தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் பி.எட். படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். (பொது) மற்றும் பி.எட். (சிறப்பு கல்வி) படிப்புகளில் சேர தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். (பொது) மற்றும் பி.எட். (சிறப்பு கல்வி) படிப்புகளில் சேர தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
2018 -ஆம் ஆண்டு பி.எட். (பொது) மற்றும் பி.எட். (சிறப்பு கல்வி) படிப்புகளுக்கான விண்ணப்பப் படிவம், விளக்கக் கையேட்டை, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கக் கையேட்டினை பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரியிலிருந்து www.tnou.ac.in  
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதி உள்ளிட்ட விவரங்களையும் அதில் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 044-2430 6600, 2430 6617 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com