கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நிறைவு

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட கலந்தாய்வின் நிறைவில் காலியாக இருந்த 168 இடங்களும் நிரம்பின.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட கலந்தாய்வின் நிறைவில் காலியாக இருந்த 168 இடங்களும் நிரம்பின.
சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சிறப்புப் பிரிவினரில் 4 இடங்கள், தொழிற்கல்வி படித்தவர்களுக்கான இடங்களில் 3 உள்பட மொத்தம் 168 இடங்கள் காலியாகின.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு: இந்த இடங்களுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கலந்தாய்வுக்கு 590 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். 272 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர். கலந்தாய்வின் முடிவில் சிறப்புப் பிரிவினர், தொழிற்கல்வி படித்தோருக்கான இடங்கள் உள்பட அனைத்து இடங்களும் நிரம்பின.
கல்லூரி இடமாற்றம்: இதுதவிர, முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான இடமாற்றக் கலந்தாய்வில் 54 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் 51பேருக்கு கல்லூரி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com