தேசிய ஃபேஷன் டெக்னாலஜி: 250 பேருக்கு பட்டமளிப்பு

தேசிய ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மொத்தம் 250 பேருக்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (அக்.6) பட்டம் வழங்கப்பட்டது.

தேசிய ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் மொத்தம் 250 பேருக்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (அக்.6) பட்டம் வழங்கப்பட்டது.
தேசிய ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனம், முதன்மை வடிவமைப்பு நிறுவனமாக இருக்கிறது. இது, மத்திய ஜவளித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்தியாவில் செயல்படும் ஃபேஷன் டெக்னாலஜி தொடர்பான சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றாக சென்னையில் உள்ள தேசிய ஃபேஷன் டெக்னாலஜி கல்வி நிறுவனம் விளங்குகிறது.
இந்தக் கல்வி நிறுவனத்தின் 6-ஆவது பட்டமளிப்பு விழா, சென்னை தரமணியில் உள்ள தேசிய ஃபேஷன் டெக்னாலஜி நிறுவன அரங்கில் நடைபெற்றது. இதில் மக்களவை உறுப்பினர் வி.சத்தியபாமா, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழக அரசு முதன்மைச் செயலர் பணீந்திர ரெட்டி, தேசிய ஃபேஷன் டெக்னாலஜி நிலையத்தின் இயக்குநர் அனிதா மனோகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது, முதுநிலை ஃபேஷன் மேலாண்மை படிப்பில் 35 பேருக்கும், முதுநிலை ஃபேஷன் தொழில்நுட்பப் படிப்பில் 19 பேருக்கும் பட்டம் வழங்கப்பட்டது. இளநிலைப் படிப்பு பொருத்தவரை, ஃபேஷன் வடிவமைப்பு படிப்பில் 32 பேருக்கும், அசஸ்சோரி வடிவமைப்பு படிப்பில் 27 பேருக்கும், தோல் வடிவமைப்பு படிப்பில் 28 பேருக்கும், பின்னலாடை வடிவமைப்பில் 27 பேருக்கும், ஜவுளி வடிவமைப்பு படிப்பில் 31 பேருக்கும், ஃபேஷன் தொடர்பு படிப்பில் 24 பேருக்கும், ஆடைத் தயாரிப்பு படிப்பில் 27 பேருக்கும் பட்டம் வழங்கப்பட்டது. இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பில் 
மொத்தம் 250 பேருக்கு பட்டம் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com