு முடிவுகள், மே 19 ஆம் தேதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இன்று மதியம் 12 மணிக்கு சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என, தகவல் வெளியாகி உள்ளது.

தேர்வு முடிவுகளை, www. cbseresults.nic.in, www.cbse.nic.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com